Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
தேர்வு முடிவுகள் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Mon, 14 Aug 2023 05:09:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%81%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%2595 https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%81%e0%ae%95/#respond Mon, 14 Aug 2023 05:09:50 +0000 https://madrasmurasu.com/?p=5960 “மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கும், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது […]

The post ’’இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
“மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கும், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.

நன்றாகப் படிக்கும் மகன், மருத்துவர் ஆவான் என்று தான் அவரைப் பெற்ற பெற்றோர் நினைத்திருப்பார்கள். ஆனால் நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்துவிட்டது மிகக் கொடூரமான நிகழ்வாகும்.

எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எந்த மாணவரும், எப்போதும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உயர்வுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும். அதற்கான சட்ட ரீதியான முயற்சியில்தான் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
ஒரு முறையல்ல, இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். முதலில் அனுப்பி வைக்கும் போது காலம் கடத்தினார். பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். இரண்டாவது முறை அனுப்பி வைத்தால் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் அதனை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். எங்காவது போய் அந்த மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பது தான் ஆளுநர் ரவியின் மோசமான எண்ணம் ஆகும்.

நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் பணம் கட்டிப் படித்தால் வெற்றி பெறக் கூடிய தேர்வு முறையாக இருக்கிறது. அப்படி பணம் கட்டி படிக்க முடியாதவர்கள் தோற்றுப் போகிறார்கள். பணம் கட்டி இரண்டு மூன்று ஆண்டுகள் படிக்க பணம் வைத்திருப்பவர்களால் வெற்றி பெற முடிகிறது. குறைவான மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி என்ற தகுதியைப் பெற்று விட்டவர்களும், பணம் வைத்திருந்தால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலைமை உள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது பணம் படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.

அதை மீறி இதனுள் நுழையும் ஏழை எளிய – அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் சேர்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இது எதுவும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் தெரியவில்லை. புரிந்து கொள்ள மறுக்கிறார். அல்லது பயிற்சி நிறுவங்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.

ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்குக் கையெழுத்து போடாமல் இருந்த நேரத்தில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே சந்தித்தார். இப்போது ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு நாள்தோறும் மாணவர்களை வரவழைத்து கோச்சிங் செண்டரைப் போல பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

அவரிடம் நேருக்கு நேராகவே சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி கேட்டார். அதற்கு ஆளுநரால் பதிலளிக்க முடியவில்லை. ‘நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்துப் போட மாட்டேன்’ என்று ஆளுநர் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அவரது அறியாமைதான் தெரிகிறது. அவரது கையெழுத்துக்காக இந்த மசோதா காத்திருக்கவில்லை. அது குடியரசுத் தலைவரிடம் தான் நிற்கிறது. இந்தச் சட்டத்தைப் பொறுத்த வரையில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏதோ அதிகாரம் இருப்பதைப் போல அவர் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டு இருக்கிறார்.
ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை.

இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். ‘கையெழுத்து போடமாட்டேன்’ என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்.
மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மறைவுக்கும் எனது ஆழமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது மரணமே, நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும்.

அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்ந்து காட்டுங்கள். பிறரையும் வாழ வையுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

The post ’’இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை..!’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%81%e0%ae%95/feed/ 0
’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ https://madrasmurasu.com/5895-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5895-2 https://madrasmurasu.com/5895-2/#respond Wed, 09 Aug 2023 10:15:07 +0000 https://madrasmurasu.com/?p=5895 நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் […]

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணையதள வசதிகள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, “நம் பள்ளி நம் பெருமை”, “எண்ணும் எழுத்தும்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்”, “அனைவருக்கும் ஐஐடி” போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்” என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களான இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT), தேசிய பேஷன் தொழில்நுட்ப கழகம் (NIFT), இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU), தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் கல்வி பயின்றிட JEE, CUET, National Aptitude Test in Architecture போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள அரசு பள்ளிகளைச் சார்ந்த சுமார் 225 மாணவ, மாணவியர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் அவர்களின் கல்விச் செலவினத் தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. இதன்மூலம் அம்மாணவ, மாணவியர் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி பயில இயலும்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் 25 மாதிரிப் பள்ளிகள் (Model Schools) தொடங்கப்பட்டது. இம்மாதிரிப் பள்ளிகள் அனைத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், முதன்மைக் கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில விருப்பமுள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, தற்போது 38 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளின் காரணமாக இன்றைக்கு சுமார் 225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயில முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, அரசுப் பள்ளி மாணவர்களாலும் அத்தகைய முன்னோடி கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில முடியும் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், தைவான் நாட்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவி ஜெயஸ்ரீ பேசியபோது, தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பெற்று தைவான் நாட்டின் குன் ஷான் (Kun Shan) பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயந்திர பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்து கடல் கடந்து வேறொரு நாட்டிற்கு கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும், “நான் முதல்வன்”, “இல்லம் தேடி கல்வி”, “புதுமைப் பெண்”, “வானவில் மன்றம்” போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தன்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் -க்கு, மாணவச் சமுதாயத்தின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

The post ’’அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/5895-2/feed/ 0
“நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது..!” பிரதமர் மோடி https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/#respond Sun, 28 May 2023 09:06:32 +0000 https://madrasmurasu.com/?p=2768 “நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம்  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத்  மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வு பற்றிப் பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது; “நாட்டு மக்களாகிய நம் அனைவருக்கும் இன்று மறக்க முடியாத நாள். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது. இந்த தெய்வீகமான, அற்புதமான கட்டடம், மக்களின் […]

The post “நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது..!” பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>

“நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம்  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத்  மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வு பற்றிப் பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“நாட்டு மக்களாகிய நம் அனைவருக்கும் இன்று மறக்க முடியாத நாள். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது. இந்த தெய்வீகமான, அற்புதமான கட்டடம், மக்களின் அதிகாரத்துடன், தேசத்தின் வளம் மற்றும் வலிமைக்குப் புதிய வேகத்தையும் பலத்தையும் தரும் என்று நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன்.”

“இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்ட நிலையில், நமது இதயங்களும் மனங்களும் பெருமை, நம்பிக்கை மற்றும் வாக்குறுதியால் நிரம்பியுள்ளன. வரலாற்றுச் சின்னமான இந்தக் கட்டடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும், கனவுகளைத் தூண்டி அவற்றை நனவாக்கட்டும்.  மகத்தான  நமது தேசத்தை முன்னேற்றத்தின் புதிய உச்சத்திற்கு இது கொண்டு செல்லட்டும்.”

The post “நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது..!” பிரதமர் மோடி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
’’சிபிஎஸ்இ ரிசல்ட் இன்று வெளியானது..!’’ https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%87-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%2587-%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%87-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/#respond Fri, 12 May 2023 05:44:05 +0000 https://madrasmurasu.com/?p=1653 சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்டன. இரண்டு வகுப்புகளுக்கும் பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்வுகள் தொடங்கின. 10ஆம் வகுப்புக்கு மார்ச் 21ஆம் தேதியும் 12- ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 5ஆம் தேதியும் தேர்வுகள் முடிவடைந்தன. 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வை 21,86,940 மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பு தேவ்வை 16,96,770 மாணவர்களும் தேர்வெழுதினர். […]

The post ’’சிபிஎஸ்இ ரிசல்ட் இன்று வெளியானது..!’’ first appeared on Madras Murasu.

]]>
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்டன. இரண்டு வகுப்புகளுக்கும் பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்வுகள் தொடங்கின. 10ஆம் வகுப்புக்கு மார்ச் 21ஆம் தேதியும் 12- ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 5ஆம் தேதியும் தேர்வுகள் முடிவடைந்தன.

38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வை 21,86,940 மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பு தேவ்வை 16,96,770 மாணவர்களும் தேர்வெழுதினர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

பின்வரும் இணையதளங்களுக்குச் சென்று பார்க்கலாம். பார்க்கலாம்:

https://cbseresults.nic.in·

https://cbseresults.nic.in/

The post ’’சிபிஎஸ்இ ரிசல்ட் இன்று வெளியானது..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%87-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/feed/ 0
“தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டு சகோதரி நந்தினி..!” அண்ணாமலை புகழாரம் . https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/#respond Wed, 10 May 2023 01:05:53 +0000 https://madrasmurasu.com/?p=1471 பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை : எளிய பின்னணியிலிருந்து வந்து, தமிழகத்திலேயே முதன்முறையாக, பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து, கல்வியில் சாதிக்க எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சகோதரி நந்தினி. தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகச் சகோதரி நந்தினி விளங்குகிறார். அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மேலும் பல சாதனைகள் செய்து, அவரது பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தர வாழ்த்துகிறேன்.

The post “தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டு சகோதரி நந்தினி..!” அண்ணாமலை புகழாரம் . first appeared on Madras Murasu.

]]>
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை :

எளிய பின்னணியிலிருந்து வந்து, தமிழகத்திலேயே முதன்முறையாக, பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து, கல்வியில் சாதிக்க எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சகோதரி நந்தினி.

தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகச் சகோதரி நந்தினி விளங்குகிறார்.

அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

மேலும் பல சாதனைகள் செய்து, அவரது பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தர வாழ்த்துகிறேன்.

The post “தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டு சகோதரி நந்தினி..!” அண்ணாமலை புகழாரம் . first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/feed/ 0
“திண்டுக்கல் வருகிறேன்; தங்கப் பேனா தருகிறேன் !” – முதல் மாணவிக்கு வைரமுத்து வாழ்த்து https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/#respond Tue, 09 May 2023 18:05:36 +0000 https://madrasmurasu.com/?p=1457 தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை 12-ம் வகுப்பு, 2022 – 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வை கடந்த மார்ச் 13- ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் 8 -ந்தேதி வெளியானது. பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். மேலும், மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் என மொத்தம் 94% பேர் தேர்ச்சி […]

The post “திண்டுக்கல் வருகிறேன்; தங்கப் பேனா தருகிறேன் !” – முதல் மாணவிக்கு வைரமுத்து வாழ்த்து first appeared on Madras Murasu.

]]>
இந்த தேர்வு முடிவுகள் 8 -ந்தேதி வெளியானது. பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். மேலும், மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் என மொத்தம் 94% பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவருக்கு ஆசிரியர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 600/600 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ள மாணவி நந்தினி, தனக்கு B.Com., CA படிக்க வேண்டும் என்று தனது ஆர்வத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, “எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்துவும் நேரில் சந்தித்து தனது தங்கப் பேனாவை பரிசாக அளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், “ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி, உலலகம் முழுவதும் இருந்து நந்தினிக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

The post “திண்டுக்கல் வருகிறேன்; தங்கப் பேனா தருகிறேன் !” – முதல் மாணவிக்கு வைரமுத்து வாழ்த்து first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
’’பிளஸ் டூ முதல் மாணவியை நேரில் வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி..!’’ பாராட்டு மழையில் திண்டுக்கல் மாணவி நந்தினி https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#respond Tue, 09 May 2023 13:05:01 +0000 https://madrasmurasu.com/?p=1424   தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (9.05.2023) முகாம் அலுவலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ச. நந்தினி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.  பள்ளிக்கல்வித் துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். […]

The post ’’பிளஸ் டூ முதல் மாணவியை நேரில் வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி..!’’ பாராட்டு மழையில் திண்டுக்கல் மாணவி நந்தினி first appeared on Madras Murasu.

]]>
 

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (9.05.2023) முகாம் அலுவலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ச. நந்தினி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

பள்ளிக்கல்வித் துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.  

மாணவி ச.நந்தினி, தமிழ்நாடு முதலமைச்சரை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் இன்றையதினம் முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, முதலமைச்சர், அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்  காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர்  க. நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்’’ இவ்வாறு செய்திக்குறிப்பில் டப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து செய்தியில், ‘’குடும்பச்சூழலோ – பொருளாதார நிலையோ வெல்வதற்கு தடையில்லை என, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்துள்ள தங்கை நந்தினியை இன்று நேரில் வாழ்த்தினோம். கல்வியே அழியாத சொத்தென்று முழங்கிய அவரது உயர்கல்விக்கு துணை நிற்போமென அன்பை வெளிப்படுத்தி, நந்தினிக்கு உத்வேகமளித்த குடும்பத்தார் – ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தோம்’’ என்று கூறியுள்ளார்.

முதல் மாணவி நந்தினி கூறுகையில், ‘’முதலமைச்சரையும் விளையாட்டுத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் சிறப்பாக படித்து சாதிக்க வேண்டும் என்று அவர்கள் ஊக்கப்படுத்தினர். ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே லட்சியம். 600/600 மதிப்பெண் எடுத்ததால் என்னை சாதனை மாணவி என்று அழைத்து பாராட்டுகிறார்கள். வாழ்த்து சொல்கிறார்கள். எனது அப்பா, அம்மா, ஆசிரியர்கள், உறவினர், பிரண்ட்ஸ் கொடுத்த உற்சாகமே இந்த வெற்றிக்கு காரணம். அவர்களை ஒருநாளும் மறக்க மாட்டேன். கடந்த இரண்டு நாட்களாக எங்கிருந்தெல்லாமோ வாழ்த்து மழை, பாராட்டுக்கள் வந்து கொண்டு இருக்கிறது. முதல்வரையும் அமைச்சர் உதயநிதியையும் சந்தித்தது எனது வாழ்வில் மறக்க முடியாத  நாள்’’ என்றார்.

The post ’’பிளஸ் டூ முதல் மாணவியை நேரில் வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி..!’’ பாராட்டு மழையில் திண்டுக்கல் மாணவி நந்தினி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
”அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை..! ஆன்லைனில் மட்டுமே வருகிற 19-ந்தேதி வரை பதிவு செய்யலாம். https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2/#respond Tue, 09 May 2023 05:21:10 +0000 https://madrasmurasu.com/?p=1406 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.  இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். நேற்று முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. வருகிற 19-ந்தேதி வரை பதிவு செய்யலாம். தரவரிசை பட்டியல் 23-ந்தேதி வெளியிடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 25 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட பொது கலந்தாய்வு 30-ந்தேதி முதல் […]

The post ”அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை..! ஆன்லைனில் மட்டுமே வருகிற 19-ந்தேதி வரை பதிவு செய்யலாம். first appeared on Madras Murasu.

]]>
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.  இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். நேற்று முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. வருகிற 19-ந்தேதி வரை பதிவு செய்யலாம். தரவரிசை பட்டியல் 23-ந்தேதி வெளியிடப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 25 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட பொது கலந்தாய்வு 30-ந்தேதி முதல் ஜூன் 9-ந் தேதி வரையிலும், 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. 

மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் செய்ய ஒவ்வொரு அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

இணையதளம் ஆன்லைன் பதிவு:

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tngasa.in/ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக அர்சு கல்லூரிகள் குறித்த விபரங்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

கல்லூரிகள் வழிகாட்டி என்று இந்த இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை முழுமையாக படித்து பார்க்கவும். ஒவ்வொரு கல்லுரியிலும் இருக்கும் பாடப்பிரிவிகள் விபரமும் அந்த கல்லூரி பெயரை சொடுக்கும் போது அது தெரியும். 

விண்ணப்பிக்கும் ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் மற்றும் பதிவுக்கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 50-ம், SC ,ST பிரிவினருக்கு ரூபாய் 2 -ம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல்:

தரவாிசை பட்டியல் அந்தந்த கல்லூாி வலைத்தளங்களில் வெளியிடப்படும். மூன்று தரவாிசை பட்டியல் உள்ளது அவை பின்வருமாறு:  

தமிழ் தரவரிசை பட்டியல்: பனிர்ரெண்டாம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ் தரவாிசை பட்டியல் தயாாிக்கப்படும். இந்த பட்டியல் பி.ஏ. தமிழ் இலக்கியம் / பி.லிட். படிப்புகளின் சேர்க்கைக்கு பயன்படுதப்படும்.  

ஆங்கிலம் தரவரிசை பட்டியல் : பனிரெண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்பறடயில் ஆங்கிலம் தரவாிசை பட்டியல் தயாாிக்கப்படும். இந்த பட்டியல் பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புகளின் செர்க்கைக்கு பயன்படுதப்படும். 

பொது தரவரிசை பட்டியல்: மீதமுள்ள 4 பாடங்களின் அடிப்படையில் (400 மதிப்பெண்களில்) இது தயாாிக்கப்படும். இது மற்ற  அனைத்து B.A. / B.Sc. / B.Com. / B.B.A. / B.C.A. / B.S.W படிப்புகளின் செர்க்கைக்கு பயன்படுதப்படும். 

. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்த பாடப்பிாிவுகளின்விருப்ப வாிசையின் அடிப்படையில் தரவாிசைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு ஆணை அந்தந்த கல்லூாிகள் வழங்கும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்க பட்ட ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில் அந்தந்த கல்லூாிகளுக்கு சென்று தங்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

The post ”அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை..! ஆன்லைனில் மட்டுமே வருகிற 19-ந்தேதி வரை பதிவு செய்யலாம். first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2/feed/ 0
“தோல்விதான் வெற்றியின் தாய்..!” வழிகாட்டும் சீமான் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/#respond Tue, 09 May 2023 01:05:19 +0000 https://madrasmurasu.com/?p=1384 “தோல்விதான் வெற்றியின் தாய்” என்று 12-ம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவர்களுக்கு அடுத்த கட்டம் செல்ல வேண்டியது குறித்து நம்பிக்கையை விதைத்துள்ளார் சீமான். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருஙகிணைப்பாளர் சீமான் அறிக்கை: பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகளும் சிறிதும் மனந்தளர வேண்டாம்! தோல்விதான் வெற்றியின் தாய்! தோல்வி என்பது தோல்வியல்ல; அது வெற்றிக்கான முதற்படி! இன்று தோல்வி வந்தடைந்த […]

The post “தோல்விதான் வெற்றியின் தாய்..!” வழிகாட்டும் சீமான் first appeared on Madras Murasu.

]]>
“தோல்விதான் வெற்றியின் தாய்” என்று 12-ம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவர்களுக்கு அடுத்த கட்டம் செல்ல வேண்டியது குறித்து நம்பிக்கையை விதைத்துள்ளார் சீமான்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருஙகிணைப்பாளர் சீமான் அறிக்கை:

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகளும் சிறிதும் மனந்தளர வேண்டாம்!

தோல்விதான் வெற்றியின் தாய்!

தோல்வி என்பது தோல்வியல்ல; அது வெற்றிக்கான முதற்படி!

இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம்,
நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப்போவதில்லை!

தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காத வரை!

உலகில் வெற்றியின் சிகரம் தொட்ட சாதனையாளர்கள் அனைவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள்தான்!

ஆகவே, என் அருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சியுங்கள். உறுதியாக வெற்றிபெறுவீர்கள்.

The post “தோல்விதான் வெற்றியின் தாய்..!” வழிகாட்டும் சீமான் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
“பிளஸ் டூ ரேங் லிஸ்ட்..! கடைசி 15 இடங்களில் இருக்கும் மாவட்டங்கள்!” பாமக சொல்லும் பகீர் காரணம் https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%b0%e0%af%87%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%259f%25e0%25af%2582-%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%2599%25e0%25af%258d-%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%b0%e0%af%87%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a/#respond Tue, 09 May 2023 00:54:13 +0000 https://madrasmurasu.com/?p=1382 பாமக தலைவர் டாக்டர் அன்புமணி எம்.பி., வெளியிட்ட அறிக்கை: +2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் 13 வட மாவட்டங்கள்: கல்வி மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துங்கள்! தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வென்ற மாணவ, மாணவியருக்கும், 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள […]

The post “பிளஸ் டூ ரேங் லிஸ்ட்..! கடைசி 15 இடங்களில் இருக்கும் மாவட்டங்கள்!” பாமக சொல்லும் பகீர் காரணம் first appeared on Madras Murasu.

]]>
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி எம்.பி., வெளியிட்ட அறிக்கை:

+2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில்
13 வட மாவட்டங்கள்: கல்வி மேம்பாட்டுக்கு
சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துங்கள்!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வென்ற மாணவ, மாணவியருக்கும், 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

12-ஆம் வகுப்புத்தேர்வு முடிவுகளில் வருத்தமளிக்கும் இரு கூறுகள், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பதும், வழக்கம் போல தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களை பிடித்திருப்பதும் தான். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.90 விழுக்காடு மட்டுமே. அரசு பள்ளிகளில் போதிய அளவில் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், முதன்மை பாடங்களை நடத்தக் கூட ஆசிரியர்கள் இல்லாததும் தான் அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைவுக்கு காரணமாகும்.

வழக்கம் போலவே மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் தான் கடைசி இடங்களை பிடித்திருக்கின்றன. கடைசி 10 இடங்களை பிடித்துள்ள இராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள எட்டு மாவட்டங்கள் வட மாவட்டங்கள் ஆகும். கடைசி 11 முதல் 15 வரையிலான இடங்களைப் பிடித்த திருவள்ளூர், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் திருவாரூரைத் தவிர மீதமுள்ள 4 மாவட்டங்களும் வட மாவட்டங்கள் என்பது வேதனைக்குரிய உண்மை ஆகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழ்நாட்டில் கடைசி 15 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் மொத்தம் 12 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவை ஆகும். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை தான் காணப்படுகிறது. ஒருமுறை கூட வட மாவட்டங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்தது இல்லை. அதேபோல், ஒருமுறை கூட கடைசி 10 இடங்களில் தென் மாவட்டங்கள் வந்தது கிடையாது. இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழகத்தை ஆட்சி செய்த அரசுகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடிப்பதற்கான காரணங்கள் குறித்து மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகள் செய்யத் தேவையில்லை. முதலாவது காரணம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான். வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் போன்ற முதன்மைப் பாடங்களை நடத்துவதற்குக் கூட ஆசிரியர்கள் இல்லை. அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தப் பாடங்களை நடத்துவதற்கு இரண்டு ஆசிரியர்களும், சில பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும் உள்ளன. வட மாவடங்களில் உள்ள பள்ளிகளில் புதிதாக பணி அமர்த்தப்படும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர் அடுத்த சில மாவட்டங்களில் செய்ய வேண்டியதை செய்து தென் மாவட்டங்களிலுள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு இட மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர்.

வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இன்னொரு காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியரும், பட்டியல் சமூகத்தினரும் தான். அவர்களில் வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர்களால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது. அரசு பள்ளிகளில் தான் சேர்ந்து பயில முடியும். ஆனால், அங்கு போதிய கட்டமைப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை. மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் காலையில் எழுந்தவுடன் வாழ்வாதாரத்திற்கான சில பணிகளை செய்து விட்டு தான் பள்ளிகளுக்கு செல்ல முடியும்; அவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர முடியாது.

வாழ்வாதாரப்பணிகள் காரணமாக அவர்களால் அதிக நேரம் படிக்கவும் முடியாது. அதனால் தான் அவர்களும் தேர்வில் தோல்வியடைந்து, மாவட்ட தேர்ச்சி விகிதம் குறைவதற்கும் காரணமாகின்றனர். வன்னியர்களுக்கு கல்வி மற்றும் சமூக நிலை மிக மோசமாக இருக்கிறது என்பதற்கு இதை விட வலிமையான சான்றுகள் தேவையில்லை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கு இதைவிட வலிமையான காரணிகள் தேவையில்லை.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்கள் அதிகம் வாழும் வட மாவட்டங்களின் கல்வி, சமூக வேலைவாய்ப்புச் சூழல் இப்படியே தொடருவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சூழலை மேம்படுத்த வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50% இட ஒதுக்கீடு வழங்கவும், தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்துவதற்காக சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

The post “பிளஸ் டூ ரேங் லிஸ்ட்..! கடைசி 15 இடங்களில் இருக்கும் மாவட்டங்கள்!” பாமக சொல்லும் பகீர் காரணம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%b0%e0%af%87%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a/feed/ 0