Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#அதிமுக - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Tue, 26 Sep 2023 03:33:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’பாஜகவை அசிங்கப்படுத்திய அதிமுக..!’’ கடுப்பேற்றும் கூட்டணி முறிவு அறிக்கை https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Tue, 26 Sep 2023 03:33:49 +0000 https://madrasmurasu.com/?p=6547 மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியை முறித்து முடிவெடுத்து அறிவித்தது அதிமுக. இதையடுத்து அதிமுக வெளியிட்ட அறிக்கை பாஜக-வை அசிங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை கடுப்பேற்றும் வகையில், ‘நன்றி மீண்டும் வராதீர்கள் என்று கடுப்பேற்றும் வகையில் கிண்டலித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து […]

The post ’’பாஜகவை அசிங்கப்படுத்திய அதிமுக..!’’ கடுப்பேற்றும் கூட்டணி முறிவு அறிக்கை first appeared on Madras Murasu.

]]>
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியை முறித்து முடிவெடுத்து அறிவித்தது அதிமுக. இதையடுத்து அதிமுக வெளியிட்ட அறிக்கை பாஜக-வை அசிங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை கடுப்பேற்றும் வகையில், ‘நன்றி மீண்டும் வராதீர்கள் என்று கடுப்பேற்றும் வகையில் கிண்டலித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொண்டர்களும் கடுமையான எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். அதன்பின்னர் அதிமுக-பாஜக இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாகி சூடேற்றியது.

அதிமுக தலைமையில் புதிய கூட்டணி

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று, அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதத்திற்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கே.பி.முனுசாமி ஆவேசம்

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, “அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது. இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும். ஓராண்டாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பாஜக விமர்சித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பற்றியும் அவதூறாக பாஜக மாநில தலைமை விமர்சித்து வருகிறது. அதிமுக பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் பாஜக மாநில தலைமை பேசியுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கு விருப்பத்திற்கு உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறிக்கிறோம்” என்றார்.

பாஜக கூட்டணியில் இல்லை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அக்கட்சி தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில், ‘’மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் “புரட்சித் தமிழர்” திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. #நன்றி_மீண்டும்வராதீர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம்

கூட்டணி முறிவு அறிவிப்பு என்பதை விட, அதிமுக வெளியிட்ட, ‘நன்றி மீண்டும் வராதீர்கள்’’ என்ற அறிவிப்பு 10 அண்டுகளாக நாட்டை ஆண்டு வரும் பாஜகவையும் அதன் தலைவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் தொடர்சியாகவே, எப்போதுமே தலைமறைவாக, தன்னை வெளியே காட்டிக் கொள்ளாமல் கட்சி நிர்வாகத்தை கவனிக்கும் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், ‘’கூட்டணி குறித்து யாரும் பேசக் கூடாது’’ என்று வாய்பூட்டு போட்டுள்ளார். ஆனாலும் அதிமுகவினர் போலவே, பாஜகவினரும் பட்டாசு வெடித்து அதிமுகவை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால், இருகட்சிகளுக்கு இடையிலான விரிசல் சரிசெய்ய முடியாத அளவுக்கு போய்க்கொண்டிருப்பதாக தெரிகிறது.

இரும்பு மனிதரா எடப்பாடி பழனிசாமி?

தேசியத்தலைவர்களால் இரும்பு பெண்மணி என்று பார்க்கப்பட்ட ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக, எடுத்துள்ள முடிவும் அனைத்து இந்திய அளவில் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. இரும்பு மனிதராக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று கட்சியினர் வெகுவாக புகழ்ந்து பேசி வருகின்றனர். தேர்தல் வெற்றிகளைப் பொருத்தே எடப்பாடி பழனிசாமி இரும்பு மனிதரா? என்பது தெரியும்.

The post ’’பாஜகவை அசிங்கப்படுத்திய அதிமுக..!’’ கடுப்பேற்றும் கூட்டணி முறிவு அறிக்கை first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
’’அதிமுக – பாஜக தீடீர் சமரசமா..?’’ இருதரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் தொண்டர்கள் குழுப்பம் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25ae%2595-%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25ae%25b0 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0/#respond Thu, 21 Sep 2023 12:27:35 +0000 https://madrasmurasu.com/?p=6474 பேரறிஞர் அண்ணா பற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தரப்பில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த 17-ந்தேதி அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இது அ.தி.மு.க.வினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்ணாமலை பேசிய வீடியோ பதிவை முழுமையாக பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கோபம் அடைந்தார். […]

The post ’’அதிமுக – பாஜக தீடீர் சமரசமா..?’’ இருதரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் தொண்டர்கள் குழுப்பம் first appeared on Madras Murasu.

]]>
பேரறிஞர் அண்ணா பற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தரப்பில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த 17-ந்தேதி அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது அ.தி.மு.க.வினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்ணாமலை பேசிய வீடியோ பதிவை முழுமையாக பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு அதிரடியாக பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் “பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எல்லை மீறி செல்கிறார். அவரிடம் அரசியல் தலைவருக்கான பக்குவம் இல்லை. அவர் தலைவராக இருக்கும்வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது. இப்போது எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதற்கு பாஜக துணைத் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். அ.தி.மு.க. தலைமையை விமர்சித்தும், தங்களால் தனியாக நிற்கவும் முடியும் என்றும் ஆவேசமாக பதிவிட்டனர். இது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை மேலும் பிளவுப்படுத்தும் வகையில் இருந்தது.

அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பா.ஜ.க. மீது தொடர் தாக்குதலை நடத்தினார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பித்தனர். இதை அறிந்த பாரதிய ஜனதா மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க.வுடன் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.வை விமர்சிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டணி தொடர்பாக இனி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அமைதியாகி விட்டனர்.

இதனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சற்று இறங்கி வந்துள்ளனர். பாரதிய ஜனதாவுடன் இப்போதைக்கு மோதல் போக்கை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஒருமித்த முடிவை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேவையற்ற கருத்துக்களை கூறி சர்ச்சையை அதிகரிக்க வேண்டாம் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மட்டும் நாகரிகமாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு ஒன்றை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக பற்றியோ, கூட்டணி பற்றியோ அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் விமர்சனம் செய்து பேசக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

பொதுவெளியில் பாஜக பற்றி பேசினால் குழப்பம் ஏற்படுத்தும் என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார். இதனால் அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் கட்சி தொண்டர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார்கள். இந்த திடீர் அமைதி குறித்து இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே வரவேற்பும் எதிர்ப்பும் நிலவுகிறது. கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்கள் ’சண்டையா, நட்பா’ என்ற குழப்பத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

The post ’’அதிமுக – பாஜக தீடீர் சமரசமா..?’’ இருதரப்பு தலைவர்களும் அமைதி காப்பதால் தொண்டர்கள் குழுப்பம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0/feed/ 0
’’கல்விக் கடன் ரத்து செய்ய வேண்டும்..!’’ எடப்பாடி பழனிசாமி https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/#respond Wed, 20 Sep 2023 05:27:56 +0000 https://madrasmurasu.com/?p=6406 ”2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழகக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திரும்பச் செலுத்த இயலாவிட்டால், 30 […]

The post ’’கல்விக் கடன் ரத்து செய்ய வேண்டும்..!’’ எடப்பாடி பழனிசாமி first appeared on Madras Murasu.

]]>
”2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழகக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திரும்பச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும்’ என தேர்தல் வாக்குறுதியளித்த, திமுக அரசின் முதலமைச்சரே மாணவர்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த ஏதேனும் முயற்சிகளை செய்தீர்களா?

நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதை அறிந்திருந்தும், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது தொடங்கி, கல்விக் கடன் ரத்து செய்வது வரை, மாணவர்களை ஏமாற்றி அவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்கிறது திமுக அரசு.

2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்.

நூறு சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை அறிக்கை மூலம் திமுக அரசின் முதலமைச்சர் அறிவிப்பாரா ? சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?

The post ’’கல்விக் கடன் ரத்து செய்ய வேண்டும்..!’’ எடப்பாடி பழனிசாமி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/feed/ 0
’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf-%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/#respond Tue, 19 Sep 2023 04:50:16 +0000 https://madrasmurasu.com/?p=6371 அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேச்சுக்கள் அதிமுகவினரை பொங்கி எழ வைத்துள்ளது. எனவே, அதிரடி பேட்டி அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அந்த பேட்டியின் முழு விபரம் வருமாறு: இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்த அண்ணாமலையை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். […]

The post ’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் first appeared on Madras Murasu.

]]>
அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேச்சுக்கள் அதிமுகவினரை பொங்கி எழ வைத்துள்ளது. எனவே, அதிரடி பேட்டி அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அந்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்த அண்ணாமலையை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். கடுமையான அளவுக்கு அம்மாவை விமர்சனம் செய்து எங்களுடைய கண்டனத்தை தெரிவித்த பிறகு ஏதே அண்ணாமலை திருந்திவிட்டார் என்ற வகையில் பார்க்கும்போது தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்திவருகிறார். பிஜேபி என்பதைவிட அண்ணாமலை என்கின்ற பிம்பம் தமிழகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக செயல்படுகிறார். அம்மாவை விமர்சனம் செய்தபிறகு எங்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டு அதன்பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார்.

நான் அம்மாவை பெரிதும் மதிக்கின்றேன். நான் அம்மாவை அதுபோல சொல்லவில்லை என்ற தகவலை சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு அதன்பிறகு அண்ணா குறித்து பேசுகிறார். அண்ணாவின் வரலாறு என்ன? அண்ணா உலகம் முழுவதும் போற்றக்கூடிய மிகப்பெரிய அறிஞர். எந்த கேள்வி எப்போது கேட்டாலும், எந்த மொழியில் கேட்டாலும் பதில் சொல்லக்கூடியவர், பன்மொழி தன்மை வாய்ந்தவர். முதலமைச்சராக வந்து தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுசென்றவர். நாங்கள் தெய்வமாக வணங்கக்கூடியவர். எங்கள் கழகமே அண்ணாவின் பெயரை தாங்கி இருக்கும் நிலையில், அண்ணாவைப்பற்றி சிறுமைப்படுத்தும் வகையிலே அவர் கூறிய அந்த கருத்துக்கு, கடுமையான அளவுக்கு கண்டனத்தை தெரிவித்த நிலையில் அதற்கும் திருந்தாமல், திரும்பவும் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக நேற்றைய தினம் பேட்டியில் பெரியார் குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற செயலை தன்மானம் உள்ள கழக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

சிட்டு குருவிக்கு பட்டை கட்டினால் அது திமிரு பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்ட பாத்திரங்களில் வந்து டொக், டொக் என்று கொத்தும். அது சிட்டு குருவிக்கே உள்ள புத்தி அது. அதுபோல தகுதிக்கு மீறிய பதவி. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எதற்கு விருப்ப ஓய்வு பெற்றார் என்று எனக்கு தெரியாது. அது குறித்து கிளறினால்தான் இவரைப்பற்றி தெரியும். அரசியல் தலைவருக்கே லாயக்கு இல்லாத, ஒரு பாஜக தலைவருக்கு லாயக்கு இல்லாத, ஒரு சிறுமை புத்தி கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார். கழகம் என்பது ஒரு சிங்க கூட்டம். அந்த சிங்க கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது.

ஊளையிடுகின்ற சிறுநரி தனியாக சென்று நிற்கட்டும். நோட்டாகவுக்கு கீழே அண்ணாலை ஒட்டு வாங்குவரே தவிர நோட்டாவை தாண்ட மாட்டார். அப்படிதான் உள்ளது உங்களின் செல்வாக்கு.நீங்கள் பெரியார் குறித்து பேசுகிறீர்கள்.பெரியார் குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. கழகப் பொதுசெயலாளர் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. அம்மா குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. புரட்சித்தலைவர் குறித்து பேச என்ன தகுதி உள்ளது. தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அண்ணாலை வாழ்க என்று சொல்லவேண்டுமாம். தோழமை கட்சியை, கூட்டணி கட்சியை அதனை விமர்ச்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று சொன்னால் நிச்சயமாக கழக தொண்டன் ஏற்றுக்கொள்ள மாட்டான். பல முறை எச்சரிக்கை அளித்தோம். பேச்சை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்தோம்.

இனிமேல் எங்கள் கழக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். நீங்கள் ஒரு கருத்தை தெரிவித்தால் ஓராயிரம் கருத்து அண்ணாமலை குறித்து, அவரின் சிறுமைபுத்தி குறித்து, எதிர்க்கருத்து உங்களுக்கு பதிலடியாக வரும். இது குறித்து மேலிடத்திலும் சொன்னோம். நாங்கள் உங்கள் கூட்டணியில் இருக்கிறோம் இவரை திருத்துங்கள் என்று தெரிவித்தோம். கூட்டணி கட்சியில் இருந்துகொண்டு இப்படி பேசினால் கட்சியினர் எப்படி தேர்தல் வேலை செய்வார்கள். கழகத்தின் கூட்டணியை பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உங்களை சுமக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது.

யார் மீதாவது சுமந்துதான் நீங்கள் போகவேண்டும். உங்களுக்கு கால்களே கிடையாது. பாஜக இங்கே கால் ஊன்ற முடியாது. அப்படிப்பட்ட நிலைமை உள்ளது. உங்கள் வாக்கு வங்கி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. தன்மானம் உள்ள தொண்டன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இது குறித்து நாங்கள் டெல்லி மேலிடத்திலும் சொல்லிவிட்டோம். கண்டித்து வையுங்கள் என்று சொன்னால், திரும்ப திரும்ப இப்படி பேசினால் இனியும் பொருத்து கொள்வதாக இல்லை. கழக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். இதுதான் எங்களுடைய நிலைபாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால் கடுமையான விமர்ச்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும். துப்பாக்கி, துப்பாக்கி என்கிறார். அவரின் புகழை பாடுவதைதான் வேலையாக வைத்துவருகிறார். அவர் சார்ந்த கட்சியை வளர்ப்பது அவர் வேலையாக இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

கேள்வி: இது உங்களின் தனிப்பட்ட கருத்தா, கட்சியின் கருத்தா?

பதில்: என்றைக்கு தனிப்பட்ட கருத்தாக நான் பேசியது கிடையாது. கட்சி என்ன முடிவு எடுக்கின்றதே அது குறித்துதான் பேசுவேன். கட்சியின் முடிவு என்பது இப்போதைக்கு கூட்டணி கிடையாது. பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலே கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பிறகும் அண்ணாவை விமர்சனம் செய்வது, பெரியாரை விமர்சனம் செய்வது, கழக பொதுச்செயலாளரை விமர்சனம் செய்கிறார் என்றால் எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.

அண்ணாலை விமர்சனம் செய்வதை நாங்கள் டெல்லி தலைமையிடம் சொல்லியிருக்கின்றோம். மாநில தலைவர்களாக எவ்வளவே தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்போது இதுபோன்ற பிரச்சனை இருந்ததா? ஆதி காலத்தில் நடைபெற்றதை இப்போது தேவையற்ற முறையில் பேசி வருகிறார். இவர் என்ன தொல்லியல் துறையை சேந்தவரா? தொல்லியல் துறையில் இருக்கவேண்டியவர். தகுதி இல்லாத ஒரு தலைவர். நான்கு பேர் சேர்ந்து தலைவர் என்று கத்திவிட்டால் தலை கனம் ஏறிவிடுகிறது. அந்த தலை கனம்தான் இதுபோன்ற முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

கேள்வி: தேசிய தலைவர்கள் ஆதரவோடுதான் அவர் இப்படி பேசுகிறார் என்று நினைக்கின்றீர்களா?

பதில்: எங்களுக்கு இதனை ஆராய்ச்சி செய்யவேண்டிய வேலை இல்லை. எங்களின் முன்னோடிகளை விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விமர்சனத்திற்கு தக்க பதிலடியை எங்கள் கட்சியினர் கண்டிப்பாக கொடுப்பார்கள். மேலே சொல்லியும் இவர் அடங்கவில்லை என்றால் மேலே சொல்லிதான் நடக்கிறது என்றுதானே அர்த்தம். இதுபோன்ற நிலையில் எங்களுக்கு இழப்பு இல்லை. உங்களுக்குதான் இழப்பு. பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ். அனைவரையும் அரவணைத்து போகவேண்டும் என்பதால் டெல்லியில் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தோம். எதற்கும் ஒரு எல்லை உள்ளது இல்லையா. எப்படி தொண்டர்கள் வேலை செய்வார்கள். 2024 ல் எப்படி தேர்தல் வேலை செய்ய முடியும். அவர்களால் ஒன்றும் கிழிக்க முடியாது.

அண்ணாலையின் பேச்சை அவர்களின் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் இன்றைக்கு சந்தோஷப்படுவார்கள். ஏன் என்றால் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம் கட்டிவிட்டு ஒன் மேன் ஷோ வா இருந்தார். தற்போது தனி மரமாக நிற்பார். எந்த பூச்சாண்டிக்கு கழகம் பயப்படாது. கோப்பு, பைல் என்று நாங்கள் எத்தனையோ பார்த்துவிட்டோம். நீங்கள் கோப்பு என்ன என்று தெரியாத ஆள். அவர் தனியாக நின்று ஓட்டு வாங்க முடியுமா? நோட்டாவைதான் அவர் வெற்றி பெற முடியும்.அண்ணாமலையின் விமர்சனங்களை எங்கள் கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தோழமையில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மதிக்காத ஒரு நிலையில் கூட்டணியில் நீடிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஏற்கனவே இதுபோன்று பேசிகொண்டிருந்தால் கூட்டணி குறித்து மறுபரீசிலனை செய்யவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டோம். இப்போது பரிசீலனை செய்து அறிவித்துவிட்டோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

The post ’’அண்ணாமலை பற்றி டி.ஜெயக்குமார் சொன்னது என்ன..?’’ அதிரடி சரவெடி பேட்டி முழு விபரம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95/feed/ 0
’’விவசாயிகள் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்..!’’ எடப்பாடிக்கு எம்.ஆர்.கே பதில் https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25af%258b%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95/#respond Tue, 12 Sep 2023 06:43:56 +0000 https://madrasmurasu.com/?p=6247 சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி 09.09.2023 நாளிட்ட அறிக்கைக்கு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு அறிக்கை:  கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மஞ்சள் அழுகல் நோய், வேர்ப்புழு தாக்குதல் மற்றும் காட்டுப்பன்றி தொல்லையால் கரும்பு பயிர்கள் பாதிப்படைந்து விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் பல சர்க்கரை ஆலைகள் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதால் கரும்பு பயிரிட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி விவரம் […]

The post ’’விவசாயிகள் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்..!’’ எடப்பாடிக்கு எம்.ஆர்.கே பதில் first appeared on Madras Murasu.

]]>
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி 09.09.2023 நாளிட்ட அறிக்கைக்கு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு அறிக்கை: 

கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மஞ்சள் அழுகல் நோய், வேர்ப்புழு தாக்குதல் மற்றும் காட்டுப்பன்றி தொல்லையால் கரும்பு பயிர்கள் பாதிப்படைந்து விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் பல சர்க்கரை ஆலைகள் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதால் கரும்பு பயிரிட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி விவரம் தெரியாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

2011 வரை கலைஞர் தலைமையிலான அரசில் தமிழ்நாட்டின் கரும்பு பயிரிடும் பரப்பின் அளவு 2.24 லட்சம் எக்டேராக இருந்தது. ஆனால், பின்னர் வந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கரும்பு பரப்பளவு கிட்டதட்ட 1.29 லட்சம் எக்டேர் குறைந்து, வெறும் 95 ஆயிரமாக மட்டுமே இருந்தது. மேலும், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் 1.50 லட்சமாக இருந்ததை 91 ஆயிரமாக குறைக்கப்பட்டதே நிர்வாக திறனற்ற எதிர்கட்சி தலைவர் ஆட்சியில்தான் என்பதை சுலபமாக மறந்து அறிக்கை விடுகிறார். ஆனால் 2021ல் திமுக ஆட்சி ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட கரும்பு பரப்பளவு 1.50 லட்சம் எக்டேராக உயர்த்தியது தற்போதைய திமுக ஆட்சியில் தான் என்பதை ஏனோ அறிக்கை திலகத்திற்கு புரியவில்லை.

கரும்பு விவசாயிகளுக்கு 2015-2016 அரவை பருவம் முதல் 2019-2020 அரவைப் பருவம் வரை, கரும்பு விலை உயர்த்தப்படாமல் ஒரே விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 2,750 மட்டுமே அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கரும்பு விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது விவசாயிகள் டன் ஒன்றுக்கு ரூபாய் 3,016.25 பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கரும்பு விவசாயிகளின் உற்பத்திக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் வழிவகை கடனாக சுமார் ரூபாய் 800 கோடி அளவிற்கு தமிழக அரசு நேரடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிட சர்க்கரை ஆலைகளுக்கு நிதி உதவியும் வழங்கி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2021 வரை ரூ.419 கோடி அளவில் கரும்பு விவசாயிகளின் நிலுவைப் பணம் பட்டுவாடா செய்யாமல் கரும்பு விவசாயிகளை தவிக்க விட்டவர்தான் தற்போது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை பற்றி குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலுவைத் தொகை முழுவதையும் 2021-22 பருவம் வரை அனைத்து கூட்டுறவு, பொது மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது என்பது ஆட்சியிலிருந்து இறங்கும் போது கஜானாவையே சுரண்டிவிட்டு சென்ற கல்லாபெட்டி எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நடப்பு பருவத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டுமே கரும்பு விவசாயிகளுக்கு ரூ.17 கோடி அளவிற்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். இது குறித்தும் இத்துறையினால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் கலைஞர் ஆட்சியில் 2010ஆம் ஆண்டு சுமார் ரூ.1,240 கோடி மதிப்பீட்டில் 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு அறிவிக்கப்பட்ட இணை மின் திட்டம் மற்றும் ஆலை நவீனமயமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக அரசின் திறனற்ற ஆட்சியின் காரணமாக திட்டம் முடியாமலேயே 90 சதவீதம் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கி, 2021வரை இத்திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் இன்றி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.1,400 கோடி அளவில் கூடுதல் வட்டி சுமையை விட்டுவிட்டு சென்றதுதான் எடப்பாடி ஆட்சியின் மற்றும் ஒரு சாதனை.

2021ல் சர்க்கரை ஆலைகளின் 8.97 சதவீதமாக இருந்த கரும்பு பிழிதிறன் 9.33 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ரூ.100 கோடி அளவிற்கு கூடுதல் வருவாய் கிடைத்திட இத்துறை மூலம் முதலமைச்சர்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கரும்பு பயிரிடும் விவசாயிகள் மண்வளம் குன்றிய நிலையில் போதிய சத்து இல்லாததன் காரணமாக மஞ்சள் அழுகல் நோய் (Pokkah Boeng) வேர்புழு நோய் போன்ற நோய்கள் தாக்குவது இயற்கையானது ஆகும். பொதுவாக மஞ்சள் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட வயல்களை கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகள் மூலம் வயல் ஆய்வு செய்யப்பட்டு, கடைபிடிக்கப்பட வேண்டிய நோய் கட்டுப்பாட்டு முறைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் அதிகமாக மஞ்சள் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட கரும்பு வயல்கள் கண்டறியப்பட்டு, அங்குள்ள கரும்பினை அவசர கால ஏற்பாடாக அருகில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்ப உத்தரவு வழங்கப்பட்டு விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், பூச்சி தாக்குதல் மற்றும் மஞ்சள் அழுகல் நோய் தாக்குதல் ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கரும்பு இனபெருக்க நிறுவனம், கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூலம் கருத்தரங்குகள், பயிற்சிகள், வயல் விழாக்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கரும்பு பயிர் காட்டுப்பன்றியால் பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்கும் பொருட்டு கரும்பு விவசாயிகளுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் தயார் செய்யப்படும் காட்டுப்பன்றி விரட்டும் திரவம் கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

நிர்வாக திறனற்ற எடப்பாடி ஆட்சியில் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. புதிய நியமனங்கள் ஏதுமில்லை. 2018க்கு பிறகு ஊதிய பிரச்சனையும் கண்டு கொள்ளப்படவில்லை. கருணை அடிப்படையில் நியமனம் நடைபெறாமல் இருந்து, இதனால் கரும்பு சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறைந்து போனது இவர் கண்ணில் 2021 வரை படவில்லை. சர்க்கரை ஆலைகளில் காலியாக உள்ள பொது தொகுப்பு அலுவலர்கள் மற்றும் ஊதிய குழுவின் கீழ் உள்ள பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் ஆலைகள் தேவைகளை கருத்தில் கொண்டு விரைந்து நிரப்பிட நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அரசு கருணை அடிப்படையில் பணிநியமனமும், சுமார் 170 பேருக்கு பதவி உயர்வும் வெவ்வேறு நிலைகளில் அளிக்கப்பட்டது. கோரிக்கை வைக்காமலேயே ஊதிய உயர்விற்காக மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டு, வெகுவிரைவில் ஊதிய உயர்வும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகள் நலன் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு கேட்காமலேயே கொடுக்கும் இவ்வரசின் செயல்பாட்டால், தற்போது கரும்பு பிழிதிறன் உயர்வும், சர்க்கரை கரும்பு பரப்பளவு உயர்வு, கரும்பு விவசாயிகளின் எண்ணிக்கை உயர்வு இவ்வரசின் சாதனையாகும்.

கரும்பு விவசாயிகளை கண் போல காத்து, அவர்களுக்கு ஏற்படும் துயரங்களை துடைத்திட இவ்வரசு எப்பொழுதும் நேச கரம் நீட்டிக் கொண்டே இருந்ததன் விளைவாக கரும்பு உற்பத்தி பரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் கல்லாப்பெட்டி எடப்பாடி அவர்கள் சுட்டிக்காட்டுவதற்கு முன்பே, பூச்சி, நோய் வருமுன் காப்போம் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கரும்பு பயிர் நல்ல முறையில் வளர்ந்திடவும், கரும்பு விவசாயிகளுக்கு அவ்வப்போது நிவாரணம் வழங்கிடவும், இவ்வரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எந்த ஒரு கரும்பு விவசாயியும் பாதிக்கப்படாத வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி, எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக இத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், முந்தைய அதிமுக அரசால் கைவிடப்பட்ட சர்க்கரைத் துறையினை செம்மை துறையாக்கிட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சிறப்பாக செயல்படும் அரசாக திகழ்ந்து வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே அவர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத்தொகை மற்றும் ஊக்கத்தொகை ஆகிய பணப்பயன்கள் யாவும் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் விடியாமல் இருந்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையின் மூலம், தமிழக விவசாயிகள் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த உண்மையை கூடிய விரைவில் விளங்காத அரசின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கு புரிந்துவிடும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

The post ’’விவசாயிகள் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்..!’’ எடப்பாடிக்கு எம்.ஆர்.கே பதில் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95/feed/ 0
“விடியல் பிறக்காதா? திமுக ஆட்சி வராதா? என்று ஏங்கிக் கிடந்த மக்களின் தாகம் தீர்க்க உதயமானது தான் உதயசூரியன் ஆட்சி..!” முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேச்சு https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/#respond Sun, 07 May 2023 17:40:49 +0000 https://madrasmurasu.com/?p=1292 காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்லாவரத்தில் நடந்த திமுக அரசின் சாதனை விளக்க பொக்கூட்டத்தில்  சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” ஆறாவது முறையாக அன்னைத் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது – சீரோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் 1222 பொதுக்கூட்டங்களை இன்றும் நாளையும் நாளை மறுநாளும் ஏற்பாடு செய்துள்ளோம். மூன்றே நாளில் 1,222 கூட்டங்கள் நடைபெறுவது […]

The post “விடியல் பிறக்காதா? திமுக ஆட்சி வராதா? என்று ஏங்கிக் கிடந்த மக்களின் தாகம் தீர்க்க உதயமானது தான் உதயசூரியன் ஆட்சி..!” முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேச்சு first appeared on Madras Murasu.

]]>

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்லாவரத்தில் நடந்த திமுக அரசின் சாதனை விளக்க பொக்கூட்டத்தில்  சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” ஆறாவது முறையாக அன்னைத் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது – சீரோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் 1222 பொதுக்கூட்டங்களை இன்றும் நாளையும் நாளை மறுநாளும் ஏற்பாடு செய்துள்ளோம். மூன்றே நாளில் 1,222 கூட்டங்கள் நடைபெறுவது என்பது இதுவரை நடைபெறாத எண்ணிக்கையாகும்.

100 கூட்டத்திலோ 200 கூட்டத்திலோ நமது சாதனைகளைச் சொல்லி முடியாது. 1000 கூட்டத்தில் சொல்லக் கூடிய அளவுக்கு நாம் சாதனைகளைச் செய்துள்ளோம்.அதனால் தான் 1,222 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தைக் காக்க வந்த விடிவெள்ளியாம் பேரறிஞர் அண்ணா பிறந்தது காஞ்சிபுரம் மாவட்டம். அதிலும் வரலாற்றுப் புகழ் பெற்றது இந்த பல்லாவரம் பகுதி. ஒரு காலத்தில் இது பல்லவபுரம் என்று அழைக்கப்பட்ட பகுதி இது. கல்வெட்டுகளில் பல்லவபுரம் என்று தான் உள்ளது. பல்லவ மன்னன் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கலைகள் வளர்ந்தது இந்த பல்லவபுரம்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பழைய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி இது. திருமங்கை ஆழ்வாரும் – பூதத்தாழ்வாரும் பாடிய திருநீர்மலை கோவில் இங்கு தான் உள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக காஞ்சிபுரம் வட்டாரத்துக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங், ‘ திராவிடத்தின் தலைநகராக காஞ்சி விளங்கியது’ என்று எழுதினார். அத்தகைய திராவிடத்தின் தலைநகரான காஞ்சி மாவட்டத்தின் பல்லாவரத்தில் பேசுவது பொருத்தமானது. மகிழ்ச்சிக்குரியது.

 

எப்படி இருந்தது தமிழ்நாடு? பத்தாண்டு காலம் பாழ் பட்டுக் கிடந்தது தமிழ்நாடு. முதல் ஐந்தாண்டு காலம் தனது வழக்கில் இருந்திருந்து தப்பிப்பதற்கான முயற்சிகள் இருந்தார் அம்மையார் ஜெயலலிதா. சிறைக்குப் போனார், திரும்பி வந்தார். அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டார். மறைந்தும் போனார்.

பழனிசாமி – பன்னீர்செல்வம் – சசிகலா என்று பிரிந்து நின்று மோதியதன் காரணமாக தமிழ்நாடே அனைத்து வகையிலும் சீரழிந்தது. ஊழல் முறைகேட்டின் காரணமாக தமிழ்நாட்டின் நிர்வாகத்தை சூறையாடினார்கள். தனது செயலின்மை காரணமாக நிதிநிர்வாகத்தையே பாழடித்தார்கள். கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் தடியெடுத்தவன் தண்டல் காரன் என்ற சூழலை உருவாக்கினார்கள்.

தூத்துக்குடியில் ஊர்வலமா? துப்பாக்கியால் சுட்டுக் கொல்! பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையா? குற்றவாளிகளைக் கைது செய்யாதே! அம்மையார் ஜெயலலிதா வீட்டிலேயே கொலை நடந்தது. கொள்ளை நடந்தது. மர்ம மரணங்கள் நடந்தன.

குட்கா விற்பனை ஏகபோகமாக இருந்தது. குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கியதாக அமைச்சர் மீதும் டிஜிபி மீதும், போலீஸ் அதிகாரிகள் மீதும் புகார் வந்து, அவர்கள் வீட்டில் ரெய்டு நடந்தது.

தலைமைச் செயலாளர் வீட்டிலேயே ரெய்டு நடந்தது. இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் அனைத்தும் டெல்லி பாஜக தலைமையிடம் அடகு வைக்கப்பட்டு இருந்தன.

1991-96 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலம் என்பது மிக மோசமான ஆட்சி காலமாக இருந்தது என்றால் – அதனை விட மிகமிக மோசமான காலமாக 2016-21 ஆட்சிகாலம் என்பது இருந்தது. விடியல் பிறக்காதா? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வராதா? என்று ஏங்கிக் கிடந்த தமிழ்நாட்டு மக்களின் தாகம் தீர்க்க உதயமானது தான் 2021 மே மாதம் உதயமான உதயசூரியன் ஆட்சி.

இந்த இரண்டாண்டு காலத்தில் பத்தாண்டு கால பாதாளத்தை சரி செய்திருக்கிறோம். ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் செய்து காட்டி இருக்கிறோம் என்பதை பல்லவ மன்னர்கள் உலவிய மண்ணில் நின்று கம்பீரமாகச் சொல்ல விரும்புகிறேன்” என்று பேசினார்.

The post “விடியல் பிறக்காதா? திமுக ஆட்சி வராதா? என்று ஏங்கிக் கிடந்த மக்களின் தாகம் தீர்க்க உதயமானது தான் உதயசூரியன் ஆட்சி..!” முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேச்சு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/feed/ 0