மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4455 காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமிக்கும் அறிவிப்பினை வங்கி தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளான Bank of Baroda, Bank of India , Bank of Maharashtra, Canara Bank, Central Bank of India, Indian Bank, Indian Overseas Bank , Punjab National Bank, Punjab & Sind Bank, UCO Bank, Union Bank of India ஆகிய வங்கிகளில் காலியாக உள்ள அதிகாரி பணி இடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏதாவது பட்டப்படிப்பினை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வயதானது குறைந்தபட்சம் 20 ல் இருந்து 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு. அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் விதிகளுக்கு உட்பட்டு, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட தேர்வில் English Language, Quantitative Aptitude, Reasoning Ability ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். இதில் தகுதி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
அதில், Reasoning & Computer Aptitude, General/ Economy/ Banking Awareness , English Language , Data Analysis & Interpretation என்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்டப்படும். இது கொள்குறி வகையில் இருக்கும். விரித்து கட்டுரை வடிவில் எழுதும் வகையில் இரண்டு கேள்விகள் கேட்க்கப்படும்.
இந்த வேலைக்கு எந்தவொரு பட்டப்படிப்பு முடித்தவர்களும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை : www.ibps.in என்ற இணையத்தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த போட்டித்தேர்வுக்கான அனைத்து பாடங்களும் www.youtube.com/@MadrasMurasu என்ற தளத்தில் உள்ளது. அதை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து இலவசமாக படிக்கலாம். பல ஆயிரம் பணம் கட்டி, கோச்சிங் செண்டர் போகாமல் வீட்டில் இருந்து கொண்டே, வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம். இன்றே, விண்ணப்பித்து விட்டு, மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலை பார்த்து படிக்க தொடங்குங்கள்.
இந்த 4455 வங்கி அதிகாரி பணி இடம் குறித்த அறிவிக்கையை முழுமையாக படித்த பின்னரே, அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கையை முழுமையாக படிக்க, இங்கே கிளிக் Detailed-Notification_CRP-PO-XIV_final-1 செய்யவும்.