acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’கல்லூரி ஆசிரியர் ஆக ஆசையா..?’’ உடனே செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசியர் வேலையில் சேர வேண்டும் என்றால் University Grants Commission, Council of Scientific & Industrial Research ஆகியவை நடத்ததும் National Eligibility Test -ல் பாஸ் ஆகி இருக்க வேண்டும். அல்லது, அந்தந்த மாநில உயர்கல்வித்துறை நடத்தும் STATE ELIGIBILITY TEST-ல் பாஸ் ஆக வேண்டும்.
நெட் தேர்வில் பாஸ் ஆனவர்கள் நாடு முழுவதும் உதவிப் பேராசிரியர் பணியில் சேர முடியும். ஆராய்ச்சி படிப்க்கு உதவித்தொகை பெறவும் இந்த நெட் தேர்வு சான்றிதழ் பயன்படும். மாநில அரசுகள் நடத்தும் STATE ELIGIBILITY TEST -ல் பாஸ் ஆகிறவர்கள், அந்தந்த மாநிலத்திற்குள் இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசியர் பணியில் சேர முடியும்.
அந்த வகையில், தமிழக உயர்கல்வித்துறை சார்பில் உதவி பேராசியர் தகுதி தேர்வினை இந்த ஆண்டு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதியில் தொடங்கும் விண்ணப்ப பதிவு, ஏப்ரல் 30 ஆம் தேதி முடிவடைகிறது.
முதுநிலை படிப்பு முடித்துள்ளோர், முதுநிலை படிப்பில் இறுதி செமஸ்டர் தேர்வினை எழுத இருப்போரும் இந்தத் தேர்வினை எழுதலாம். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய பிரிவுகளில் வரும் விண்ணப்பத்தாரர் முதுநிலை படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பொதுப்பிரிவின் கீழ் வரும் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் 2,500 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் என்ற பிரிவின் கீழ் வருவோர், 2 ஆயிரம் ரூபாயும் ஆதிதிராவிடர், அருந்ததியர், மாற்றுத்திற்னாளிகள் 800 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்கள், கட்டணம் செலுத்த வேண்டாம்.
கலை, அறிவியல் பிரிவுகளில் மொத்தம் 43 பாடங்களுக்கு உதவிப் பேராசியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. கொள்குறி வகையிலான இந்த தேர்வில் முதல் பேப்பர் அனைவருக்கும் பொதுவானது. மொத்தம் 50 கேள்விகள் கேட்க்கப்படும். இரண்டாம் பேப்பர் என்பது அவரவர் படித்த பாடத்தை சேர்ந்தது. பாடப்பகுதியில் இருந்து 100 கேள்விகள் கேட்க்கப்படும். இத்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி வரை https://msutnset.com/ என்ற இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு ஜூன் 3 ஆம் தேதி முதல், ஜுன் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு குறித்த முழு அறிவிப்பை படிக்க இங்கே கிளிக் TNSET2024_Notifications செய்யவும்
The post ’’கல்லூரி ஆசிரியர் ஆக ஆசையா..?’’ உடனே செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’B.Arch., பி.ஆர்க்., படிக்க ஆசையா..?’’ நாட்டா தேர்வு அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.
]]>படிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,)
கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,), தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்க்கை பெற ‘நாட்டா’ மதிப்பெண் முக்கியம். நாடு முழுவதும் 375 கல்வி நிறுவனங்களில் நாட்டா தேர்வு மதிப்பெண் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ( Presently, there are about 375 Institutions imparting architectural education in India leading to recognized qualifications. The minimum standards of education to be imparted in architectural institutions (constituent colleges / departments of universities, deemed universities, affiliated colleges / schools, IITs, NITs and autonomous institutions).
தகுதிகள்: 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். இவற்றில் எதுவாயினும், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். i) Passed or appearing in 10+1 Examination with PCM Subjects; ii) Passed or appearing in 10+2 Examination with PCM subjects: iii) Passed or appearing in 10+3 Diploma Examination with Mathematics as subjects:
தேர்வு முறை: ’பகுதி-ஏ’ பிரிவில் 80 மதிப்பெண்ணிற்கு மாணவர்களின் டிராயிங் மற்றும் காம்போசிஷன் தேர்வு நடத்தப்படுகிறது. பகுதி – பி பிரிவில் விஷ்வல் லாஜிக்கல் டெரிவேஷன், ஆர்க்கிடெக்ச்சர் மற்றும் டிசைன் சார்ந்த பொது அறிவு லாங்குவேஜ், நியூமெரிக்கல் எபிலிட்டி, டிசைன் திங்கிங் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 120 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இடம்பெறுகின்றன. இத்தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில், பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: https://nata.thinkexam.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர், புதுச்சேரி, ஹைதராபாத், பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தேர்வு நாள்: ஏப்ரல் 6 அன்று தொடங்குகிறது (weekends starting from April to July, 2024) . நாட்டா நுழைவுத் தேர்வு குறித்த பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை, முந்தைய வினாத்தாள் போன்ற கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே NATA_BROCHURE_2024_B.Arch_Exam கிளிக் செய்ய வேண்டும். விபரங்களுக்கு: www.nata.in https://www.nata.in/
நாட்டா தேர்வு முக்கிய குறிப்பு : ஓர் ஆண்டுக்கு மூன்று முறை நாட்டா தேர்வு நடத்தப்படும். அதில் பெஸ்ட் மார்க், ’பி.ஆர்க்.,” படிப்பு சேர்க்கையின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்கோர் கார்டு இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு செல்லும். இப்போது மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து நாட்டா தேர்வுக்கு ஆன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
The post ’’B.Arch., பி.ஆர்க்., படிக்க ஆசையா..?’’ நாட்டா தேர்வு அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.
]]>The post திருவாரூர் மத்திய பல்கலைக்கழம் மாணவர் சேர்க்கை..!’’ நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.
]]>இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை இத்தேர்வுகளை நடத்துகின்றன.
அறிமுகம்:
சி.யூ.இ.டி., – யு.ஜி., எனும் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வாயிலாக, மத்திய பல்கலைக்கழகங்கள், நாடு முழுவதும் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பிற பங்கேற்கும் நிறுவனங்களில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதிகள்: 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்வு எழுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை.
தேர்வு முறை:
இத்தேர்வு ஹைப்ரிட் முறையில், சி.பி.டி., எனும் கணினி அடிப்படையிலான தேர்வு அல்லது பேனா, காகித முறையிலான தேர்வாக நடத்தப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பதிவுகளைக் கொண்ட பாடங்களுக்கு, ஆப்டிகல் மார்க் ரெகக்னிஷன் – ஓ.எம்.ஆர்., வடிவத்தை பயன்படுத்தி பேனா மற்றும் காகித முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு கணினி அடிப்படையிலானதாக நடத்தப்படுகிறது.
பாடத்திட்டம்:
மொழி பாடம், துறை சார்ந்த பாடம் மற்றும் பொது தேர்வு ஆகிய பாடங்கள் இடம் பெறும். பொது தேர்வை பொறுத்தவரை, பொது அறிவு, சமீப நிகழ்வுகள், பொது மனத்திறன், எண் திறன், குவாண்டிடேட்டிவ் ரீசனிங், லாஜிக்கல் அண்டு அனலெட்டிக்கல் ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து கேளிவிகள் கேட்கப்படுகிறது. கேள்விகள் அனைத்தும் &’மல்டிபில் சாய்ஸ்’ வடிவில் இடம்பெறும்.
தேர்வு மொழி:
ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு மையம்:
வெளிநாட்டில் உள்ள 26 நகரங்கள் உட்பட 380 நகரங்களில் உள்ள மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: https://cuetug.ntaonline.in/frontend/web/registration/index எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். Website(s) www.nta.ac.in https://exams.nta.ac.in/CUET-UG/
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 26 https://cuetug.ntaonline.in/ . விண்ணப்பம் செய்யும் போது ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால், அதை மார்ச் 28 , 29 ஆகிய தேதிகளில் திருத்திக் கொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் நாட்கள்: மே 15 முதல் 31 வரை
நுழைவுத் தேர்வு குறித்த முழுமையான விபரங்கள், தேர்வு பாடத்திட்டம், மாநிலம் வாரியாக மாணவர்களை சேர்க்கை நடக்கும் பல்கலைக்கழங்கள், சேர்க்கை கட்டணம் போன்ற விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் cuet-ug-ib_2024 செய்ய வேண்டும்.
நுழைவுத் தேர்வு நடக்கும் மொழிகள் : Assamese, Bengali, English, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Punjabi, Odia, Tamil, Telugu, and Urdu என்று 13 மொழிகளில் நுழைவுத் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், ஆங்கிலம் அல்லது தமிழ் என்று அவரவர் விரும்பும் மொழிகளில் எழுதலாம். எனவே, கிராமப்புற மாணவர்கள், கண்டிப்பாக இத்தேர்வை தமிழ் வழியிலேயே எழுத முடியும். மிக குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி கற்க முடியும்.
Name of Central Universities:
1 Aligarh Muslim University
2 Assam University
3 Babasaheb Bhimrao Ambedkar University
4 Banaras Hindu University
5 Central University of Andhra Pradesh
6 Central University of South Bihar
7 Central University of Gujarat
8 Central University of Haryana
9 Central University of Himachal Pradesh
10 Central University of Jammu
11 Central University of Jharkhand
12 Central University of Karnataka
13 Central University of Kashmir
14 Central University of Kerala
15 Central University of Odisha
16 Central University of Punjab
17 Central University of Rajasthan
18 Central University of Tamil Nadu
19 Dr. Harisingh Gaur Vishwa Vidyalaya
20 Guru Ghasidas Vishwavidyalaya
21 Hemvati Nandan Bahuguna Garhwal University
22 Indira Gandhi National Tribal University
23 Jamia Millia Islamia
24 Jawaharlal Nehru University
25 Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya
26 Manipur University
27 Maulana Azad National Urdu University
28 Mizoram University
29 Nagaland University
30 North Eastern Hill University
31 Pondicherry University
32 Rajiv Gandhi University
33 Sikkim University
34 Tezpur University
35 The English and Foreign Languages University
36 Tripura University
The post திருவாரூர் மத்திய பல்கலைக்கழம் மாணவர் சேர்க்கை..!’’ நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியானது first appeared on Madras Murasu.
]]>The post ”பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு CUET (UG) – 2024 first appeared on Madras Murasu.
]]>இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர், தேசிய தேர்வு முகமையின் https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற தளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மார்ச் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 28 ஆம் தேதி வரை, விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பிறகு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
மே இரண்டாவது வாரத்தில் தேர்வுக் கூடச் சீட்டினை பதிவுறக்கம் செய்து கொள்ளலாம். மே 15 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை பொதுத் நுழைவுத் தேர்வு நடைபெறும். ஜுன் 30 ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும். தேர்வு குறித்த அனைத்து தகவல்களுக்கும் www.nta.ac.in, https://exams.nta.ac.in/CUETUG/ என்ற தளத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
இத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு மாணவ – மாணவியர் தங்களது விரும்பும் பாடம், மொழி, பொது அறிவு என்று மூன்று பிரிவுகளில் தேர்வு பாடத்திட்டம் இருக்கும். மொழிகள் பிரிவில் 33 மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 27 விருப்ப பாடங்கள் உள்ளன. இந்த இரண்டில் இருந்தும் 50 கேள்விகள் கொடுக்கப்படும். அதில், 40 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும்.
பொது அறிவு பகுதியில் இருந்து 60 கேள்விகள் கேட்க்கப்படும். அதில் இருந்து 50 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும்.
போது நுழைவுத்தேர்வு முழுவிபரம் அறிய கிளிக் செய்து படிக்கவும் CUET-UG-2024-Notification
இந்த தேர்வின் மூலம் இளநிலை படிப்புகளில் மாணவர் – மாணவியர் சேர்க்கை நடத்தும் பல்கலைக்கழகங்கள் விபரம்:
1.Aligarh Muslim University
2.Assam University
3.Babasaheb Bhimrao Ambedkar University
4.Banaras Hindu University
5.Central University of Andhra Pradesh
6.Central University of South Bihar
7.Central University of Gujarat
8.Central University of Haryana
9.Central University of Himachal Pradesh
10.Central University of Jammu
11.Central University of Jharkhand
12.Central University of Karnataka
13.Central University of Kashmir
14.Central University of Kerala
15.Central University of Odisha
16.Central University of Punjab
17.Central University of Rajasthan
18.Central University of Tamil Nadu
19.Dr. Harisingh Gaur Vishwa Vidyalaya
20.Guru Ghasidas Vishwavidyalaya
21.Hemvati Nandan Bahuguna Garhwal University
22.Indira Gandhi National Tribal University
23.Jamia Millia Islamia
24.Jawaharlal Nehru University
25.Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya
26.Manipur University
27.Maulana Azad National Urdu University
28.Mizoram University
29.Nagaland University
30.North Eastern Hill University
31.Pondicherry University
32.Rajiv Gandhi University
33.Sikkim University
34.Tezpur University
35.The English and Foreign Languages University
36.Tripura University
37.University of Allahabad
38.University of Delhi
39.University of Hyderabad
40.Visva Bharati University
41.Mahatma Gandhi Central University
42.Central Sanskrit University, Delhi
43.Shri Lal Bahadur Shastri National Sanskrit University
44.National Sanskrit University
The post ”பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு CUET (UG) – 2024 first appeared on Madras Murasu.
]]>The post விஐடி-யில் பிடெக் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>வேலூரில் 1984 ஆம் ஆண்டு வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. 2001-ல் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. சென்னை கேளம்பாக்கத்தில் விஐடி வளாகம் தொடங்கப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் அமராவதி, மத்தியப்பிரதேசத்தில் போபால் ஆகிய இடங்களில் விஐடி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.
நிகர்நிலைப் பல்கலைக்கழகமான விஐடியில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் பி.டெக். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பவர்களுக்கு இலவசமாக கல்வியும் அடுத்தடுத்த இடங்களைப் பிடிப்பவர்களுக்கு, கட்டணத்தில் சலுகையும் வழங்கப்படுகிறது. நுழைவுத் தேர்வு ஏப்ரல் 19 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 30 கடைசித் தேதி ஆகும். நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 3 ஆம் தேதி வெளியாக உள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான பொறியியல் இளநிலை பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு விஐடிஇஇஇ- 2024 (VITEEE 2024) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் அல்லது உயிரியல் பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும்.
இந்தியாவில் உயர் கல்வியில் முன்னணி கல்வி நிறுவனமாக இருக்கும் விஐடியில் பிடெக் படிப்பில் சேர விஐடி நடத்தும் நுழைவுத்தேர்வு கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும். எனவே, விஐடி-யில் படிக்க விரும்புவோர் உடனே விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு விதிமுறைகள், பாடத்திட்டம், விண்ணப்பித்தல் என அனைத்திற்கும் https://viteee.vit.ac.in/ என்ற இணையத்தை க்கிளிக் செய்து பார்க்க வேண்டும்.
பிளஸ் டூ மாணவர்களே..! உங்களது பொதுத்தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டாம். நீங்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
The post விஐடி-யில் பிடெக் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’வக்கீல் படிப்புக்கு கிளாட் நுழைவுத் தேர்வு – நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்..!’’ first appeared on Madras Murasu.
]]>தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர ‘கிளாட்’ எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்.எல்.பி மற்றும் எல்.எல்.எம் படிப்புகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், மத்திய அரசின் பணிகளுக்கும் இந்த தேர்வு முக்கியமான ஒன்று.
அதேபோல தேசிய சட்டப்பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின்அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
இந்நிலையில், 2024-25-ம் கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க இருப்பதையொட்டி, கிளாட் தேர்வு வரும் டிச.3-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் நவம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இப்போது, கடைசி தேதி நவம்பர் 10 வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.4 ஆயிரமும், எஸ்சி, எஸ்டிபிரிவினர் ரூ.3,500-ம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8047162020 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். Email: clat@consortiumofnlus.ac.in கிளாட் தேர்வுக்கு விண்ணப்பிக்க https://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியில் ஆன்லைனில் தொடர்பு கொள்ள வேண்டும்.
திருச்சி தேசிய சட்டப்பள்ளி மற்றும் மத்திய அரசின்கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இந்த கிளாட் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், வேலூர் விஐடி, தஞ்சாவூர் சாஸ்திரா போன்ற தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் இந்த கிளாட் மதிப்பெண் அடிப்படையில் சட்ட மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. அனால், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் இந்த நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post ’’வக்கீல் படிப்புக்கு கிளாட் நுழைவுத் தேர்வு – நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்..!’’ first appeared on Madras Murasu.
]]>The post ’’JEE-Main 2024 தேர்வு அறிவிப்பு வெளியானது..!’’ நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>ஜேஇஇ மெயின் தேர்வு குறித்த விபரம் வருமாறு:
ஜேஇஇ -மெயின் (கூட்டு நுழைவுத் தேர்வு) இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் 1 (பி.இ./பி.டெக்.) என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி.யில் இளங்கலைப் பொறியியல் படிப்புகளில் (பி.இ/பி. டெக்) சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI-கள்), நிதியளிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கும் இத்தேர்வு மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும்.
தாள் 2 என்ற தேர்வு, பல்வேறு நிறுவனங்களில் B.Arch மற்றும் B.Planning படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது. JEE முதன்மை 2024 ரேங்க் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் 2,50,000 ரேங்க் வைத்திருப்பவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுத தகுதியுடையவர்கள். இந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மூலம்தான் சென்னை, முன்பை, டெல்லி போன்ற இடங்களில் உள்ள உலகப்புகழ்பெற்ற மத்திய அரசின் ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
JEE MAIN 2024 தேர்வு முறை

தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?
இயற்பியல் தயாரிப்புக்கான சிறந்த குறிப்பு புத்தகங்கள்:
NCERT புத்தகங்கள் – வகுப்பு 11 மற்றும் 12
HC வர்மா – இயற்பியல் தொகுதி I மற்றும் II கருத்துகள்IE Irodov – பொது இயற்பியலில் சிக்கல்கள்
ஹாலிடே, ரெஸ்னிக் மற்றும் வாக்கர் – இயற்பியலின் அடிப்படைகள்
JEE முதன்மை 2024 வேதியியல் தயாரிப்புக்கான சிறந்த குறிப்பு புத்தகங்கள்
NCERT புத்தகங்கள் – வகுப்பு 11 மற்றும் வகுப்பு 12
பி. பகதூர் எழுதிய எண் வேதியியல்
ஆர்கானிக் கெமிஸ்ட்ரி – ஜேடி லீ
கனிம வேதியியல் – மோரிசன் மற்றும் பாய்ட்
JEE முதன்மை 2024 கணிதத் தயாரிப்புக்கான சிறந்த குறிப்புப் புத்தகங்கள்
JEE முதன்மை 2024 கணிதத் தயாரிப்புக்கான சிறந்த குறிப்புப் புத்தகங்கள்
NCERT புத்தகங்கள் – வகுப்பு 11 மற்றும் 12
SL லோனி – முக்கோணவியல்
SL லோனி – ஒருங்கிணைப்பு வடிவியல்
ஹால் மற்றும் நைட் – உயர் அல்ஜீப்ரா
IA மரோன் – ஒரு மாறியின் கால்குலஸில் உள்ள சிக்கல்கள்
நவம்பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி, தேர்வுகள் நடைபெறும்.
ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் இத்தேர்வு குறித்த விபரங்களை அறிய https://jeemain.nta.ac.in/# என்ற இணையத்தை பார்க்கவும்.
The post ’’JEE-Main 2024 தேர்வு அறிவிப்பு வெளியானது..!’’ நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் first appeared on Madras Murasu.
]]>The post ’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.
]]>தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2017-ஆம் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பயிற்சி பெற்றால் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதற்காக குறைந்தது ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாதவர்கள் மருத்துவம் பயில்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
இவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து படித்து, நீட் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. ஏனெனில், பல இலட்சம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இந்தியா முழுவதும் சில ஆயிரம் இடங்கள்தான் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் அனைத்திந்திய தரவரிசை பட்டியலில் இருக்குமிட எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல தரவரிசையில் இடம்பெறுவோர் மட்டுமே இப்படிப்புகளில் சேர முடியும்.
சான்றாக, 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய 14.10 லட்சம் பேரில் 7.04 லட்சம் பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். அரசுக் கல்லூரிகளில் 30,455 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 36,165 இடங்களும் என மொத்தம் 66 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 30 ஆயிரம் தரவரிசை வரை உள்ளவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அடுத்து 36 ஆயிரம் பேர் அடுத்த ரேங்க் வரிசைப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடிப்பார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதியுள்ள 6 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இடம் கிடையாது. அவர்கள் செலவு செய்த பல லட்சம் ரூபாயும் வீண்தான்.
இந்தியா முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,947 எம்.பி.பி.எஸ். மற்றும் 985 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அனைத்திந்திய தேர்வான நீட் வழியாகத் தேர்வு செய்யப்படும்போது, கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒன்றாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திக்காரர்களும், பிற மாநிலத்தவரும் எளிதில் இடம் பெற்று விடுவார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்கள், நீட் தேர்வில் பயிற்சி பெற்ற பலர் உட்பட புறக்கணிக்கப்படுவார்கள். உயர்கல்வியில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்திற்கு நீட் தேர்வு வழிவகுக்கிறது.
நீட் தேர்வு என்பது அநீதி என்பதால் தான், அத்தகைய நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்பதால் தான், அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக, 2021 செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதை ஆளுனர் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.
நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 20 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த சட்டம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு 17 மாதங்களாகி விட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
இத்தகைய அறிவிப்பு வரவேற்கதக்கதாக இருந்தாலும், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டிய நாடகமாக என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. ஏனெனில், ஆட்சியின் கடைசி தருணத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தான் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
தற்போது நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்று அறிவித்துள்ளதால், தனியாரில் காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் நிரப்பலாம். இதற்கு ஏன் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதைவிட தமிழ்நாடு அரசு ஏற்கெனவே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்திய தேர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
எனவே, சமூக நீதியைக் காப்பதிலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்குவதற்கு மாற்றாக, அத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
அதாவது, நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்பதற்கு பதிலாக, அத்தேர்வு முறையை அடியோடு ஒழிப்பதே சிறந்த தீர்வாகும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்தாகும். இதனை தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
The post ’’சமூக நீதியைக் காப்பதில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்க..! பண்ருட்டி தி.வேல்முருகன் first appeared on Madras Murasu.
]]>The post ’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது பயிற்சியை முன்கூட்டியே தொடங்குவது தான் சரியான செயலாக இருக்கும்.
சமூகநீதிக்கு எதிரான நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; 12&ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. எனினும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் நீட் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத அரசு பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்வது தான் அரசின் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றுவது கடந்த காலங்களில் இருந்ததை விட, இப்போது சவாலானதாக மாறியிருக்கிறது என்பது தான் ஆய்வுகள் சொல்லும் உண்மை.
நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வது கடினமானதாக மாறியுள்ளது. நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களைத் தவிர, பொதுப்பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட சேரவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்களில் கூட 20% மாணவர்கள் மட்டும் தான் முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள். மீதமுள்ள 80% மாணவர்கள் அரசு பள்ளிகளில் 12&ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்ற பிறகே நீட் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 7.50% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்றாலும் கூட தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்வாய்ப்புக்கேடானது ஆகும். இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீர்வு, தனியார் பயிற்சி மையங்களில் அளிப்பதை விட தரமான பயிற்சியை தமிழக அரசு பள்ளிகளில் வழங்குவது தான். ஆனால், தவிர்க்கவே முடியாத இந்தத் தீர்வை செயல்படுத்த வேண்டியதன் தேவையை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உணர்ந்ததாக தெரியவில்லை.
அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின் 2021&22ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகங்களிலும், 15 மாதிரி பள்ளிகளில் எலைட் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேற்கண்ட இரு வகை பயிற்சிகளிலும் பல குறைபாடுகள் இருந்தன என்பதை எவரும், எங்கும், எப்போதும் மறுக்க முடியாது. இந்தக் குறைகளை களையும் வகையில் கடந்த ஆண்டு வட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் 415 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாக 14 நாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதால் அதுவும் பயனளிக்கவில்லை.
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் வசதி படைத்த மாணவர்கள் குறைந்தது இரு ஆண்டுகள் முதல் நான்கு ஆண்டுகள் வரை தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர். அந்தப் பயிற்சிக்குப் பிறகு முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால், மீண்டும் ஓரிரு ஆண்டுகள் பயிற்சி பெறுகின்றனர். இவ்வாறாக நீட் தேர்வில் வெற்றி பெற பலரும் 6 ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டியிருக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 14 நாட்கள் பயிற்சி கொடுப்பது எந்த வகையில் போதுமானதாக இருக்கும். அதனால் தான் அரசு பள்ளி மாணவர்களால் பொதுப்பிரிவு இடங்களில் தகுதி பெற முடியவில்லை என்பதுடன், 7.50% ஒதுக்கீட்டிலும் 80% இடங்களை தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது.
நீட் விலக்கு பெறும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலம் பயிற்சி அளிக்க வேண்டியதன் தேவையை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். அதற்காக 11 ஆம் வகுப்பு தொடங்கிய வாரம் முதல், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்து நீட் தொடங்குவதற்கு முந்தைய வாரம் வரை இரு ஆண்டுகளுக்கு முழுமையான பயிற்சியை திறமையான ஆசிரியர்கள், வல்லுனர்களைக் கொண்டு அரசு வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டில் வட்டத்திற்கு ஒரு மையத்தில் மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் வட்டத்திற்கு இரு மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு கையேடு மற்றும் வினா – விடை தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும். நடப்பாண்டிற்கான பயிற்சி வகுப்புகளை அடுத்த வாரத்திலேயே தொடங்குவதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post ’’11 ஆம் வகுப்பு முதல் ’நீட் தேர்வு’ பயிற்சி தொடங்க வேண்டும்..!’’ டாக்டர் ராமதாஸ் first appeared on Madras Murasu.
]]>The post ’’இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர்வது எப்படி..?’’ first appeared on Madras Murasu.
]]>இத்தேர்வு பற்றிய விபரம் வருமாறு:
’’டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் ) சேருவதற்கான தேர்வு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும்.
எழுத்துத் தேர்வானது ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.
இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை “கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 ” என்ற முகவரிக்கு வரைவோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி இணையவழியான www.rimc.gov.in மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வரைவோலை மூலமாக (By sending Demand Draft: கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண் 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து ” கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடுன் ” அவர்களுக்கு வரைவோலைக்குரிய கிளை எச்.டி.எப்.சி. வங்கி, பல்லூபூர் சௌக், டேராடுன் (வங்கிக் குறியீடு – 1399) உத்தரகாண்டில் செலுத்தத்தக்க வகையில் பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூபாய் 555/-க்கான வரைவோலையை அனுப்பி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இணையவழி மூலமாக (on-line payment) : கல்லூரியின் இணையவழியான www.rimc.gov.in மூலமாக பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூபாய் 555/- யையும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு விரைவு அஞ்சல் வாயிலாக இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 லிருந்து அனுப்பப்படும்).
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட விண்ணப்பப்படிவங்கள், ஒளிநகல் எடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவமோ அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவமோ நிராகரிக்கப்படும்.
அஞ்சல் துறையின் தாமதத்திற்கு இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி பொறுப்பல்ல. தவறான அல்லது முழுமையடையாத முகவரியால் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு போக்குவரத்தில் ஏற்படும் அஞ்சல் துறையின் தாமதம் அல்லது இழப்புக்கு இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி பொறுப்பேற்காது
எந்தவொரு சூழ்நிலையிலும் விண்ணப்பக் கட்டணம் திரும்பச் செலுத்தப்படமாட்டாது
விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின் மற்றும் சிறுமியர்களின் ) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01- 07-2024 அன்று 11/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-07-2011 க்கு முன்னதாகவும் 01-01-2013 – க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக்கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01-07-2024- ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் (Recognised School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை – 600 003 என்ற முகவரிக்கு 15.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை அதாவது www.rimc.gov.in-ல் பார்க்கவும்’’ என்று அதன் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
The post ’’இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர்வது எப்படி..?’’ first appeared on Madras Murasu.
]]>