சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு கோடைக்கால தபால் தலை முகாமை மே 2023-ல் நடத்த உள்ளது.
மூன்று பிரிவுகளாக இந்த முகாம் நடைபெற உள்ளது.
முதல் பிரிவு 11.05.2023 முதல் 13.05.2023 வரையும், இரண்டாவது பிரிவு 18.05.2023 முதல் 20.05.2023 வரையும், மூன்றாவது பிரிவு 25.05.2023 முதல் 27.05.2023 வரையும் நடைபெறும். காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 வரை பயிற்சி நடைபெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 25 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
ஆர்வமுள்ள ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ரூ.250-ஐ ரொக்கமாக பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். பயிற்சி முடித்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதுகுறித்த தகவல்களை 9444933467, 9840595839, 9952965458, 044-28543199 என்ற தொலைபேசி எண்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் அறிந்து கொள்ளலாம்.
—–