அண்ணா பல்லலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலெக்ட்ரானிக் மீடியா படிப்பில் சேர, பிளஸ் டூ மாணவ – மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். M.Sc. (Computer Science) / M.Sc. (Information Technology), M.Sc. Electronic Media.
சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு, சுயநிதிப் பிரிவில் ஐந்தாண்டு ஒருங்கினைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. டிவி, சோசியல் மீடியா, யூடியூப் போன்ற எலெக்ட்ரானிக் மீடியா பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்காக இங்கு எம்.எஸ்.சி எலெக்ட்ரானிக் மீடியா படிப்பு உள்ளது.
எம்.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்.சி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சொல்லித்தரப்படுகிறது. கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம்தான். ஆனால், எலெட்க்ரானிக் மீடியா படிப்புக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
Five year Integrated Programmes leading to (1) M.Sc. (Computer Science) (2) M.Sc. (Information Technology) and (3) M.Sc. (Electronic Media) are offered at the University Departments of Anna University (College of Engineering Guindy Campus), Chennai – 600 025 under Self-Supporting Scheme.
இந்த படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கம்யூட்டர் சயின்ஸ், ஐடி படிப்புகளுக்கு மட்டும் 12 ஆம் வகுப்பில் Mathematics, Physics, Chemistry மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன் நடைபெறும்.
எலெக்ட்ரானிக் மீடியா படிப்புக்கு ஆங்கிலம், தமிழ் பாடங்களை தவிர்த்து மற்ற அனைத்து பாடங்களின் மதிப்பெண்களும் ரேங்க் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஜுன் 27 ஆம் தேதி தொடங்கியது. ஜுலை 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே https://admissions.annauniv.edu/msc052024/index.php ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பு குறித்த முழு அறிவிக்கையை M.SC_5YEAR_INSTRUCT_24 இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.