Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
’’பிளஸ்-2 ரிசல்ட், தமிழில் 2 பேர் மட்டுமே 100 க்கு 100 பெற்று சாதனை..!’’ விருதுநகர் மாவட்டம் முதலிடம் - Madras Murasu
spot_img
More
    முகப்புகல்வி’’பிளஸ்-2 ரிசல்ட், தமிழில் 2 பேர் மட்டுமே 100 க்கு 100 பெற்று சாதனை..!’’ விருதுநகர்...

    ’’பிளஸ்-2 ரிசல்ட், தமிழில் 2 பேர் மட்டுமே 100 க்கு 100 பெற்று சாதனை..!’’ விருதுநகர் மாவட்டம் முதலிடம்

    பிளஸ் டூ பொதுதேர்வில், தேர்ச்சி அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 2 பேர் மட்டுமே தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். 

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 690 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணக்கு பதிவியலில் 6573 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.32% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப்பிரிவுகளில் 81.89%, தொழிற்பாடப்பிரிவுகளில் 82.11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் – 812 வேதியியல் – 3909 உயிரியல் – 1494 தாவரவியல் – 340 விலங்கியல் – 154 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments