acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post செஸ் விளையாட்டில் சாதிக்க ஐடியா கொடுக்கும் மெட்ராஸ் ஐஐடி first appeared on Madras Murasu.
]]>ஐஐடி மெட்ராஸின் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics – CESSA), தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளைப் பயன்படுத்தி உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் விதத்தில் அவை அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி அடிமட்டத்தில் விளையாட்டுகளை மேலும் வளர்ப்பதற்காக ஃபிளாக் சீட் மற்றும் செஸ் பயிற்சித் திட்டங்களுக்கான தீர்வுகளை கூட்டமைப்புகளுக்கு வழங்க உள்ளன.
ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தில்லியில் ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த ‘விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் மாநாட்டின்’ இரண்டாவது நாளான இன்று (13 ஜூலை 2024) இந்த அறிவிப்புகளை இக்கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விளையாட்டுக் கல்வியில் இக்கல்வி நிறுவனத்தின் பொறுப்புணர்வை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் உரையாற்றிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “செஸ் மிகவும் சுவாரஸ்யமான- சிந்தனையைத் தூண்டும் விளையாட்டாகும், இதில் பல முறை பொருத்துதல் உள்ளிட்ட உத்திகள் உள்ளன. உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை செஸ் வீரர்களுக்கு பயிற்சியின் போது பல காட்சிகள் மற்றும் சிறந்த விளையாட்டுத் திட்டங்களைக் கணக்கிட்டு உதவக்கூடிய மிக முக்கியமான பங்கை வகிக்க முடியும். செஸ் விளையாட்டில் உலகளவில் பாரதத்தை வல்லமை படைத்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் இத்தகைய தளங்களை உருவாக்க மிகவும் ஆர்வமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தனது விளையாட்டுக் கல்வி முயற்சியின் ஓர் அங்கமாக இந்தியாவில் உள்ள விளையாட்டு மதிப்புச் சங்கிலியில் பல்வேறு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திறன்களை மேம்படுத்துவதற்கான படிப்புகளை வழங்கவும், குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள், உடற்கல்வி பயிற்றுனர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பகுப்பாளர்கள், உடலியல் நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், நடுவர்கள், விளையாட்டுகளை நடத்துவோர், நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். இதன் ஒரு பகுதியாக வரும் மாதங்களில் என்பிடெல் மூலம் ஐந்து புதிய விளையாட்டுப் படிப்புகளைத் தொடங்க ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா திட்டமிட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸின் விளையாட்டுக் கல்விக்கான எதிர்காலத் திட்டம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்), மற்றும் ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸாவின் தலைவர் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளை ஐஐடி மெட்ராஸ் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. விளையாட்டுக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி, செஸ் விளையாட்டுக்கான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை செஸ் கூட்டமைப்புகளுக்கு வழங்குகிறது. விளையாட்டுக் கல்வியை மேம்படுத்துதல், விளையாட்டு சுற்றுச்சூழலின் அனைத்து மட்டங்களிலும் திறமைகளை வளர்த்தல், செஸ் உலகில் இந்தியாவின் இடத்தை மேலும் உயர்த்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் எங்களின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
விளையாட்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஏஐ/எம்எல், டேட்டா சயின்ஸ் சான்றிதழ் படிப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐஐடிஎம் எதிர்காலத்தில் இளங்கலை விளையாட்டு அறிவியல் பாடத்தையும், விளையாட்டு மேலாண்மையில் அறிவியல் பாடத்தையும், விளையாட்டு மேலாண்மையில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
ஐஐடிஎம் செஸ்ஸா தொடங்கவிருக்கும் விளையாட்டு தொடர்பான அனைத்து படிப்புகளும் வலுவான தொழில்துறை தொடர்புகள், விளையாட்டு அறிவியல், விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் ஐஐடிஎம் செஸ்ஸாவின் பல்வேறு முன்முயற்சிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். இவற்றில் சில குறிப்பிட்ட படிப்புகள் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் இணைந்து உருவாக்கப்படும். இப்படிப்புகளில் ஒரு பகுதியாக ஊடகத் தளங்கள் குறித்தும், தொழில் ஊக்குவிப்பு, பல்வேறு விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்வார்கள்.
செஸ் விளையாட்டை மேலும் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் இருந்து செஸ் (உள்ளடக்கம், பயிற்சி) ஒரு கட்டாய டிஜிட்டல் இலக்கை உருவாக்க ஐஐடிஎம் செஸ்ஸா திட்டமிட்டுள்ளது.
மோசடி எதிர்ப்பு நடவடிக்கைக்கு உதவும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கி, ஆன்லைன் சதுரங்கத்தை மேலும் கட்டாயப்படுத்துவதற்கும் ரசிகர்களின் ஈடுபாட்டை மேலும் அதிகரிப்பதற்கும் பல்வேறு கருவிகளை உருவாக்குவதன் மூலம் செஸ் விளையாட்டானது நியாயமானதாக இருப்பதை உறுதிசெய்ய தனித்துவமான தொழில்நுட்ப சலுகைகளை செஸ்ஸா உருவாக்கும்.
இதர முன்முயற்சிகள் வருமாறு:
* பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் செஸ் விளையாட்டை அடிமட்ட அளவில் பிரபலப்படுத்துதல்
* சுற்றுச்சூழலில் உள்ள அனைவருக்கும் நிதி நன்மைகளை உறுதி செய்வதற்காக இந்தக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் செஸ் வீரர்களை ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள்
‘தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் ஆதரிக்கப்படும் இந்தியாவில் வளரும் இதர விளையாட்டுகள்’ என்ற தலைப்பில் தொழில்துறை தலைவர்களின் உயர் ஆற்றல்மிக்க குழு விவாதங்களும் இந்த மாநாட்டில், இடம்பெற்றன.
பல்வேறு புதுமையான பரிந்துரைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன. விளையாட்டுக் கூட்டமைப்புகள், தொழில்நுட்ப வீரர்கள், ஊடகத் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை விளையாட்டுகளை மிகவும் புதுமையானதாகவும் ஈடுபாட்டுடனும் மாற்றுவதற்கான வழிமுறைகளாகும்.
The post செஸ் விளையாட்டில் சாதிக்க ஐடியா கொடுக்கும் மெட்ராஸ் ஐஐடி first appeared on Madras Murasu.
]]>The post ’’கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது..!’’ மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் first appeared on Madras Murasu.
]]>கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7 ஆண்டுகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். கடந்த 19-ம் தேதி சென்னையில் தொடங்கிய கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெற்றது. இப்போட்டியின் நிறைவு விழா சென்னையில் 31.01.2024 நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறினார். ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவிற்காக 11 நாட்கள் விரதம் மேற்கொண்டிருந்த நிலையிலும், இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் சென்னை வந்ததை அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். தென்மாநிலங்களில் நடைபெறும் முதலாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி இது என்றும் அவர் கூறினார். மேலும், விளையாட்டுத் துறையில் இந்தியா தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக அவர் கூறினார். இந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் விளையாட்டுத்துறையில் இந்தியாவின் சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்ததை அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று ஆற்றிய உரையிலும் விளையாட்டுத்துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்ததை அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் தற்போது நிறைவடைந்துள்ள கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 4,454 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார். இதில் மகளிரின் பங்களிப்பு கிட்டதட்ட சரிசமமாக இருந்தது என்றும் இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மகாராஷ்ட்ரா, இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாடு, மூன்றாம் இடம் பெற்ற ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார். தமிழ்நாடு 98 பதக்கங்களைப் பெற்றுள்ளதை அவர் கூட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் புதிய தேசிய சாதனைகளைப் படைத்த வீரர்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப் படைத்த பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த எளிய குடும்ப பின்னணிக் கொண்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். இது போன்ற வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தி சாதனைகளைப் படைக்க கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சிறந்த களமாக அமைந்துள்ளன என்று அவர் கூறினார். இது போன்ற வீரர்களுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து உதவிகளை வழங்கி ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விழாவின் முக்கிய நாயகர்கள் இளம் வீரர்கள்தான் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பதக்கமும் வீரர்களின் அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுவதாகத் அவர் தெரிவித்தார். இளம் வீரர்கள் தான் இந்திய விளையாட்டுத்துறையின் எதிர்காலம் என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று கூறிய அவர், வீரர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் தமிழ்நாட்டின் விருந்தோம்பல் சிறப்பாக அமைந்தது எனவும் அவர் பாராட்டினார். இந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இப்போட்டியில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டுகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வழங்கிவருவதாக தெரிவித்தார். இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் 600 வீரர்கள் பங்கேற்றதாக அவர் கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இந்த முறைதான் தமிழ்நாடு முதல், மூன்று இடங்களுக்குள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் கோப்பைகள் போன்ற போட்டிகளின் மூலம் வீரர்கள் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு 2-வது இடம் பெற்றிருப்பதற்கு இது போன்ற நடவடிக்கைகள் தான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
விளையாட்டுப் போட்டிக் குறித்த கையேடு!
நிறைவு விழாவின் ஒரு பகுதியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக, கடந்த 13 நாட்கள் தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிக் குறித்த கையேட்டை மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட அதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், மாநில அமைச்சர் சேகர் பாபு, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
The post ’’கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது..!’’ மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் first appeared on Madras Murasu.
]]>The post ’’கபடி அணிகளுக்கு அழைப்பு..!’’நெல்லையில் மின்னொளி கபடிப் போட்டி first appeared on Madras Murasu.
]]>திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்துள்ள மேலப்புதுக்குடி பரிசுத்த யோவான் ஆலய 15-வது பிரதிஷ்டையை முன்னிட்டு தேவசகாயம் நினைவு கபடி குழு சார்பில் மின்னொளி கபடி போட்டி வருகிற 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி நடக்க இருக்கிறது. வீரவநல்லூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், கபடி போட்டியை தொடக்கி வைக்கிறார்.
ரூ.70 ஆயிரம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.11 ஆயிரமும் ரொக்கப்பரிகாக வழங்கப்படும். மேலும் முதல் 8 இடங்களுக்குள் வரும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் நேரிலோ அல்லது 9787462074 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘’மது அருந்தி விட்டு விளையாட அனுமதி இல்லை. விளையாட்டை மாற்றி அமைக்கும் உரிமை கமிட்டிக்கு உண்டு. நடுவரின் தீர்ப்பு உறுதியானது. நடுவரிடம் வாக்குவாதம் செய்யும் அணி வெளியேற்றப்படும். இஅவு 10 மணி வரை மட்டுமே நுழைவுக் கட்டணம் வாங்கப்படும். முதல் சுற்றில் விளையாடிய வீரர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு அனுமதிக்கப்படுவர்’’ என்று கபடி போட்டி விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ’’கபடி அணிகளுக்கு அழைப்பு..!’’நெல்லையில் மின்னொளி கபடிப் போட்டி first appeared on Madras Murasu.
]]>The post ’’கைகள் இல்லாமல் வரலாறு படைத்த காஷ்மீர் ஷீத்தல்..!’’ மகேந்திரா கார் பரிசு first appeared on Madras Murasu.
]]>ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ளது இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமம் லோய் தார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவர் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி பிறந்தவர் ஷீத்தல் தேவி. இவரது தந்தை ஏழை விவசாயக் கூலி. அந்தப் பகுதியில் உள்ள நெல் மற்றும் காய்கறி பண்ணையில் நாள் முழுவதும் வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இது குடும்பத் தேவைக்கு போதவில்லை. அந்த குடும்பத்துக்கு சொந்தமான மூன்று நான்கு ஆடுகளை வளர்த்து வருகிறார் அவரது அம்மா. உடன் பிறந்தது ஒரு தங்கை. படிப்பறிவு இல்லாத குடும்பத்தின் மூத்த மகளான ஷீத்தல் தேவி ஃபோகோ மெலியா என்ற பிறவி நோய்க்குறைபாட்டால் கைகள் இன்றிப் பிறந்தார். இது ஒரு அரிய வகை குறைபாடு. கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட தாலிடோமைடு என்கிற மருந்தின் பக்க விளைவு.
இன்ப அதிர்ச்சி திருப்புமுனை!
2021 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரில் இந்திய ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வு அது. பள்ளி சென்று கொண்டிருந்த ஷீத்தல் தேவியும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அந்த நிகழ்வின் போது ஷீத்தலின் விளையாட்டுத் திறமை ராணுவத்தினரால் கண்டறியப்பட்டது. ராணுவ அதிகாரிகளான பயிற்சியாளர்கள் அபிலாஷா சவுத்ரி, குல்தீப் வாத்வான் ஆகியோர் ஷீத்தலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, முதலில் செயற்கை முறையில் அறுவை சிகிச்சை செய்வதென்று முடிவு செய்தனர். ஆனால், அது சாத்தியமில்லை எனக் கை விரித்த மருத்துவர்கள், கைகள் இல்லை என்றாலும், அவரின் மேல் உடலமைப்பு வலுவாக இருப்பதை உறுதிப்படுத்தினர். அப்போதுதான், கால்களை கொண்டு மரம் ஏறுவதில் நிபுணத்துவம் உள்ளதாக ஷீத்தல் கூறியது ராணுவ பயிற்சியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு லண்டன் பாரா ஒலிம்பிக் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் மாட் ஸ்டேட்ஸ் மேனனின் திறமை, வில்லை பிடிக்க தனது கால்களை திறமையாகப் பயன்படுத்தியது. அர்ப்பணிப்புடன் செயல்பட்டது நினைவுக்கு வந்தது. இதனையடுத்து, ஷீத்தல் தேவியை வில்வித்தை பயிற்சி மையத்தில் சேர்த்து ஊக்கப்படுத்தினர். அதற்குப் பிறகு ஷீத்தலின் வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்டது. திருப்புமுனையை ஏற்படுத்தியது. குடும்பத்தின் வறுமையை அறிந்து தத்தெடுத்துக் கொண்ட ராணுவம், ஷீத்தல் தேவியின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது. கடந்த ஆண்டுதான் பத்தாம் வகுப்பை முடித்தார். மருத்துவ உதவி மற்றும் வில்வித்தை விளையாட்டு பயிற்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. பயிற்சியில் சேர்ந்த 6 மாதத்தில் சிறந்த வீராங்கனையாக உருவெடுத்தார். இரண்டு கைகளும் இல்லாமல், சிறிய விஷயத்துக்கும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் வாழ்க்கை மிகவும் கடினமானது என்பதால் கைகள் இல்லாத ஷீத்தல் தேவிக்கு கால்களால் இயக்கக்கூடிய வில்லும் அம்பும் உள்ளூரில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன.
சவால் நிறைந்த பயணம்!
செயற்கை கை பொருத்தும் முயற்சிகள் தோல்வியுற்றாலும், தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. ஆரம்பத்தில் வில்லை அவரால் தூக்க முடியவில்லை. மிகவும் கடினமாகவே இருந்துள்ளது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இரண்டு கால்களையும் பயன்படுத்தி குறி பார்த்து அம்புகளை ஏவினார். பாரா வில்வித்தை வீரர்கள் மட்டுமல்லாமல், வழக்கமான வில்வித்தை வீரர்களுடன் போட்டியிட்டு அசாதாரணமான தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் ஒரு வில்லை தூக்குவதற்கு கூட கஷ்டப்பட்ட அவர், தொடர் பயிற்சியின் மூலம் தினமும் 50 முதல் 100 அம்புகளை வீசத் தொடங்கினார்.
பின்னர் ஒரே நாளில் 300 அம்புகளை வீசும் அளவுக்கு முன்னேற்றம் கண்டார். இதன் மூலம் வில்வித்தை போட்டியில் சாதிக்க முடியும் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை பயிற்சியாளர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டது. அதோடு மட்டு மல்ல, அவரது சொந்த கிராமத்து நண்பர்களின் ஆதரவும் அதிகம் இருந்ததால் கேலோ இந்தியா, தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெண்களுக்கான கேலோ இந்தியா கேம்ஸ் என்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளினார். பயிற்சியில் பங்கேற்ற 11 மாதத்தில் சோனா பட்டில் நடந்த ஜூனியர் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிக்குள் முதன்முதலாக களம் இறங்கி, முன்னணி மற்றும் நட்சத்திர வீரர்களை எதிர்கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதன் தொடர்ச்சியாக, ஓப்பன் நேஷனல் விளையாட்டில் நட்சத்திர வீரர்களுடன் போட்டியிட்டு நான்காவது இடத்தை பிடித்தார்.
சாதனையும் அங்கீகாரம்!
அடுத்த இலக்கு சர்வதேசப் போட்டியாக அமைந்தது. சமீபத்தில் செக் குடியரசில் நடைபெற்ற பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். மன உறுதியுடன் களம் இறங்கி பிரமிக்க வைக்கும் வகையில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த மாதம் சீனாவில் நடந்த ஆசியா பாரா விளையாட்டுப் போட்டியின் தனிநபர் மற்றும் கலப்பு குழு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இரண்டு தங்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று சாதனையின் உச்சத்தை அடைந்தார் ஷீத்தல் தேவி, உலக வில்வித்தை வரலாற்றில் கைகள் இல்லாமல் கால்களால் வில்லை இயக்கும் முதல் வீராங்கனையாக தனது பெயரை பொன் எழுத்துக்களால் பொறித்த இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மகேந்திரா நிறுவனமும் கார் ஒன்றை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது. இப்போது, இவர் பெயர்தான் இண்டர்நெட் உலகில் அதிகம் தேடப்படுகிறது. காரணம் அவர் தங்கம் வென்றார் என்பதற்காக மட்டுமல்ல. அதையும் தாண்டி தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாகத் திகழ்கிறார் என்பதற்காகவே. வில்வித்தையை தாண்டி, உடல் ரீதியான சவால்களைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள தனி நபர்களை ஊக்குவிக்கிறது. குறைபாடு உள்ளவர்கள் தடைகளைத் தாண்டி லட்சியங்களை வெல்ல முடியும் என்கிற அசைக்க முடியாத உறுதியையும், நம்பிக்கையையும் உலகுக்கு உணர்த்துகிறது.
The post ’’கைகள் இல்லாமல் வரலாறு படைத்த காஷ்மீர் ஷீத்தல்..!’’ மகேந்திரா கார் பரிசு first appeared on Madras Murasu.
]]>The post ’’ஹாக்கி வீராங்கணை வந்தனா கட்டாரியாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் சு.வெங்கடேசன் எம்பி.,’’ first appeared on Madras Murasu.
]]>
The post ’’ஹாக்கி வீராங்கணை வந்தனா கட்டாரியாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் சு.வெங்கடேசன் எம்பி.,’’ first appeared on Madras Murasu.
]]>The post ”உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா – நியுசிலாந்து மோதல்..!’’ நெதர்லாந்து பரிதாப தோல்வி first appeared on Madras Murasu.
]]>பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இன்றைய தினம் களத்தில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பந்து ஆடுகளத்தில் பவுன்ஸ் ஆகி மெதுவாக பேட்டுக்கு வந்தது. இருப்பினும், இதனைச் சரியாக கணித்து கூட்டணி அமைத்தார்கள் ரோஹித்தும் கில்லும்.
ஆர்யன் தத் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ரோஹித். அடுத்தடுத்த ஓவர்களிலும் அதிரடி தொடரவே முதல் 10 ஓவர்களில் 5 பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தினார் எட்வர்ட்ஸ். ஆனால் எதுவும் பலன் கொடுக்கவில்லை. முதல் பவர்பிளே-வில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவித்தது. 30 பந்துகளில் அரை சதம் அடித்தார் கில்.
மீகெரன் வீசிய 12-வது ஓவரில் ஷார்ட் பந்தை ஃபைன் லெக்கில் சிக்ஸர் அடிக்க முயன்றார் கில். ஆனால் நிடமானுரு பவுண்டரி லைனுக்கு சில அங்குலம் முன்பாக நின்ற இடத்தில் இருந்தபடி அட்டகாசமாய் கேட்சை பிடித்தார். அதன்பிறகு ஸ்டம்ப் லைனில் பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்த முயன்றார்கள் நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள்.
தவறான பந்துகளைத் தண்டித்த ரோஹித் 44 பந்துகளில் அரை சதம் அடித்தார். வேன் டர் மெர்வ் கச்சிதமாகப் பந்துவீசி இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அவருடைய முதல் 5 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 61 ரன்களை எடுத்த ரோஹித் 18-வது ஓவரில் பாஸ் டி லீ-டின் லெங்த் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று லாங் ஆனில் கேட்ச் ஆனார். நேரம் செல்லச் செல்ல பந்து வேகம் குறைவாக வரத் தொடங்கியது.
இதனைப் புரிந்து விளையாடிய கோலி 53 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே வேன் டர் மெர்வின் லெங்த் பந்தை கட் செய்ய முயன்று போல்ட் ஆனார். அதன்பிறகு ஷ்ரேயஸுடன் கரம் கோர்த்தார் ராகுல். 29-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது இந்தியா.
இருவரும் திறம்பட நெதர்லாந்து பந்துவீச்சாளர்களின் மித வேகப் பந்துகளை எதிர்கொண்டார்கள். 48 பந்துகளில் அரை சதம் அடித்தார் ஷ்ரேயஸ். மறுபுறம் அதிரடி காட்டிய ராகுல் 40 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் 5 பேட்டர்களும் அரை சதம் அடித்து புதிய சாதனையைப் படைத்தார்கள். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 3 முறை மட்டுமே ஓர் அணியின் முதல் 5 பேட்டர்களும் அரை சதம் அடித்துள்ளார்கள். இரு முறை ஆஸ்திரேலியா இந்த சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்த சாதனைப் பட்டியலில் இணைந்தது இந்தியா.
ஷ்ரேயஸ் – ராகுல் இணை கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. ஷ்ரேயஸ் 84 பந்துகளில் தனது முதல் உலகக் கோப்பை சதத்தைப் பூர்த்தி செய்தார். லோகன் வான் பீக் வீசிய 49-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார் ஷ்ரேயஸ்.
கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் விளாசி ராகுல் சதம் விளாச, இந்தியாவும் 400 ரன்களைக் கடந்தது. ராகுல் 102 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் கடைசிப் பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார். இறுதியில் 410 ரன்களைக் குவித்தது இந்தியா.
இந்த பிரம்மாண்ட இலக்கைத் துரத்திய நெதர்லாந்து, சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரிலேயே பார்ரேசியின் விக்கெட்டை இழந்தது. ஆனால், அதன்பிறகு ஜோடி சேர்ந்த அக்கர்மேன் – ஓ டாவ்ட் இணை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடியது. வழக்கமாக முதல் 10 ஓவர்களில் எதிரணியைத் திணறடிக்கும் இந்திய பந்துவீச்சாளர்களால் இன்றைய ஆட்டத்தில் அந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
சிராஜ் வீசிய 6-வது ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசினார் அக்கர்மேன். 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் குவித்தது நெதர்லாந்து. 11-வது ஓவரில் குல்தீப்பிடம் பந்தைக் கொடுத்தார் ரோஹித். 35 ரன்கள் எடுத்த அக்கர்மேனை தனது அடுத்த ஓவரில் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார் குல்தீப்.
15-வது ஓவரில் குல்தீப்பின் முழு நீளப்பந்தை இறங்கி வந்து அடித்தார் ஓ டாவ்ட். லாங் ஆனில் பந்தைப் பிடிக்க முயன்ற சிராஜ், அதைத் தவறவிட, பந்து தொண்டையில் பட்டது. இதனால், சில ஓவர்களுக்கு சிராஜ் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஜடேஜா தனது முதல் பந்திலேயே ஓ டாவ்ட்-டை போல்ட் ஆக்கினார்.
இதன்பிறகு ஏங்கல்பிரெச் – எட்வர்ட்ஸ் இணை தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காததால் கோலி, கில், சூர்யகுமார் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் ரோஹித். கடைசியில் அவரே பந்துவீசவும் செய்தார். அதாவது கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் தவிற மற்ற அனைவரும் இன்றைய ஆட்டத்தில் பந்துவீசினார்கள்!
25-வது ஓவரை வீசிய கோலி, எட்வர்ட்ஸை வீழ்த்தினார். உலகக் கோப்பையில் கோலியின் முதல் விக்கெட் இதுவாகும். அதன்பிறகு பாஸ் டி லீட் மற்றும் ஏங்கல்பிரெச் இணை பொறுமையாக விளையாடியது. 21 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த பாஸ் டி லீடை தனது துல்லிய யார்க்கரில் வீழ்த்தினார் பும்ரா.
சூர்யகுமார் யாதவ் வீசிய 35-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார் நிடாமனுரு. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஏங்கல்பிரெச் 45 ரன்களில் சிராஜின் வேகத்தில் வீழ்ந்தார். 41-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது நெதர்லாந்து. 16 ரன்கள் எடுத்த லோகன் வான் பீக் 43-வது ஓவரில் குல்தீப்பின் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஜடேஜாவின் அடுத்த ஓவரில் வேன் டர் மெர்வ் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
47-வது ஓவரில் ஆர்யன் தத், பும்ராவின் பந்தில் போல்ட் ஆனார். இதெல்லாம் ஒருபுறம் நடந்தாலும் நிடாமனுரு நிலைத்து விளையாடினார். 48-வது ஓவரை ரோஹித் சர்மா வீசினார். அந்த ஓவரில் சிக்ஸர் மூலம் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் நிடாமனுரு. அடுத்தப் பந்தையும் சிக்ஸருக்கு முயன்று கேட்ச் ஆனார் நிடாமனுரு. இறுதியில் 250 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தோல்வியைக் காணாத அணியாக அரையிறுதி ஆட்டத்தை விளையாடவுள்ளது இந்தியா.
தகுதிச் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பைக்குள் நுழைந்த நெதர்லாந்து, இரண்டு வெற்றிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி நியுசிலாந்து அணியை அரை இறுதிப்போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
The post ”உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா – நியுசிலாந்து மோதல்..!’’ நெதர்லாந்து பரிதாப தோல்வி first appeared on Madras Murasu.
]]>The post ’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டவும், எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கவும் பிரதமரின் ஒரு முயற்சியாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது.
மோடி நன்றி தெரிவித்தார்
பாரா விளையாட்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களைச் சந்திக்கவும், அவர்களின் அனுபவங்களைக் கேட்கவும் ஆவலாக இருப்பதாகக் கூறினார். வீரர்கள் இங்கு வரும்போதெல்லாம் புதிய நம்பிக்கைகளையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வருவதாகப் பிரதமர் கூறினார். தாம் இங்கு வந்திருப்பது ஒரு விஷயத்திற்காக மட்டுமே என்றும், அது பாரா தடகள வீரர்களின் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எனவும் அவர் தெரிவித்தார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் முன்னேற்றங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக அவர் கூறினார். இந்திய வீரர்களின் பங்களிப்புகளைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினரையும் பாராட்டினார். நாட்டின் 140 கோடி மக்கள் சார்பாக அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
மிகப்பெரிய சாதனை
விளையாட்டுகள் மிகவும் போட்டித்தன்மை கொண்டவை எனக் கூறிய பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது தங்களுக்குள் ஏற்படும் போட்டி குறித்து எடுத்துரைத்தார். விளையாட்டு வீரர்களின் மிக உயர்ந்த பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். வீரர்கள் அனைவரும் இங்கிருந்து சென்று சிலர் வெற்றியாளர்களாக திரும்பி வந்துள்ளனர் என்றும் மேலும் சிலர் கற்றுக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் யாரும் தோல்வியடைந்து திரும்பி வரவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். விளையாட்டில் தோல்வி என்பது இல்லை எனவும் வெற்றி அல்லது கற்றுக் கொள்ளுதல் மட்டுமே உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 140 கோடி மக்களிடையே இந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாரா தடகள வீரர்களுக்கு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார். இந்த வீரர்களின் வெற்றி முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிப்பதுடன் மக்கள் மத்தியில் ஒரு பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
வெற்றிகரமான பதக்க எண்ணிக்கை
இந்த 111 பதக்கங்கள் வெறும் எண்கள் அல்ல எனவும் 140 கோடி மக்களின் கனவுகள் என்றும் அவர் கூறினார். இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்றும், தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல் பதக்கப் பட்டியலில் இந்தியா 15 வது இடத்திலிருந்து முதல் 5 இடத்திற்கு முன்னேறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் பெற்ற வெற்றி மிகப் பெரிய வெற்றி என்றார். ஆகஸ்ட் மாதம் புத்தபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆண்கள் அணியின் முதல் தங்கப் பதக்கம், டேபிள் டென்னிஸில் பெண்கள் இணையின் முதல் பதக்கம், ஆண்கள் பேட்மிண்டன் அணியின் தாமஸ் கோப்பை வெற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 தங்கப் பதக்கங்கள் உள்பட 107 பதக்கங்கள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான பதக்க எண்ணிக்கை ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் உற்சாகப்படுத்தும்
பாரா விளையாட்டுகளின் சிறப்புத் தன்மையை எடுத்துரைத்த பிரதமர், மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு வெற்றி என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகமளிக்கும் விசயம் அல்ல என்றும் அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம் என்றும் குறிப்பிட்டார். விரக்தியின் பிடியில் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் செயல்திறன் எந்தவொரு நபரையும் மீண்டும் உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். விளையாட்டு சமூகமாக இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், விளையாட்டு கலாச்சாரம் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். 2030-ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முயற்சிக்கிறது என்று அவர் கூறினார்.
விளையாட்டில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை என்று கூறிய பிரதமர், வீரர்கள் தங்கள் சொந்த திறன்களை நம்புகிறார்கள் என்றார். ஆனால் ஒரு சிறிய உதவி பன்மடங்கு பலன்களை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். குடும்பங்கள், சமூகம், நிறுவனங்கள் மற்றும் பிற ஆதரவுச்சூழல்கள் இணைந்து கூட்டு ஆதரவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
டாப்ஸ் எனப்படும் ஒலிம்பிக் பதக்கம்
சமூகம் முந்தைய காலங்களைப் போலல்லாமல், இப்போது விளையாட்டை ஒரு தொழில்முறையாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசுக்காக விளையாட்டு வீரர்கள்’ என்ற நிலை மாறி விளையாட்டு வீரர்களுக்கான அரசு என்ற அணுகுமுறையில் தற்போதைய அரசு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் கனவுகளை அரசு அங்கீகரிப்பதை, அதன் கொள்கைகள், அணுகுமுறை மற்றும் சிந்தனையில் காணலாம் என்று பிரதமர் கூறினார். முந்தைய அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கான உள்கட்டமைப்பு, பயிற்சி வசதிகள் மற்றும் பண உதவி போன்றவற்றை முறையாக வழங்காததால் வீரர்கள் வெற்றியை எட்டுவதில் பெரும் தடை ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில், நாடு பழைய முறைகள் மற்றும் பழைய அணுகுமுறையிலிருந்து மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். அரசின் இன்றைய அணுகுமுறை விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்டது என்று கூறிய பிரதமர், அது தடைகளை அகற்றி அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை சுட்டிக் காட்டினார். ஆற்றலுடன் இணைந்த தளம் செயல்திறனை வெளிப்படுத்தும் என்று அவர் கூறினார். ஆற்றல் என்பது தேவையான தளத்தைப் பெறும்போது செயல்திறன் ஊக்கம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்களை அடித்தள நிலையில் இருந்து அடையாளம் கண்டு அவர்களின் திறமையை வளர்ப்பதன் மூலம் வெற்றிக்கு வழிவகுக்கும் கேலோ இந்தியா திட்டத்தைப் பிரதமர் குறிப்பிட்டார். டாப்ஸ் எனப்படும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்ட முன்முயற்சி மற்றும் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.
பெருமை சேர்ப்பார்கள்
சிரமங்களை எதிர்கொள்ளும் விளையாட்டு வீரர்களின் மீள்திறன் நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்று பிரதமர் கூறினார். வீரர்கள் இதுவரை கடக்க முடியாத தடைகளை கடந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்த உத்வேகம் எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் பாராட்டினார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாரா தடகள வீரர்களிடமிருந்து உத்வேகம் பெறுகிறார்கள் என அவர் தெரிவித்தார். ஒவ்வொரு போட்டியிலும் இந்த வீரர்கள் பங்கேற்பது மனித கனவுகளின் வெற்றி என அவர் குறிப்பிட்டார். இந்த வீரர்கள் கடினமாக உழைத்து நாட்டிற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அரசு விளையாட்டு வீரர்களுடன் உள்ளது எனவும் நாடும் வீரர்களுடன் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
வளரந்த இந்தியாவாக மாறும்
நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார். நாம் உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறியுள்ள சூழலில் அடுத்த பத்து ஆண்டிற்குள் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறுவோம் என அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டில் இந்த நாடு வளரந்த இந்தியாவாக மாறும் என உறுதியாகக் கூறுவதாகத் தெரிவித்துப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இந்திய பாராலிம்பிக் குழுத் தலைவர் தீபா மாலிக், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் நிசித் பிரமானிக் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
2018-ம் ஆண்டு செயல்திறனைவிட 54 சதவீதம் அதிகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 29 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. அண்மையில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மொத்த பதக்க எண்ணிக்கை முந்தைய 2018-ம் ஆண்டு செயல்திறனைவிட 54 சதவீதம் அதிகமாகும். 29 தங்கப் பதக்கங்களை இப்போட்டியில் இந்தியா வென்றுள்ளது. இது 2018-ல் வென்றதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய பாராலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post ’’எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும்..!’’ பிரதமர் மோடி first appeared on Madras Murasu.
]]>The post ”உலகக் கோப்பையையும் வெல்லுமா இங்கிலாந்து அணி..?” first appeared on Madras Murasu.
]]>1992-க்குப் பிறகு, 2015 வரை இரு முறை மட்டுமே உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. 1996, 2011 என இரண்டு முறையும் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தது. 2015-ல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
2015 படுதோல்வி இங்கிலாந்தைப் பெரிதளவில் பாதித்தது. இதன் எதிரொலியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புரட்சியை உண்டாக்கிய இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து, 2019-ல் லார்ட்ஸில் உலகக் கோப்பையை ஏந்தியது. வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகளை அளித்தது, ஸ்டிரைக் ரேட்டை அதிகரித்தது, நிறைய வெள்ளைப் பந்து ஆட்டங்கள் விளையாடியது என இயான் மார்கன் தலைமையில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கான பலனையும் இங்கிலாந்து அனுபவித்தது.
இயான் மார்கன் ஓய்வுக்குப் பிறகும் இதே பாணியைக் கடைப்பிடித்து வரும் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. இதே முனைப்புடன் உலகக் கோப்பையையும் வெல்லுமா?
கடந்த உலகக் கோப்பைக்குத் தயார் ஆனதைப்போல இந்த முறை இங்கிலாந்து தயாராகவில்லையோ என்கிற எண்ணம் வருகிறது. மற்ற அணிகள் உலகக் கோப்பைக்காக 50 ஓவர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடத் திட்டமிட்டது. பிறகு உலகக் கோப்பைக்காக ஒரு டி20 ஆட்டம் குறைக்கப்பட்டு, ஒருநாள் தொடரில் கூடுதலாக ஒரு ஆட்டம் சேர்க்கப்பட்டது.
இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக மேத்யூ மாட் நியமிக்கப்பட்டதிலிருந்து இருநாடுகளுக்கு இடையிலான தொடர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
ஆஸ்திரேலிய அணி கடந்த இரு மாதங்களில் மட்டும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கும், வங்கதேசத்துக்கும் எதிராக 7 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஆசியக் கோப்பையை விளையாடிவிட்டு வருகின்றன.
இங்கிலாந்தோ கடந்த 13 மாதங்களில் வெறும் 9 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது.
காயம் காரணமாக இடைவெளி எடுத்துக்கொண்ட ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் உள்ளிட்டோர் கடந்தாண்டு ஜூலையில் தென்னாப்பிரிக்காவுடனான தொடருக்குப் பிறகு, நியூசிலாந்து தொடரில்தான் ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்கள். ஓய்விலிருந்து திரும்பி வந்துள்ள பென் ஸ்டோக்ஸும் கடைசியாக கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற அதே தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூசிலாந்து தொடரில் தான் விளையாடினார்.
2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 88 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து, 2019 – 2023 உலகக் கோப்பைகள் இடையே வெறும் 43 ஒருநாள் ஆட்டங்களில்தான் விளையாடியுள்ளது. கடைசியாக நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட அயர்லாந்துக்கு எதிரான தொடரில் உலகக் கோப்பைக்குத் தேர்வான வீரர்கள் விளையாடவில்லை.
கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த ஜோ ரூட் 2015 – 2019 உலகக் கோப்பைகள் இடையே 78 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். இதே ஜோ ரூட் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு வெறும் 19 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்த மாற்றம் வீரர்களின் செயல்பாடுகளிலும் வெளிப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடிய பேர்ஸ்டோ மொத்தம் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜோ ரூட் 4 ஆட்டங்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் பழைய ஃபார்மை மீட்டெடுப்பதற்காக, அயர்லாந்துக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில் மட்டும் சேர்த்துக்கொள்ளும்படி தாமாக கேட்டுக்கொண்டார் ஜோ ரூட். ஆனால், மழை காரணமாக அந்த ஆட்டமும் கைவிடப்பட்டது. இந்தியாவுடனான பயிற்சி ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. வங்கதேசத்துக்கு எதிராக களத்தில் நேரத்தை செலவிட்ட ரூட், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
இருந்தபோதிலும் பென் ஸ்டோக்ஸ் வருகை, மிக நீண்ட பேட்டிங் வரிசை, வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் எனப் பெரும் படையை வைத்துள்ளதால் இங்கிலாந்தும் அபாயகரமான அணியாகவே உள்ளது.
டேவிட் மலான் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 92.33 சராசரியில் 277 ரன்கள் குவித்துள்ளார். தொடக்க பேட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டால் கடைசி நேரத்தில் ஜேசன் ராய்-க்குப் பதில் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட இங்கிலாந்தின் புதிய நட்சத்திரம் ஹாரி புரூக் அதிரடி காட்ட உள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்து திரும்பி வந்ததுபோல் அல்லாமல் நியூசிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அவர் முழுநேர பேட்டராக மட்டுமே விளையாடுகிறார். என்றாலும்கூட அணியின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருப்பதே எதிரணிக்கு அழுத்தத்தை உண்டாக்கும்.
மொயீன் அலி, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுப்பது மட்டுமில்லாமல் சுழற்பந்துவீச்சில் ஒத்துழைக்கவுள்ளார்கள். லிவிங்ஸ்டன் சூழலுக்கு ஏற்ப ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் என இரண்டையும் வீசக் கூடியவர். பேட்டிங்கிலும் இவர் நல்ல ஃபார்மில் உள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ளதால் பிரதான சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் இந்த அணியில் மிக முக்கியமான தாக்கத்தை உண்டாக்கப் போகிறார். அனைத்து வகையான ஸ்பின் வகைகளும் இருப்பது இங்கிலாந்துக்குக் கூடுதல் பலம்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி பெரும்பாலும் ஒவ்வொரு பணிக்கும் இருவரை வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் இருக்கிறார்கள். இடக்கை வேகப்பந்துவீச்சுக்கு டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே இருக்கிறார்கள். சூழலுக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளைத் தருகிறது.
அதிவேகப்பந்துவீச்சுக்கு மார்க் வுட் இருக்கிறார். இந்தியாவில் நடைபெறுவதால் இவரது வேகம் இங்கிலாந்துக்கு நிச்சயமாக நடு ஓவர்களில் உதவும். உலகக் கோப்பைக்கான அணியில் இல்லாதபட்சத்திலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மாற்று வீரராக அணியுடன் பயணிக்கிறார்.
விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு பார்த்தால் தயார் நிலையில் இல்லாத அணியாகத் தோற்றமளித்தாலும், உலகக் கோப்பையை வெல்வதற்குத் தேவையான மிக நீண்ட பேட்டிங் வரிசை, ஆல்-ரவுண்டர்கள் என பலம் வாய்ந்த அணியாகவே இங்கிலாந்து உள்ளது.
இங்கிலாந்து அணி:
ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட், ஹாரி புரூக், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே, கஸ் அட்கின்சன்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக அக்டோபர் 29-ம் தேதி லக்னௌவில் விளையாடுகிறது. இதுதவிர, இங்கிலாந்து விளையாடும் பெரும்பாலான ஆடுகளங்கள் மும்பை, கொல்கத்தா, தரம்சாலா என பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களாகவே உள்ளன.
சூழல்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உலகக் கோப்பையைத் தக்கவைக்குமா இங்கிலாந்து..?
The post ”உலகக் கோப்பையையும் வெல்லுமா இங்கிலாந்து அணி..?” first appeared on Madras Murasu.
]]>The post ’’அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12.10.2023 அன்று சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த வீரர் – வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி, ஆற்றிய உரை வருமாறு:
சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்களைப் பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதற்காக நாம் இங்கே கூடி இருக்கிறோம்.
இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள் என்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அளவில் பார்த்தால் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு பதக்கங்களை வென்ற 20 விளையாட்டு வீரர்களுக்கு இன்று 9 கோடியே 40 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை பரிசுகள் வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அகில இந்திய அளவிலே, உலகளாவிலான போட்டிகளில் தொடர்ந்து உங்களது பங்களிப்பை செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியான பதக்கங்கள் பெறுவதும், தொடர் வெற்றிகளைப் பெறுவதும்தான் உங்களுக்கும் பெருமை; நமது தமிழ்நாட்டுக்கும் பெருமை; ஏன் இந்தியாவிற்கே பெருமை!
இந்தப் பாராட்டு உங்களுக்கும் உங்களது வெற்றிக்கும் மட்டுமல்ல; நீங்கள் இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று ஊக்கமளிக்கவும் – உங்களைப் போல இன்னும் பல வீர்கள் உருவாக அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் தான். உங்களைப் பார்த்து இன்னும் ஏராளமான வீரர்களும் வீராங்கனைகளும் உருவாவார்கள் என நம்புகிறேன்.
எந்தவொரு அரசாக இருந்தாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும். ஆனால் நம்முடைய திராவிட மாடல் அரசானது, அனைத்துத் துறைகளிலும் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலமாக, அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளர்த்து வந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று!
இந்தத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது. விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார். அந்தத் துறையின் கேப்டனாக இருந்து, அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அவருக்கும் அவரது துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த துறை உலகமே வியந்து பார்க்கும் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. அதில் மிக முக்கியமானது 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி. இனி யாரும் இப்படி நடத்த முடியாது என்று சொல்லத்தக்க வகையில் மெச்சத்தக்க வகையில் மிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்பாக நடத்தி முடித்துக் காட்டினோம். அதேபோல் இந்த இரண்டு ஆண்டுகளில், பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கும் மற்றும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,864 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 52 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
‘முதலமைச்சர் கோப்பை’ என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 15 வகையானப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில், மாவட்ட – மண்டல அளவில் இந்த ஆண்டு ஏறக்குறைய 3 லட்சத்து 71 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். மண்டல அளவிலான போட்டிகளில் 27 ஆயிரத்து 54 வீரர்- வீராங்கனைகள் பங்கெடுத்தார்கள். இந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு 50 கோடியே 86 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தோம். இதில் பரிசுத் தொகை மட்டும் 28 கோடியே 30 லட்ச ரூபாய்!
மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து ‘Tamil Nadu Champions Foundation’ என்கிற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களும் இதர அமைப்புகளும் அளிக்கும் கூட்டாண்மைச் சமூகப்பொறுப்பு நிதிகளை ஒன்றுதிரட்டி இதனைச் செய்யலாம். இதன் மூலமாக நம் மாநிலத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். இந்தப் போட்டியில் ஜப்பான், மலேசியா, ஹாங்காங், தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்கள் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023 நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டு உள்கட்டமைப்பில் அரசு அதிநவீன கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது, ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள கிராமங்களில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்களை அரசு அமைத்துவருகிறது. ஒருபுறம் துவக்க நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களையும், மறுபுறத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக்க நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதைப் போலவே, விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அவர்களையும், விளையாட்டுத் துறை அதிகாரிகளையும் நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். போட்டிகளில் கலந்து கொள்வது – விளையாடுவது என்பது உடல் வலிமையும் உள்ள வலிமையும் தொடர்புடையது! படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதில் பங்கெடுக்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும்.
‘அறிவை விரிவு செய்’ என்பதைப் போலவே, ‘உடலை உறுதி செய்’ என்பதும் நமது முன்னெடுப்பாக இருக்க வேண்டும். அறிவை விரிவு செய்ய பள்ளி – கல்லூரி அளவில் ஏராளமான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறோம். அதேபோல் உடலை உறுதி செய்ய அதற்கான முன்னெடுப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செய்ய வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாடு, முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்றும் கேட்டு, அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.
The post ’’அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’விளையாட்டு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!’’ first appeared on Madras Murasu.
]]>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்கும் மாநில விளையாட்டு சங்கங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுவருகிறது. அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களுக்கு தமிழ்நாட்டில், மாநில/தேசிய போட்டிகள் நடத்திடவும், தேசியப் போட்டிகளில் தமிழ்நாடு அணிகள் பங்கேற்பதற்கான மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல், மருத்துவம் மற்றும் பிற தொழில் முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு , அங்கீகரிக்கப்பட்ட மாநில சங்கங்கள் வழங்கும் விளையாட்டு போட்டிக்கான சான்றிதழ்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுவருகிறது.
The post ’’விளையாட்டு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!’’ first appeared on Madras Murasu.
]]>