Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#அமித்ஷா - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Wed, 01 Nov 2023 05:26:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’வளர்ந்த பாரதத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்..!’’ அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/#respond Wed, 01 Nov 2023 05:26:56 +0000 https://madrasmurasu.com/?p=7282 ’’நாம் எடுத்த உறுதியையும், வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம். அமிர்தப் பெருவிழாவின் மூலம் வளர்ந்த பாரதத்தின் அமிர்த காலத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்’’ என்று  பிரதமர் நரேந்திர மோடி பேசினார். என் மண் என் தேசம் இயக்கத்தின் அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அமிர்தப் பூங்கா […]

The post ’’வளர்ந்த பாரதத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்..!’’ அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி first appeared on Madras Murasu.

]]>
’’நாம் எடுத்த உறுதியையும், வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம். அமிர்தப் பெருவிழாவின் மூலம் வளர்ந்த பாரதத்தின் அமிர்த காலத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்’’ என்று  பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

என் மண் என் தேசம் இயக்கத்தின் அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட அமிர்தப் பூங்கா மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச் சின்னத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் என் மண் என் தேசம் இயக்கத்தின் அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 31-10-2023 அன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிறைவாகவும் அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் போது, அமிர்தப் பூங்கா மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச் சின்னத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், நாட்டின் இளைஞர்களுக்கான எனது இளைய பாரதம் – எனது பாரதம் (மேரா யுவ பாரத்’ – மை பாரத்) தளத்தை தொடங்கி வைத்தார்.

காந்தியின் தண்டி யாத்திரை

சிறப்பாக செயல்படும் முதல் 3 மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்கள் அல்லது துறைகளுக்கு விடுதலையின் அமிர்தப் பெருவிழா விருதுகளை நரேந்திர மோடி வழங்கினார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்கள் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்து விருதுகளைப் பெற்றன. அமைச்சகங்களைப் பொறுத்தவரை வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை முதல் இடங்களையும் ரயில்வே கல்வி அமைச்சகங்கள் கூட்டமாக 3-ம் இடத்தையும் பிடித்து விருது பெற்றன.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கடமைப் பாதை ஒரு யாகத்தைக் காண்கிறது என்று குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையால் ஈர்க்கப்பட்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழா, 2021 மார்ச் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். சர்தார் படேலின் பிறந்த நாளான 2023 அக்டோபர் 31 ஆன இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிறைவடைவதாக அவர் கூறினார். ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்ற தண்டி யாத்திரையை ஒப்பிட்டு, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவும் மக்களின் பங்கேற்பில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது என்று பிரதமர் மோடி கூறினார். தண்டி யாத்திரை சுதந்திரத்தின் சுடர்களை மீண்டும் உயிர்ப்பித்தது என்று கூறிய அவர், அதேபோல் அமிர்த கால இந்தியாவின் 75 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தின் தீர்மானமாக இது மாறி இருக்கிறது என்று நரேந்திர மோடி கூறினார்.

எனது பாரதம் என்ற ஒரு புதிய தீர்மானம்

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் 2 ஆண்டு கால கொண்டாட்டங்கள் என் மண் என் தேசம் இயக்கத்தின் மூலம் நிறைவடைவதாக அவர் தெரிவித்தார். நினைவுச் சின்னத்தின் அடிக்கல் நாட்டு விழா, இன்றைய வரலாற்று சிறப்புமிக்க அமைப்பை எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறந்த செயல்திறன் கொண்ட விருதுகளைப் பெற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

ஒரு மாபெரும் கொண்டாட்டத்திற்கு விடைகொடுக்கும்போது, (மை பாரத்) எனது பாரதம் என்ற ஒரு புதிய தீர்மானத்தைத் தொடங்குவதாக என்று அவர் சுட்டிக்காட்டினார். 21 ஆம் நூற்றாண்டில் தேசத்தைக் கட்டமைப்பதில் எனது பாரதம் ஒரு பெரிய பங்கை வகிக்கப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஐந்து உறுதிமொழிகள்

இந்திய இளைஞர்களின் கூட்டு வலிமையை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் இளைஞர்கள் ஒவ்வொரு இலக்கையும் எவ்வாறு ஒழுங்கமைத்து அடைய முடியும் என்பதற்கு என் மண் என் தேசம் இயக்கம் ஒரு நேரடி எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எண்ணற்ற இளைஞர்களின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதிலுமிருந்து 8500 அமிர்தக் கலசங்கள் கடமைப் பாதையை அடைந்துள்ளதாகவும், கோடிக்கணக்கான இந்தியர்கள் பஞ்ச் பிரான் எனப்படும் ஐந்து உறுதிமொழிகளை எடுத்து, இணையதளத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளதாகவும் கூறினார்.

கடமையின் உணர்வை நினைவூட்டும்

விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிறைவுக்கு மண் ஏன் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கிய பிரதமர் மோடி, ஒரு கவிஞரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். நாகரிகங்கள் செழித்து வளர்ந்த, மனிதர்கள் முன்னேறிய மண், சிறந்த முத்திரையைக் கொண்டுள்ளது என்று கூறினார். இந்திய மண்ணுக்கு விழிப்புணர்வு உள்ளது என்றும் நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தடுக்கும் ஒரு வாழ்க்கை வடிவம் அதற்கு உள்ளது என்றும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்தியா இன்னும் வலுவாக இருந்தாலும் பல நாகரிகங்கள் எவ்வாறு சரிந்தன என்பதைக் குறிப்பிட்டார். இந்திய மண் ஆன்மீகத்தின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் வீரத்தின் எண்ணற்ற கதைகளை எடுத்துரைத்த அவர், ஷாஹீத் பகத் சிங்கின் பங்களிப்புகளையும் குறிப்பிட்டார். ஒவ்வொரு குடிமகனும் தாய்நாட்டின் மண்ணில் எவ்வாறு ஆழமாக வேரூன்றியுள்ளார் என்பதை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இந்திய மண்ணுக்கான கடன்களை திருப்பிச் செலுத்தாவிட்டால் வாழ்க்கையில் என்ன பலன் என்று கேள்வி எழுப்பினார். தில்லிக்கு வந்துள்ள ஆயிரக்கணக்கான அமிர்தக் கலசத்தின் மண் அனைவருக்கும் கடமையின் உணர்வை நினைவூட்டும் என்றும், வளர்ந்த பாரதத்தின் உறுதியை அடைய ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார். தேசத்தைக் கட்டமைப்பதில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரே பாரதம் உன்னத பாரதம்

நாடு முழுவதிலுமிருந்து மரக்கன்றுகளுடன் நிறுவப்படும் அமிர்தப் பூங்கா, வரும் தலைமுறையினருக்கு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது பற்றிக் கற்பிக்கும் என்று பிரதமர் கூறினார். அனைத்து மாநிலங்களின் மண்ணைச் சேர்ந்த 75 பெண் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள கலைப்படைப்புகள் குறித்து பிரதமர் கூறினார்.

சுமார் 1000 நாள் நடைபெற்ற விடுதலையின் அமிர்தப் பெருவிழா இயக்கத்தின் மிகவும் சாதகமான தாக்கம் இந்தியாவின் இளம் தலைமுறையினர் மீது ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இன்றைய தலைமுறையினர் அடிமைத்தனத்தை அனுபவிக்கவில்லை என்றும், சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர், தாம்தான் என்றும் அவர் கூறினார். அந்நிய ஆட்சியின் போது சுதந்திரத்திற்கான இயக்கம் இல்லாத ஒரு தருணம் கூட இல்லை என்பதையும், எந்தவொரு பிரிவினரும் அல்லது பிராந்தியமும் இதில் இருந்து விடுபடவில்லை என்று அவர் கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தரவுத்தளம்

அமிர்தப் பெருவிழா, ஒரு வகையில், வரலாற்றின் காணாமல் போன பக்கங்களை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்த்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்திய மக்கள் அமிர்தப் பெருவிழாவை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் வெற்றி ஒவ்வொரு இந்தியரின் வெற்றி என்று அவர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் குடும்பங்கள் மற்றும் கிராமங்களின் பங்களிப்பைப் பற்றி மக்கள் அறிந்து கொண்டனர் என்றும் மாவட்ட வாரியாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில்

விடுதலையின் அமிர்தப் பெருவிழாக் காலத்தில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், உலகின் முதல் 5 பொருளாதாரங்களுக்கு இந்தியா முன்னேறியது என்றும் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது எனவும் ஜி20 உச்சிமாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் கூறினார். அதேபோல் ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார். ஏற்றுமதி, விவசாய விளைபொருட்கள், வந்தே பாரத் ரயில் கட்டமைப்பின் விரிவாக்கம், அமிர்த பாரத ரயில் நிலைய இயக்கம் தொடக்கம், நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் நமோ பாரத், 65,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர் நிலைகளை உருவாக்குதல், இந்தியாவின் சொந்த 5ஜி அறிமுகம் மற்றும் விரிவாக்கம், உள்கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்த பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டத்தின் அறிமுகம் போன்றவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பழங்குடியினர் பெருமை தினம்

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின்போது, ராஜபாதையில் இருந்து கடமைப் பாதைக்கான பயணத்தை நாடு நிறைவு செய்தது என்று அவர் கூறினார். அடிமைத்தனத்தின் பல அடையாளங்களை நீக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை, கடற்படைக்குப் புதிய சின்னம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ஊக்கமளிக்கும் பெயர்கள், பழங்குடியினர் பெருமை தினம், சாஹிப்சாதே நினைவாக வீர பாலகர் தின பிரகடனம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 அன்று பிரிவினை துயரத்தை நினைவுகூரும் தினம் போன்றவற்றையும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்குப் புதிய ஆற்றல்

ஒரு விசயத்தின் முடிவு எப்போதுமே புதிய ஒன்றின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார். அமிர்தப் பெருவிழாவின் நிறைவில் எனது பாரதம் (மை பாரத்) தொடங்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், இந்த எனது பாரதம் இந்தியாவின் இளைஞர் சக்தியின் பிரகடனம் என்றார். நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் ஒரே தளத்தில் கொண்டு வரவும், தேசத்தைக் கட்டமைப்பதில் அதிக பங்கேற்பை உறுதிப்படுத்தவும் இது ஒரு சிறந்த தளமாக மாறும் என்று கூறினார். மை பாரத் இணையதளம் தொடங்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், இளைஞர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்கள் இந்தத் தளத்தில் சேர்க்கப்படும் என்றார். இளைஞர்கள் இயன்றவரை இதனுடன் இணைந்து, இந்தியாவுக்குப் புதிய ஆற்றலைக் கொடுக்க வேண்டும் எனவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதி

ஒவ்வொரு குடிமகனின் பொதுவான தீர்மானங்களை நிறைவேற்றுவதே இந்தியாவின் சுதந்திரம் என்று கூறியதோடு, அதை ஒற்றுமையுடன் பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டைக் குறிப்பிட்ட அவர், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது இன்றைய இந்த சிறப்பான நாள் தேசத்தால் நினைவுகூரப்படும் என்றார். நாம் எடுத்த உறுதியையும், வரும் தலைமுறைக்கு நாம் அளித்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். அமிர்தப் பெருவிழாவின் மூலம் வளர்ந்த பாரதத்தின் அமிர்த காலத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி : என் மண் என் தேசம்

என் மண் என் தேசம் இயக்கம் என்பது நாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த வீரர்கள் மற்றும் வீரங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகும். மக்கள் பங்களிப்புடன், இந்த இயக்கம் நாடு முழுவதும் கிராமம், வட்டாரம், நகர்ப்புற உள்ளாட்சி, மாநில மற்றும் தேசிய அளவில் பல நடவடிக்கைகள் மற்றும் விழாக்களை உள்ளடக்கியதாக இருந்தது. உன்னத தியாகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் வகையில் நினைவுச்சின்னம் கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் நடைபெற்றன. நினைவுச் சின்னத்துடன் மக்கள் எடுத்த ‘பஞ்ச பிராண்’ ஐந்து உறுதிமொழிகள் பழங்குடி இனங்களின் மரக்கன்றுகளை நடுதல், அமிர்தப் பூங்காவை உருவாக்குதல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் பாராட்டு விழாக்கள் ஆகியவையும் நடைபெற்றன.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டதன் மூலம் இந்த இயக்கம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட 4 கோடி பஞ்ச் பிராண் உறுதிமொழி ஏற்கப்பட்டு புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 2.36 கோடிக்கும் அதிகமான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அத்துடன் நாடு முழுவதும் 2.63 லட்சம் அமிர்தப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெரிய அமிர்தக் கலசத்தில் ஒரே பாரதம்

என் மண் என் தேசம் இயக்கத்தில் அமிர்தக் கலச யாத்திரையும் அடங்கும். இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், நகர்ப்புறங்களில் உள்ள வார்டுகளிலிருந்தும் மண் மற்றும் அரிசி தானியங்கள் சேகரிக்கப்பட்டன. வட்டார அளவில் அனைத்து கிராமங்களின் மண்ணும் கலக்கப்பட்டு பின்னர் மாநில தலைநகருக்கு அனுப்பப்பட்டது. ஆயிரக்கணக்கான அமிர்தக் கலச யாத்ரிகர்களுடன் மாநில அளவில் இருந்து மண் தேசியத் தலைநகருக்கு அனுப்பப்பட்டது.

30-10-2023 அன்று நடைபெற்ற அமிர்தக் கலச யாத்திரையில், அந்தந்த வட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் கலசத்திலிருந்து மண்ணை ஒரு பெரிய அமிர்தக் கலசத்தில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வில் கலந்தன. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட அமிர்தப் பூங்கா மற்றும் அமிர்தப் பெருவிழா நினைவுச்சின்னம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து கட்டப்படும்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக என் மண் என் தேசம் இயக்கம் திட்டமிடப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் விடுதலையின் அமிர்தப் பெருவிழா 12 மார்ச் 2021 அன்று தொடங்கியது. அதன் பின்னர் நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பொதுமக்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டன.

எனது பாரதம் (மை பாரத்)

மேரா யுவ பாரத் – மை பாரத் (எனது இளைய பாரதம் – எனது பாரதம்) நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு நிலையான முழு அரசுத் தளமாக செயல்பட ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மை பாரத் அரசின் முழு நடைமுறைகளிலும் ஒரு சாத்தியமான செயல்முறையை வழங்க, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இதனால் அவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வளர்ந்த பாரதத்தைக் கட்டமைப்பதற்காகப் பங்களிக்கவும் முடியும். இளைஞர்களை சமூக மாற்றத்துக்கான முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாற ஊக்குவிப்பதும், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக செயல்படுவதும் மை பாரத் (எனது பாரதம்) திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில், ‘மை பாரத்’ (எனது பாரதம்) நாட்டில் இளைஞர்களின் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

The post ’’வளர்ந்த பாரதத்தின் புதிய பயணத்தைத் தொடங்குவோம்..!’’ அமிர்தக் கலச யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/feed/ 0
’’மன் கி பாத் @ 100′ என்ற பிரதமர் மோடியின் புதிய புத்தகம்..!’’ அமித்ஷா புகழாரம் https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-100-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%258d-100-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-100-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae/#respond Wed, 18 Oct 2023 08:13:26 +0000 https://madrasmurasu.com/?p=6984 ’’புதியதாக வெளியிடப்பட்டுள்ள ‘இக்னைட்டிங் கலெக்டிவ் குட்னெஸ்: மன் கி பாத் @ 100’ (Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100) என்ற நூல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நமது தேசம் மேற்கொண்டுள்ள ஒரு தனித்துவமான பயணத்தின் கதையைக் கூறுகிறது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தமது வார்த்தைகளின் […]

The post ’’மன் கி பாத் @ 100′ என்ற பிரதமர் மோடியின் புதிய புத்தகம்..!’’ அமித்ஷா புகழாரம் first appeared on Madras Murasu.

]]>
’’புதியதாக வெளியிடப்பட்டுள்ள ‘இக்னைட்டிங் கலெக்டிவ் குட்னெஸ்: மன் கி பாத் @ 100’ (Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100) என்ற நூல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நமது தேசம் மேற்கொண்டுள்ள ஒரு தனித்துவமான பயணத்தின் கதையைக் கூறுகிறது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தமது வார்த்தைகளின் அபரிமிதமான சக்தியால், நல்ல விஷயங்களை கொண்ட இலக்குகளை நோக்கி தேசத்தை எவ்வாறு அணிதிரட்டினார் என்பதை இந்த நூல் எடுத்துரைப்பதாக கூறியுள்ளார்.

மனதின் குரல் (மன் கி பாத்) 100 வது அத்தியாயம் என்ற மைல் கல்லை கடந்துள்ள நிலையில், தரவுகள் மற்றும் ஆழமான கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம், மாற்றத்திற்கானப் பயணத்தைப் பற்றி சிந்திக்க விரும்பும் இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக அமைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில் இந்த சிறந்த நூலை வெளியிட்டுள்ள நூலின் பதிப்பாளருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

The post ’’மன் கி பாத் @ 100′ என்ற பிரதமர் மோடியின் புதிய புத்தகம்..!’’ அமித்ஷா புகழாரம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-100-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae/feed/ 0
’’உள்ளூர் மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை..!’’ அமைச்சர் அமித்ஷா https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/#respond Sat, 05 Aug 2023 10:13:48 +0000 https://madrasmurasu.com/?p=5793 மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம் புதுதில்லியில் ஆகஸ்ட்  4 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கையின் 12 ஆவது தொகுதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு குடியரசு தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் தனது உரையில், விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி ஐந்து உறுதிமொழிகளை நாட்டின் முன் வைத்துள்ளார். அவற்றில் […]

The post ’’உள்ளூர் மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை..!’’ அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.

]]>
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம் புதுதில்லியில் ஆகஸ்ட்  4 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கையின் 12 ஆவது தொகுதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு குடியரசு தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் தனது உரையில், விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி ஐந்து உறுதிமொழிகளை நாட்டின் முன் வைத்துள்ளார். அவற்றில் இரண்டு பாரம்பரியத்தை மதிப்பது மற்றும் அடிமைத்தனத்தின் அடையாளங்களை அழிப்பதாகும். இவற்றை 100 சதவிகிதம் செயல்படுத்துவதற்கு, அனைத்து இந்திய மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழியும் தங்கள் வலிமையைக் காட்ட வேண்டும் என்று அமித் ஷா கூறினார். மொழியை மதிக்காமல் பாரம்பரியத்தை மதிப்பது முழுமையடையாது என்றும், உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளித்தால் மட்டுமே ஆட்சி மொழியை ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் கூறினார். இந்தி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும் என்று அமித் ஷா கூறினார். ஆட்சிமொழியின் வேகம் மந்தமாக இருந்தாலும், எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல், அதற்கான ஏற்பை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை 10 மொழிகளில் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி முன்முயற்சி எடுத்துள்ளார் என்றும், விரைவில் இந்த படிப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கும் என்றும், அந்த தருணம் உள்ளூர் மொழிகள் மற்றும் அலுவல் மொழிகளின் எழுச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலகளாவிய மேடையில் பெருமையுடன் முன்வைப்பதால், இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கு வேறு எந்த சாதகமான தருணமும் இருக்க முடியாது என்று அவர் கூறினார். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒரு உரை கூட ஆங்கிலத்தில் ஆற்றியதில்லை, அரசாங்கத்தின் அமைச்சர்களும் இந்திய மொழிகளில் உரை நிகழ்த்த முயற்சிக்கின்றனர். இது பல்வேறு மொழிகளை இணைக்கும் இயக்கத்திற்கு நிறைய உத்வேகத்தை அளிக்கிறது.

அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது சட்டம் அல்லது சுற்றறிக்கையிலிருந்து வரவில்லை. மாறாக நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து வருகிறது என்று அமித் ஷா கூறினார். அடிமைக் காலத்திற்குப் பிறகும் இந்திய மொழிகளும் அவற்றின் அகராதிகளும் அப்படியே இருந்தன, இது ஒரு பெரிய சாதனை என்று அவர் கூறினார். நமது நாட்டை ஒன்றிணைக்க மொழிகள் வேலை செய்துள்ளன என்று திரு ஷா கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் ஒன்பது தொகுதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும், 2019 முதல் மூன்று தொகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்த தொகுதிகள் பாடவாரியாக தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், 12 வது தொகுதியின் கருப்பொருள் ‘எளிமைப்படுத்துதல்’ என்றும் அவர் கூறினார். அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த அமித் ஷா, எதிர்காலத்திலும் அலுவல் மொழியை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் குழு தொடர்ந்து பணியாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப், மத்திய உள்துறை இணையமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா, நிஷித் பிரமானிக் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post ’’உள்ளூர் மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை..!’’ அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/feed/ 0
’’பேரிடர் மீட்பு நிதி, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு..!’’ மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae/#respond Sat, 01 Jul 2023 04:45:02 +0000 https://madrasmurasu.com/?p=4621 மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சத்தீஸ்கர், மேகாலயா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் […]

The post ’’பேரிடர் மீட்பு நிதி, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு..!’’ மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு first appeared on Madras Murasu.

]]>
மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சத்தீஸ்கர், மேகாலயா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு ரூ.1,209.60 கோடி 2022-23-ம் நிதியாண்டுக்கான மாநில பேரிடர் மீட்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு மாநில அரசுகள் நடப்பு மழைக்காலத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

The post ’’பேரிடர் மீட்பு நிதி, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு..!’’ மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%ae/feed/ 0
’’பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது..!’’ உள்த்துறை அமைச்சர் அமித்ஷா https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f-%e0%ae%89/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%259f-%25e0%25ae%2589 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f-%e0%ae%89/#respond Wed, 14 Jun 2023 04:37:31 +0000 https://madrasmurasu.com/?p=3830 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் புதுதில்லியில் 13.06.2023 அன்று ஆலோசனை நடத்தினார். சென்னை உள்ளிட்ட 7 பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க ரூ.2,500 கோடி மதிப்பிலான திட்டத்தை  அறிவித்தார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஜூன் 13- ம் தேதி ஆலோசனை […]

The post ’’பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது..!’’ உள்த்துறை அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.

]]>
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் புதுதில்லியில் 13.06.2023 அன்று ஆலோசனை நடத்தினார். சென்னை உள்ளிட்ட 7 பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க ரூ.2,500 கோடி மதிப்பிலான திட்டத்தை  அறிவித்தார்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஜூன் 13- ம் தேதி ஆலோசனை நடத்தினார். 2047-ம் ஆண்டு அடிப்படையிலான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, பேரழிவைத் தாங்கக்கூடிய வல்லமை கொண்ட நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் நாட்டில் பேரழிவு அபாயக் குறைப்பு முறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் அது குறித்து விவாதிக்கும் நோக்கிலும் இன்றைய (13-06-2023) கூட்டம் நடைபெற்றது.

நாட்டில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக ரூ.8,000 கோடி மதிப்பிலான மூன்று முக்கியத் திட்டங்களை இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அறிவித்தார்:

1. மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டம்.

2) மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஏழு அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க ரூ.2,500 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்படும்.

3. 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலச்சரிவு ஆபத்தைத் தணிப்பதற்காக தேசிய நிலச்சரிவு அபாய தணிப்புத் திட்டம் ரூ. 825 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

ஆகிய முக்கிய அறிவிப்புகளை உள்துறை அமைச்சர் வெளியிட்டார்.

பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை எனவும் இந்த இலக்கை அடைவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பேரிடர் மேலாண்மையில் பல மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஆனால் நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று கூறினார். பேரழிவுகளின் தன்மை மாறிவிட்டதாகவும் தற்போது அவற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இவற்றைச் சமாளிக்க தயார்நிலையை நாம் மேலும் அதிகரித்து விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

கொவிட் -19 தொற்றுபாதிப்பு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டில் 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டதையும், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 9 ஆண்டுகளில், பேரிடர் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள், தயார்நிலை அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் புதிய அணுகுமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளக் கூடிய 350 மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் இளைஞர் தன்னார்வலர்களை தயார்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

2005-06 முதல் 2013-14 வரையிலான 9 ஆண்டுகளையும், 2014-15 முதல் 2022-23 வரையிலான 9 ஆண்டுகளையும் ஒப்பிடுகையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். முந்தைய 9 ஆண்டுகளில் ரூ.35,858 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தற்போது அது ரூ.1,04,704 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரூ.354 கோடி செலவில் குறுஞ்செய்தி மூலம் பொது எச்சரிக்கை வழங்கும் நடைமுறையை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பேரிடர் மேலாண்மைத் துறையில் பங்களித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மைக்காக வடகிழக்கு மாநிலங்களில் 271 சதுப்பு நிலங்கள் இஸ்ரோவால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். முந்தைய காலங்களில், இந்திய வானிலை ஆய்வு மையம் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் மழை மற்றும் வெள்ளம் குறித்து மூன்று நாட்கள் முன்கூட்டியே முன்னறிவிப்பு அளித்து வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், இப்போது 5 நாட்களுக்கு முன்பே அந்த முன்னறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இது தயார் நிலைக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்குகிறது என்று கூறிய அவர், அடுத்த ஆண்டுக்குள் 7 நாட்களுக்கு முன்பே முன்னெச்சரிக்கைத் தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வெள்ளம் ஏற்படக்கூடிய 13 முக்கிய நதிகளின் கரைகளில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருநிலை மாற்ற அமைச்சகம் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

8 மாநிலங்களில் உள்ள 87 மாவட்டங்களில் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகக் கூறிய அவர் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மின்னல் காரணமாக உயிர்கள் எதுவும் பறிபோகாத வகையில் மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கடும் குளிர் மற்றும் மூடுபனி போன்றவை குறித்த மாநில அளவிலான செயல் திட்டத்தை மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

இக்கூட்டத்தில், பேரிடர் தடுப்பு முன்னேற்பாடு, அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியைப் பயன்படுத்துதல், மாநில பேரிடர் மீட்புப் படைகள் (எஸ்.டி.எம்.ஏ), மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்.டி.எம்.ஏ), மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை நியமித்தல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், பேரிடர் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ’’பேரழிவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது..!’’ உள்த்துறை அமைச்சர் அமித்ஷா first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f-%e0%ae%89/feed/ 0
‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%258e https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e/#respond Mon, 12 Jun 2023 06:52:26 +0000 https://madrasmurasu.com/?p=3740 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (12.6.2023) தண்ணீர் திறந்து வைத்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. தமிழ்நாடு அரசு இன்று அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர் நலன் காக்க நம்முடைய அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும் என்று மீண்டும் ஒருமுறை […]

The post ‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி first appeared on Madras Murasu.

]]>
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (12.6.2023) தண்ணீர் திறந்து வைத்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

தமிழ்நாடு அரசு இன்று அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர் நலன் காக்க நம்முடைய அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும் என்று மீண்டும் ஒருமுறை உங்கள் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக பெயர் வைக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?

முதலமைச்சர்: தொடர்ந்து நாங்கள் இதற்கு விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இருந்தாலும் இப்போதும் கேட்கிறீர்கள். இதுமாதிரி நடந்து கொள்வது அதிமுக-வின் கலை, அவர்கள் பாணி தான் இது. சென்னையில் திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம். ஜெயலலிதா அம்மையார் அவர்களது பெயரை வைத்துக்கொண்டு அதை திறந்து வைத்தார்கள், நாங்கள் அதற்குக் கவலைப்படவில்லை.

அதே மாதிரி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தை திமுக ஆட்சியில்தான் புதிதாக கட்டினோம். அதை ஆட்சிக்கு வந்து அதிமுக என்ன செய்தது? அதை அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தது. சென்னையில் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் தான் தொடங்கி வைத்தோம். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் துணை முதலமைச்சராக இருந்தேன். நானே ஜப்பான் நாட்டிற்குச் சென்று அங்கே நிதி உதவியைப் பெற்று அதன் மூலமாகத்தான் ஒன்றிய அரசினுடைய உதவியைப் பெற்று அதை நாம் தொடங்கி வைத்தோம். அன்றைக்கு அதை எதிர்த்தவர்கள் யார் என்று கேட்டீர்களானால், மறைந்த அம்மையார் ஜெயலலிதா . முதலமைச்சராக இருந்தபோது அதை அவர்கள் எதிர்த்தார்கள், மெட்ரோ தேவையில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். பின்னர் அதன் திறப்புவிழாவின் போது தன்னுடைய பெயரை பொறித்துக்கொண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்கள்.

அதே மாதிரி கோட்டூர்புரத்தில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திமுக ஆட்சியில்தான் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் கட்டித் திறந்து வைத்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதை பாழ்படுத்தவேண்டும் என்று அதை எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி, போராடி அதை நிலைநாட்டி இருக்கிறோம். இப்படியே சொல்லிக்கொண்டு சென்றால், அந்தப் பட்டியல் இன்னும் போகும். இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன். இதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதேபோல, அம்மா உணவகம். ஆட்சிக்கு வந்தவுடன் அதை மூடிவிடுவார்கள், மூடிவிடுவார்கள் என்று திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரமே செய்தார்கள். அதை இதுவரைக்கும் மூடவில்லை, அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால், பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பிள்ளைகளின் புத்தகப்பையில் அவர்கள் ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் படமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படமும் போட்டு அன்றைக்கு மாணவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். அதில் நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் சிறிது மீதம் வந்திருந்தது. அந்த நேரத்தில் அரசு அதிகாரிகளெல்லாம் என்னிடத்தில் வந்து கேட்டார்கள், இதை மாற்றி விடலாம். ஏனென்றால், ஏற்கனவே இருந்த முதலமைச்சர் படம் இருக்கிறது, எனவே உங்கள் படத்தை போடுகிறோம் என்று சொன்னார்கள். யார் படமும் போடவேண்டாம், இருப்பது அப்படியே இருக்கட்டும். இதை மாற்றினீர்கள் என்றால், பல கோடி ரூபாய் இழப்பு வரும், அந்த இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது, எனவே அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவன்தான் நான்.
எனவே இதையெல்லாம், இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கேள்வி: அமித் ஷா தமிழ்நாடு வந்தார், இரண்டு முறை தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதை திமுக தான் தடுத்தது என்று கூறியிருக்கிறாரே…

முதலமைச்சர்: அதை வெளிப்படையாக அவர் சொன்னாரென்றால், அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்லமுடியும். அதனால் அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. இருந்தாலும், தமிழரை பிரதமராக ஆக்கப் போகிறேன் என்று சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024-ல் பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார்கள், முருகன் இருக்கிறார், ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: கர்நாடக அரசு மேதாது அணை கட்டுவதற்கு மும்முரமாக இருக்கிறார்கள், அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

முதலமைச்சர்: அதை எதிர்ப்பதில் நாங்களும் மும்முரமாக இருக்கிறோம்.

கேள்வி: கடந்த 50 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சரபங்கா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து…
முதலமைச்சர் : அது ஆய்வில் இருக்கிறது.

கேள்வி: தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பாஜக அரசு கொடுத்திருப்பதாக அமித் ஷா ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்…
முதலமைச்சர்: நான் சேலத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தெளிவாக பேசியிருக்கிறேன். அதாவது, பாஜக ஆட்சி இருந்தபோது, எந்த சிறப்புத் திட்டமும் இந்த ஒன்பது வருடங்களில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த திமுக அப்போது ஆட்சியில் இருந்த திரு. மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அவர் அதைப் படிக்கவில்லையா? இல்லை அதைப் படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என்பதுதான் எனக்கு சந்தேகம். பாஜக-வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேள்வி கேட்டேன். அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்றைக்கு தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததை சொல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது.

இதேபோல தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்புக்களை கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் என் கேள்வி. எனவே எந்தத் திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டிருப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை.

இன்றைக்கு ஜிஎஸ்டி-யில் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசிற்கு நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜிஎஸ்டி-யில் தமிழ்நாட்டிலிருந்து அதிகமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்குத் தான் இன்றைக்கு ஒன்றிய அரசு நிதி கொடுப்பதில் மிகவும் குறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறது, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்துக் கேட்டேன்.

அதேபோல, மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் அதற்கு உறுதி கொடுத்தார், அறிவித்தார்கள். அது என்ன ஆகியது? பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் பலமுறை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். வந்தபோது, பணி 50 சதவீதம் முடிந்துவிட்டது, 75 சதவீதம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றாரே தவிர இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. அதையெல்லாம் மூடி மறைத்து அவர் பேசிவிட்டுச் சென்றிருக்கிறாரே தவிர, நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை.

கேள்வி: டாஸ்மாக்கில் பத்து ரூபாய் ஊழல் புகார் குறித்து…
முதலமைச்சர்: அதெல்லாம் திட்டமிட்டு செய்யக்கூடிய பிரச்சாரங்கள்.

கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவராததற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறாரே?
முதலமைச்சர்: திமுக ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் என்று ஒரு மருத்துவமனை தேவையே படவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் அதிக அளவில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், இதை அறிவித்தது யார்? திமுக-வா அறிவித்தது, அறிவித்தது ஒன்றிய அரசு. அவர்கள் தான் இதைச் செய்ய வேண்டும். இந்தக் கேள்வியைக் அவர் கேட்பதே ஒரு பொறுப்புள்ள உள்துறை அமைச்சருக்கு அழகல்ல.

கேள்வி: திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் நடந்தது என்று சொல்கிறார்கள்…
முதலமைச்சர்: ரஃபேல் ஊழல், அதானி ஊழல். இன்றைக்கு இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது. முதலில் அதற்கு பதில் சொல்லட்டும், அதற்குப் பின் இதைப் பேசுவோம்.

கேள்வி: அத்திக்கடவு – அவினாசி திட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது.
முதலமைச்சர்: முடியக்கூடிய நிலையில் இருக்கிறது, விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

The post ‘’நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை..!’’ சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e/feed/ 0