Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
கோயில்கள் - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Fri, 08 Mar 2024 05:03:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’ஸ்ரீநகரில் சங்கராச்சாரியார் மலையை தரிசித்தார் பிரதமர் மோடி..!’’ https://madrasmurasu.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2580%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/#respond Fri, 08 Mar 2024 05:03:46 +0000 https://madrasmurasu.com/?p=8842 பிரதமர் நரேந்திர மோடி 07.03.2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது சங்கராச்சாரியார் மலைக்கு மரியாதை செலுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: “சிறிது நேரத்திற்கு முன்பு ஸ்ரீநகரை அடைந்தபோது, கம்பீரமான சங்கராச்சாரியார் மலையை தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது

The post ’’ஸ்ரீநகரில் சங்கராச்சாரியார் மலையை தரிசித்தார் பிரதமர் மோடி..!’’ first appeared on Madras Murasu.

]]>
பிரதமர் நரேந்திர மோடி 07.03.2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது சங்கராச்சாரியார் மலைக்கு மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“சிறிது நேரத்திற்கு முன்பு ஸ்ரீநகரை அடைந்தபோது, கம்பீரமான சங்கராச்சாரியார் மலையை தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது

The post ’’ஸ்ரீநகரில் சங்கராச்சாரியார் மலையை தரிசித்தார் பிரதமர் மோடி..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/feed/ 0
’’2000 கோயில்களில் ஒரு கால பூஜை – ரூ.40 கோடி வைப்பு நிதி..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/2000-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%82/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2000-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2-%25e0%25ae%25aa%25e0%25af%2582 https://madrasmurasu.com/2000-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%82/#respond Wed, 01 Nov 2023 08:08:13 +0000 https://madrasmurasu.com/?p=7299 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் […]

The post ’’2000 கோயில்களில் ஒரு கால பூஜை – ரூ.40 கோடி வைப்பு நிதி..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.அம்பலவாணனிடம் வழங்கினார்.

பூஜை செலவினங்கள்

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் ஒரு கால பூஜைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு திருக்கோயிலின் பெயரிலும் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பூஜை செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அரசு மானியமாக 40 கோடி

இந்நிலையில் விலைவாசி உயர்வின் காரணமாக பூஜை செலவினத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையை ஈடுகட்டும் வகையில் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “12,959 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாயை 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி அரசு மானியமாக ரூ.130 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டது. மேலும், 2022-2023 ஆம் ஆண்டில் கூடுதலாக 2,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசு மானியமாக 40 கோடி ரூபாய்க்கான காசோலை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டது.

மாத உதவித் தொகை ரூ.1,000

2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில் “ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் நிதிவசதியற்ற 15,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டம், கூடுதலாக 2,000 நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு இவ்வாண்டு விரிவுப்படுத்தப்படும். இதற்கான அரசு மானியமாக ரூ.30 கோடியும் பொதுநல நிதியாக ரூ.10 கோடியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்க்கப்படும் 2,000 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகை ரூ.1,000 வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒருகால பூஜை திட்டத்தினை மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரிடம் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ’’2000 கோயில்களில் ஒரு கால பூஜை – ரூ.40 கோடி வைப்பு நிதி..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/2000-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%82/feed/ 0
”சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ்..!’’ பெ. மணியரசன் பாராட்டு https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 27 Oct 2023 09:03:03 +0000 https://madrasmurasu.com/?p=7178 சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் கலசம் – கருவறை – வேள்விச் சாலையில் தமிழும், தமிழரும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாநகரத்தின் காவல் தெய்வமாக மக்களால் போற்றி வணங்கப்படும் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிலுக்கு 2023 அக்டோபர் 27 அன்று திருக்குடமுழுக்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததிலிருந்து, அத்திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு […]

The post ”சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ்..!’’ பெ. மணியரசன் பாராட்டு first appeared on Madras Murasu.

]]>
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் கலசம் – கருவறை – வேள்விச் சாலையில் தமிழும், தமிழரும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகரத்தின் காவல் தெய்வமாக மக்களால் போற்றி வணங்கப்படும் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிலுக்கு 2023 அக்டோபர் 27 அன்று திருக்குடமுழுக்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததிலிருந்து, அத்திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், சேலம் – மேச்சேரி தமிழின குருபீடம் – சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனருமான சிம்மம் சத்தியபாமா அம்மையார், இந்து சமய அறநிலையத்துறைக்குக் கோரிக்கை வைத்தார்.

கடந்த 25.08.2023 அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் நேர்முக உதவியாளர் செயப்பிரியா, அறநிலையத்துறை ஆணையரிடமும் இதற்கான கோரிக்கை மனுக்களை சிம்மம் சத்தியபாமா அம்மையார் நேரில் சென்று அளித்தார். அதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழின ஆச்சாரியார் கூட்டமைப்பு, நாம் தமிழர் கட்சி, தமிழ்க் குடமுழுக்குக் கூட்டியக்கம், தமிழ்க் கலாச்சாரப் படிப்பு வட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நிலையில், 09.10.2023 அன்று, இக்கோரிக்கையை சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டுமென பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர் அருளிடம் சத்தியபாமா அம்மையார் நேரில் சென்று கோரிக்கை வைத்தார். மறுநாள் (10.10.2023) அன்று, இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழில் நடத்த நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

பழனி குடமுழுக்கிற்கும் இதுபோல் தமிழ்நாடு அரசு தமிழில் நடத்த வாக்குறுதி அளித்த நிலையில், அது மீறப்பட்டு வேள்விச்சாலை தொடங்கி கலசம் வரை சமற்கிருத – பிராமண ஏகபோகமே அனுமதிக்கப்பட்டு, தமிழ் மந்திரங்கள் புறக்கணிக்கப்பட்டன. எனவே, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் சமற்கிருதத்திற்கு இணையாக, தமிழ் மந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமெனக் கோரி, கடந்த 13.10.2023 அன்று காலை, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சிம்மம் சத்தியபாமா அம்மையார் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், திருவில்லிப்புத்தூர் – தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கத் தலைவர் ஐயா சிவ.வெ. மோகனசுந்தரம், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் ஐயா சிவ. வடிவேலன், பேராசிரியர் சௌ. காமராசு, சாமானிய மக்கள் நீதிக் கட்சிப் பொதுச் செயலாளர் பா. பாலமுருகன், மக்கள் உரிமைகள் கழகம் அமைப்புச் செயலாளர் பார்த்திபன், மக்கள் உரிமைகள் கழக இளைஞரணி செயலாளர் சேலம் த. கார்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் பங்கேற்றனர்.

இந்நிலையில், கடந்த 25.10.2023 அன்று பகலில், சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலின் நிர்வாக அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழு, செயல் அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், இக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென சிம்மம் சத்தியபாமா அம்மையார் நேரில் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தமிழ் மந்திரங்கள் ஓதி தாங்கள் தரும் புனித நீரையும் குடமுழுக்கில் பயன்படுத்த வேண்டுமெனக் கோரினார். இதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து, நேற்று (26.10.2023) காலை, ஐயா சித்தர் மூங்கிலடியார் (இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம்), சிம்மம் சத்தியபாமா அம்மையார் (சத்தியபாமா அறக்கட்டளை அரசயோகி கருவூறார் தமிழின குருபீடம், மேச்சேரி) ஆகியோர் சித்தரடியார்கள், சன்னிதானங்கள் புடைசூழ, கோட்டை மாரியம்மன் குடமுழுக்கில் பயன்படுத்த வேண்டி, தமிழ் மந்திரங்கள் ஓதி உருவாக்கப்பட்ட புனித நீரை, ஊர்வலமாக எடுத்துச் சென்று கோட்டை மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறும் வேள்விச் சாலையில் வைக்கும் புத்துயிர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

இன்று (27.10.2023) காலை நடைபெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கின்போது, கலசத்தில் புனித நீர் ஊற்றும்போது, தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதேபோல் அமைக்கப்பட்டிருந்த 23 வேள்வி குண்டங்களில் 1 குண்டம் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்டது. அதில், நான்கு பூசகர்கள் தமிழ் மந்திரங்கள் ஓதி, தமிழ்வழிச் சடங்குகளை மேற்கொண்டனர். திருக்கோயில் திருக்குடமுழுக்கில் தமிழ் மந்திரங்களே ஒலிக்கப்பட வேண்டுமென்ற நமது கோரிக்கையில், இது ஒருபடி முன்னேற்றமே என வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அரசு, இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் திருக்கோயில் குடமுழுக்குகளிலும் வேள்விச் சாலை – கலசம் – கருவறை ஆகிய மூன்று நிலைகளிலும், சமற்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு இடமளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

The post ”சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ்..!’’ பெ. மணியரசன் பாராட்டு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
’’ஆயிரம் குடமுழுக்கு..!’’ முரசொலி https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond Wed, 13 Sep 2023 06:25:38 +0000 https://madrasmurasu.com/?p=6268 “இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருப்பது பெருமை பொங்கும் சொற்கள் மட்டுமல்ல -– உண்மையே அதுதான். ‘நாத்திகர்கள் கட்சி’ என்று கட்டமைத்து, ‘இவர்கள் ஆட்சியிடம் இருந்து கோவில்களைப் பறிக்க வேண்டும்’ என்று ஒரு கும்பல் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆயிரமாவது குடகுழுக்கை நடத்தி இந்தக் கும்பலின் தலையில் மண்ணைப் போட்டுவிட்டது தி.மு.க. அரசு. சென்னை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவிலில் […]

The post ’’ஆயிரம் குடமுழுக்கு..!’’ முரசொலி first appeared on Madras Murasu.

]]>
“இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருப்பது பெருமை பொங்கும் சொற்கள் மட்டுமல்ல -– உண்மையே அதுதான். ‘நாத்திகர்கள் கட்சி’ என்று கட்டமைத்து, ‘இவர்கள் ஆட்சியிடம் இருந்து கோவில்களைப் பறிக்க வேண்டும்’ என்று ஒரு கும்பல் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆயிரமாவது குடகுழுக்கை நடத்தி இந்தக் கும்பலின் தலையில் மண்ணைப் போட்டுவிட்டது தி.மு.க. அரசு.

சென்னை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் குடமுழுக்கு விழா மிகமிகச் சிறப்பாக நடந்துள்ளது. கழக ஆட்சி ஆறாவது முறையாக மலர்ந்ததற்குப் பிறகு – – இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நடந்துள்ள கோவில் குடமுழுக்கு விழாக்களில் 1000 ஆவது குடமுழுக்குதான் இந்த காசி விசுவநாதர் கோவிலில் நடந்தது ஆகும். இதை வைத்துத்தான், ‘இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சி’ என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அரசிடம் இருந்து கோவிலைப் பறித்து சூறையாட நினைக்கும் கும்பல்களால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது.

‘அனைத்துத் துறைகளின் வளர்ச்சி’ என்பதைத்தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படித்தான் செயல்படுத்தியும் வருகிறார்கள். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பது இதன் உள்ளடக்கம் ஆகும்.

எந்த மனிதரையும் ஜாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் எவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் தந்துள்ளது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இன்னார்தான் அர்ச்சகராக இருக்க முடியும் என்பதையும் மாற்றி, பெண்கள் அர்ச்சகர் ஆக முடியாது என்பதையும் மாற்றி சமத்துவம் உலாவும் இடமாக கோவில்கள் மாறி இருக்கின்றன.

திருக்கோயில்கள் சார்பில் –- 10 கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நான்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு விட்டன.

அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Com, BBA, BCA, B.Sc Computer Science ஆகிய நான்கு பாடப் பிரிவுகள் மட்டுமல்ல, சைவ சித்தாந்தமும் கற்றுத் தரப்படுகிறது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் இது செயல்பட்டு வருகிறது. கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய நான்கு இடங்களில் தொடங்கப்பட்டு விட்டது கோவில் கல்லூரிகள்.

திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யவே வல்லுநர் குழு அமைக்கப் பட்டது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் செய்யப்படுகின்றன.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயில்களி லுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்கு தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி களையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருக்கிறார்.

கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ. 1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தி.மு.க. அரசு பொறுப் பேற்றப்பின் திருக்கோயில்களின் எண்ணிக்கையை தலா 1250 ஆகவும் நிதியுதவியை ரூ.2 இலட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இப்படி அனைத்துக் கோவில்களும் புத்துயிர் பெறுவது அந்தக் கும்பலுக்கு பிடிக்கவில்லை.

இன்னும் சொன்னால் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத் துறையே மிகமிகச் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது.

1970 ஆம் ஆண்டுக்கு முன்னதாக அறநிலையத் துறைக்குத் தனி அமைச்சரோ, சட்டப்பேரவையில் அறநிலையத் துறைக்கு என தனி விவாதமோ நடந்தது இல்லை. வேறு ஏதாவது ஒரு துறையோடு சேர்த்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையை நடத்துவார்கள். முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் அறநிலையத்துறைக்கு தனியான மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவது தொடங்கப்பட்டது.

1967 முதல் 1975 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் ஐந்தாயிரம் கோவில்களுக்கான திருப்பணிகளும், 1996 -– 2001 காலக்கட்டத்தில் 2,459 கோவில்களுக்கு திருப்பணிகளும், 2006 – 2011 காலக்கட்டத்தில் 4 ஆயிரத்து 539 கோவில்களுக்குத் திருப்பணிகளும் நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில் களைக் கொண்டு வந்து சேர்த்தவர் கலைஞர். அவரது ஆட்சியில் தான் கோவில் சொத்துக்களும் அதிகம் ஆனது. கோவில்களின் வருமானமும் அதிகம் ஆனது. 1989, 1996 ஆண்டுகளில் ஆன்மிகப் பெரியவர்களைக் கொண்டு அறநிலையப் பாதுகாப்புக் குழுவை அமைத்தவர் கலைஞர். கிராமப்புற பூசாரி களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்தவரும் அவரே. திருக்கோவில் தொடர்பான ஆகம விதிகள் வடமொழியில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்து, வெளியிட முயற்சிகள் செய்தார். போற்றி புத்தகங்களை வெளியிட்டார். இவை அனைத்தும் மீண்டும் இப்போதும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அன்றைய மடாதிபதிகள் எப்படி கலைஞர் ஆட்சியை பாராட்டினார்களோ – – அதே வகையில் இன்றைய மடாதிபதிகள் இன்றைய முதல்வரையும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இறை நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை யையும் சேர்த்துப் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார் அமைச்சர் சேகர்பாபு. அதனால்தான் அவரை குறி வைக்கிறது ஒரு கும்பல். அந்த கும்பல் உண்டியலைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் தி.மு.க. அரசு, பக்தர்களைப் பற்றி மட்டுமே அக்கறையோடு செயல்படுகிறது.

The post ’’ஆயிரம் குடமுழுக்கு..!’’ முரசொலி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0
“தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!” https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25ae%25af https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af/#respond Thu, 27 Jul 2023 11:49:50 +0000 https://madrasmurasu.com/?p=5659 திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றானது வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம். அதன் 138-வது ஆண்டு திருவிழா இன்று ஜுலை 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 7.30 மணிக்கு திருப்பலியும், மாலை ஆராதனை, […]

The post “தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!” first appeared on Madras Murasu.

]]>
திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றானது வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம். அதன் 138-வது ஆண்டு திருவிழா இன்று ஜுலை 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 7.30 மணிக்கு திருப்பலியும், மாலை ஆராதனை, மறையுரை நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி 7-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு மாதா காட்சி கொடுத்த மலைகெபியில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

ஆகஸ்ட் 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்குகிறார். மாலை 6.30 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனி நடைபெறுகிறது.

4-ந் தேதி காலை 5.15, 7.30, 9.30, 11.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.

5-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது.

6-ந் தேதி காலை 7.30 மணிக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் நன்றி திருப்பலியும், காலை 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா, ஏற்பாடுகளை பேராலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குத்தந்தை வளன் அரசு மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

The post “தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!” first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af/feed/ 0
’’அயோத்தி ராமர் சிலை ஏற்பாடுகள் தீவிரம்..!’’ https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25af%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%258f%25e0%25ae%25b1%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d/#respond Wed, 26 Jul 2023 13:43:16 +0000 https://madrasmurasu.com/?p=5633 அயோத்தியில் ராமர் சிலையை நிறுவ ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் ராமர் கோவிலை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் 251 மீ. உயரத்தில் வில் ஏந்திய ராமர் சிலை பிரமாண்டமாக நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தியில் ராமர் சிலையை நிறுவிய உடன் கும்பாபிஷேக விழா நடத்தவுள்ளதாகவும், அந்த விழாவில் கலந்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஶ்ரீ […]

The post ’’அயோத்தி ராமர் சிலை ஏற்பாடுகள் தீவிரம்..!’’ first appeared on Madras Murasu.

]]>
அயோத்தியில் ராமர் சிலையை நிறுவ ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் ராமர் கோவிலை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் 251 மீ. உயரத்தில் வில் ஏந்திய ராமர் சிலை பிரமாண்டமாக நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அயோத்தியில் ராமர் சிலையை நிறுவிய உடன் கும்பாபிஷேக விழா நடத்தவுள்ளதாகவும், அந்த விழாவில் கலந்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கும்பாபிஷேக விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படலாம் என்றும் அதன் தேதி முடிவு செய்த பின் அறிவிக்கப்படும் என்றும் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் தெரிவித்துள்ளார்.

கோ. தீபா புவனேஸ்வரி

The post ’’அயோத்தி ராமர் சிலை ஏற்பாடுகள் தீவிரம்..!’’ first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d/feed/ 0
”அர்ச்சகர் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது..!” கி.வீரமணி https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9 https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/#respond Wed, 28 Jun 2023 04:18:19 +0000 https://madrasmurasu.com/?p=4487 ”ஆகமப் பயிற்சி பெற்றவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எனவே, தமிழ்நாடு அரசு பயிற்சி பெற்றவர்களை நியமிக்கவேண்டும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிய சட்டங் களும், ஆகமப் பயிற்சிக்கான – அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும், பிரதான வேத மதம் என்று பல காலம் அழைக்கப்பட்டு வந்த, அந்நியர்களால் ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்ட […]

The post ”அர்ச்சகர் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது..!” கி.வீரமணி first appeared on Madras Murasu.

]]>
”ஆகமப் பயிற்சி பெற்றவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எனவே, தமிழ்நாடு அரசு பயிற்சி பெற்றவர்களை நியமிக்கவேண்டும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிய சட்டங் களும், ஆகமப் பயிற்சிக்கான – அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும், பிரதான வேத மதம் என்று பல காலம் அழைக்கப்பட்டு வந்த, அந்நியர்களால் ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்ட மதத்தின் முக்கிய பிரிவுகளான சைவம் (சிவத்தையொட்டியது), வைஷ்ணவம் (விஷ்ணு வைக் கொண்டது) ஆகிய கோவில்களுக்குரிய முக்கிய ஆகமப் பயிற்சிகளை உரியவர்களைக் கொண்டு படிப்பிக்கப்பட்டு, 205 பேர் பல ஆண்டுகளாக அர்ச்சகர் வேலை கிட்டாது – 5, 6 பேர் இறந்தே போன பரிதாபமும் உண்டு – அவர்களுக்கு வயதும் அதிகமாயிற்று.

இட ஒதுக்கீடுபடியே நடந்தது!

இந்த அர்ச்சகர்ப் பயிற்சி தேர்வு தமிழ்நாடு அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீடுபடியே நடந்தது. நீதிமன்றத்தின் நீண்ட கால வழக்குகள் காரணமாக இவர்களுக்கு வேலை கிட்டாத பரிதாபம் ஏற்பட்டது. கிடைத்தவர் களுக்கும் கூட அதைப் பறிக்க வழமையாக ஆதிக்க வாதிகள் முயன்றுவரும் நிலையில், நேற்று (26.6.2023) சென்னை உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தப்பட்ட வழக் கில் ஒரு தெளிவான தீர்ப்பை ஜஸ்டீஸ் திரு.ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் தந்துள்ளார். இது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

இத்தீர்ப்பின்படி,

1. ஜாதி அடிப்படையிலோ, பரம்பரை உரிமை (Hereditary) என்ற முறையிலோ அர்ச்சர்களை கோவில் களில் நியமனம் செய்ய முடியாது.

2. ஆகமத் தகுதி – கல்வி கற்றிருப்பவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அர்ச்சகராக சட்டப்படி தடை ஏதும் கிடையாது.

3. முந்தைய தீர்ப்பு ஒன்றின்படி, தமிழ்நாட்டுக் கோவில்களில் ஆகம முறைப்படி அமைந்து பூஜை நடைபெறும் கோவில்கள், அல்லாத கோவில்கள் என்று பிரித்து, அதன்படியேதான் அர்ச்சகர் நியமனம் நடை பெறவேண்டும். அதை ஒரு குழு போட்டுக் கண்டறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் குழு அறிக்கை வருகின்றவரை எந்தக் கோவிலிலும் அர்ச்சகர் நியமனம் செய்யப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட நிலையை ஏற்காது, அந்தக் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்காமல், ஆகமப் பயிற்சித் தகுதி ஒருவருக்கு இருந்தால், பூஜைக்கு அர்ச்சகராக அவரை நியமிக்கலாம் என்று நேற்றைய தீர்ப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது இத்துறையில் ஒரு Landmark Judgement – குறிப்பிடத்தகுந்த தீர்ப்பு.

குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள்!

திட்டமிட்டே இந்து அறநிலையத் துறைக்கெதிராக போர்க் கொடி தூக்கியுள்ள ஆதிக்கவாதிகளான சில ஹிந்து மத அமைப்பினர் என்போர் பல தடைகளை ஏற்படுத்தி இடையறாமல் குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள்!

முந்தைய தலைமை நீதிபதி அமர்வு (ஜஸ்டீஸ் பண்டாரி அமர்வு) தந்த தீர்ப்பே சரியான தீர்ப்பு என்று ஏற்றுக்கொள்ள இயலாது.

‘‘ஆகமக் கோவில்கள், ஆகமம் அல்லாத கோவில் கள் என்று கண்டறியவேண்டும் என்பதே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் முக்கிய நோக்கத் தைத் தோற்கடிக்கும் நியாயமற்ற ஒரு தீர்ப்பு ஆகும்.”

தமிழ்நாடு அரசு, அறநிலையத் துறை இதனை எதிர்த்து மேல்முறையீடு – சட்டப் போராட்டத்தை மேற்கொள்வதில் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.

‘சர்வே’யினால் என்ன பலன்?

இனி ஆகமம் அல்லாத கோவில்களில் உள்ள ஆகமம் பயின்றவர்கள், ஆகமக் கோவில்களில் உள்ள முந்தைய ஆகமப் பயிற்சியே இல்லாது பல ஆண்டு களாக உள்ள அர்ச்சகர்கள் இவர்களை வீட்டுக்கனுப் பாமல் துறையும், அரசும் உள்ளபோது, நடைமுறையில் இந்த கண்டறியும் ‘சர்வே’யினால் என்ன உருப்படியான பலன் ஏற்பட முடியும்?

கலைஞர் ஆட்சியில், ஏற்கெனவே ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவே பல பிரபல கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள் ஆகமப் பயிற்சியே இல்லாதவர்கள் என்பதை அரசுக்குத் தந்த அறிக்கை யிலேயே சுட்டிக்காட்டியுள்ளது.

மதுரை மீனாட்சி கோவில், மயிலை கற்பகாம்பாள் கோவில், வடபழனி முருகன் கோவில் போன்ற பல கோவில்கள் ஆகம விதிமுறைப்படி கட்டப்படாத சென்னை அஷ்டலட்சுமி கோவில் போன்றவை.

108 வைணவக் கோவில்களில் 30 கோவில்களில் உள்ளவர்களுக்கே ஆகமம் தெரியும் என்று அந்த அறிக்கை கூறுகிறது!

இவற்றில் பூஜையைத் தடை செய்துவிடுவார்களா? அத்தகைய கோவில்களை மூடச் சொல்வார்களா? முடி யாத போது எதற்கு இந்த வெற்று காலதாமத முயற்சி? திசை திருப்பி, நியமனங்களைத் தடுப்பதல்லாமல் வேறு என்ன?

தடுக்கும் தந்திர உபாயம்!

இது ஒரு பயனற்ற வேலை (Futile Exercise).

அர்ச்சகர் நியமனங்களை செய்யவிடாதபடி தடுக்கும் தந்திர உபாயம்.

இது வெறும் பக்திப் பிரச்சினை அல்ல.

மனித உரிமை, சமத்துவ, சம வாய்ப்புப் பிரச்சினை – இந்த ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சியானதால் மனித உரிமைப் போராளிகள் அமைதி காக்கிறார்கள்!

இன்றேல், போராட்டத் தீ இந்நேரம் தமிழ்நாட்டில் கொழுந்து விட்டெரிந்திருக்கும்.

நமது முதலமைச்சர், தமிழ்நாடு அரசுக்கு இக்கொள்கையில் உள்ள உறுதிப்பாடும், ஈடுபாடும் நிச்சயம் நல்ல முடிவுடன் – உரிய நடவடிக்கைகள் விரைவில் தொடரும் என்று நம்புகிறோம்.

ஜாதிப் புண்ணுக்கு ஓரளவு மருந்து போடுவதாக சட்டப்படி அமைந்துள்ளது

உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஜாதிப் புண்ணுக்கு ஓரளவு மருந்து போடுவதாக சட்டப்படி அமைந்துள்ளது ஆறுதலோடு, வரவேற்று நமது சமத்துவ உரிமைக்கான அறப்போரின் நியாயத்தை இத்தீர்ப்பு பிரதிபலிப்பதாகவும் உள்ளது!

The post ”அர்ச்சகர் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது..!” கி.வீரமணி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/feed/ 0
“தபால் மூலம் கோவில் பிரசாதம்,!” ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be/#respond Thu, 25 May 2023 23:15:46 +0000 https://madrasmurasu.com/?p=2554 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, அஞ்சல் துறையுடன் இணைந்து, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பிரசாதங்களை அஞ்சல் மூலம் மக்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள 48 கோவில்களின் பிரசாதத்தை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in மூலமாகவோ அல்லது “திருக்கோயில்” மொபைல் செயலி மூலமாகவோ பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் பக்தர்கள் தங்களுக்கு எந்த கோவிலின் பிரசாதம் தேவை, முகவரி, தேவையான அளவு மற்றும் இதர விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், தபால் துறையினர் கோவில் அதிகாரிகளிடம் இருந்து பிரசாதத்தைப் […]

The post “தபால் மூலம் கோவில் பிரசாதம்,!” ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் first appeared on Madras Murasu.

]]>
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, அஞ்சல் துறையுடன் இணைந்து, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பிரசாதங்களை அஞ்சல் மூலம் மக்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள 48 கோவில்களின் பிரசாதத்தை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in மூலமாகவோ அல்லது “திருக்கோயில்” மொபைல் செயலி மூலமாகவோ பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் பக்தர்கள் தங்களுக்கு எந்த கோவிலின் பிரசாதம் தேவை, முகவரி, தேவையான அளவு மற்றும் இதர விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், தபால் துறையினர் கோவில் அதிகாரிகளிடம் இருந்து பிரசாதத்தைப் பெற்று, வேக அஞ்சலில் பாதுகாக்கப்பட்ட உறைகளில் பக்தர்களின் வீட்டு வாசலிலேயே வழங்குவர்.

சென்னை நகர மண்டலத்தின் கீழ் பின்வரும் 11 கோவில்களுக்கு பிரசாதம் சேவை கிடைக்கிறது.

வரிசை

எண்

கோவிலின் பெயர் பிரசாத விவரங்கள் பிரசாதத்தின் விலை (ரூ)
தேவராஜசுவாமி கோயில், காஞ்சிபுரம்-631501 குங்குமம், மஞ்சள்காப்பு, சுவாமி புகைப்படம் 100
வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, சென்னை 600026 சுவாமி புகைப்படம், விபூதி 70
லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்,சோளிங்கர்-631102 கல்கண்டு, முந்திரி, உலர் திராட்சை, குங்குமம், சுவாமி புகைப்படம் 145

 

 

அருணாச்சலேஸ்வரர் கோவில்,

திருவண்ணாமலை 606601

சுவாமி புகைப்படம், விபூதி, குங்குமம் 10
சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணி-631209 குங்குமம், விபூதி, சுவாமி புகைப்படம் 100
தியாகராஜசுவாமி கோயில், திருவொற்றியூர், சென்னை -600019 குங்குமம், விபூதி, சுவாமி புகைப்படம், வில்வம் 50
தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு, சென்னை 600077 குங்குமம், விபூதி, திருசாம்பல், சுவாமி புகைப்படம் 50
காமாட்சி அம்மன் கோவில்,

மாங்காடு-600122

குங்குமம், மஞ்சள்,சுவாமி புகைப்படம் 30
பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை 600005 குங்குமம், மஞ்சள், சுவாமி புகைப்படம் 80
கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை 600004 குங்குமம், விபூதி 30
அங்காளம்மன் கோவில், மேல்மலையனூர் -604204 குங்குமம், விபூதி, புற்று மண், சுவாமி புகைப்படம்,அம்மன் கயிறு 10

 

*மேலே உள்ள கட்டணங்கள் அஞ்சல் கட்டணம் சேர்க்கப்படாத கட்டணம் ஆகும்.

இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில்பிரசாதங்களை முன்பதிவு செய்யும் வசதியுள்ள தமிழ்நாட்டின் வேறு சில முக்கிய கோவில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

வரிசை

எண்

கோவிலின் பெயர் பிரசாத விவரங்கள் பிரசாதத்தின் விலை (ரூ)
மாரியம்மன் கோவில் – சமயபுரம் குங்குமம், விபூதி, மஞ்சள், சுவாமி புகைப்படம் 30
சுவாமிநாதசுவாமி கோயில் – சுவாமிமலை-612302 குங்குமம், விபூதி 15
அரங்கநாதசுவாமி கோயில் – ஸ்ரீரங்கம்-620006 கல்கண்டு, மஞ்சள் 19
சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம்-625005 விபூதி, சுவாமி புகைப்படம் 70
மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், மதுரை-625001 தாழம்புகும்குமம், சுவாமி புகைப்படம், மாங்கல்யசரடு 100
சுப்ரமணியசுவாமி கோயில், திருச்செந்தூர்-628215 இளையதிருநீர், புத்தமுது, சுவாமி புகைப்படம் 120
தண்டாயுதசுவாமி கோயில், பழனி-624601 பழனிபஞ்சாமிர்தம், புகைப்பட சட்டகம், விபூதி 140
சுப்பிரமணியசுவாமி கோயில், மருதமலை-641046 குங்குமம், விபூதி, புகைப்படம் 66

*மேலே உள்ள கட்டணங்கள் அஞ்சல் கட்டணம் சேர்க்கப்படாத கட்டணம் ஆகும்.

கோயில் பிரசாதத்தை வீட்டு வாசலிலேயே பெற விரும்பும் பொதுமக்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் ‘திருக்கோயில்’ மொபைல் செயலி மூலமாகவோ அல்லதுwww.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ ஆன்லைன் முறையில் முன்பதிவு  செய்யலாம்.

The post “தபால் மூலம் கோவில் பிரசாதம்,!” ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be/feed/ 0
“இப்போது, உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம், ஆன்மிகமும் காரணம்..!” வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஆளுநர் தமிழிசை பேட்டி https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25be https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/#respond Wed, 10 May 2023 01:59:04 +0000 https://madrasmurasu.com/?p=1477 வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி உலக நன்மைக்காக நாராயணி மூலமந்திர மகாயாகம் நடைபெற்றது. சக்திஅம்மா தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கணவருடன் கலந்து கொண்டார். அவர்கள் சாமி தரிசனம் செய்து, சக்திஅம்மாவிடம் ஆசி பெற்றார். ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: […]

The post “இப்போது, உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம், ஆன்மிகமும் காரணம்..!” வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஆளுநர் தமிழிசை பேட்டி first appeared on Madras Murasu.

]]>
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி உலக நன்மைக்காக நாராயணி மூலமந்திர மகாயாகம் நடைபெற்றது. சக்திஅம்மா தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கணவருடன் கலந்து கொண்டார். அவர்கள் சாமி தரிசனம் செய்து, சக்திஅம்மாவிடம் ஆசி பெற்றார்.

ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாராயணி பீடத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் நான் கலந்து கொள்வேன். அதன்படி இன்றும் இங்கு கலந்து கொண்டதும், சக்தி அம்மாவின் ஆசி பெற்றதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆன்மிகம் தழைக்க வேண்டும். ஆன்மிகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. ஆனால் சமீபகாலமாக தமிழுக்கும், ஆன்மிகத்துக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆன்மிக வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஆன்மிகத்தோடு கூடிய தமிழ், தமிழுடன் கூடிய ஆன்மிகம் இவை தான் நமது தமிழகத்துக்கு வளர்ச்சியை தரும்.

தூய்மையான ஆன்மிகத்தின் மீது தவறான கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆன்மிகத்தில் எந்தவித ஏற்றத்தாழ்வும் கிடையாது. இதிகாசங்களிலும், சரித்திரங்களிலும் அனைவரும் சமம் என்று கூறுகிறது. மதமும் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் மதம் ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும் தான் முன்னிறுத்துவதாக சிலரால் கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு இல்லை.

தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். நீங்கள் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை என்று கூறுகிறீர்களே. ஆனால் ஆன்மிக அன்பர்களாகிய எங்களுக்கு ஏன் தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில்லை. இந்த கேள்விக்கு இன்றுவரை பதில் தரவில்லை. அவரிடம் இதற்கான பதில் எதிர்பார்த்தேன். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவது நமது தமிழக ஆன்மிக கலாசாரம்.

கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தற்போது உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம், ஆன்மிகமும் காரணம். தடுப்பூசியும் இறைவனின் ஆசியும் சேர்ந்தால்தான் வாழ்வில் நமக்கு நல்ல உடல் நலத்தை தரும்.

புதுச்சேரி முன்னாள் முதல்- மந்திரி நாராயணசாமி நீங்கள் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? என்று கேட்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் மக்களுக்கு சேவை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட சேவை செய்யாமல் உள்ளனர்.

அவர், நான் புதுச்சேரியில் தான் அதிகமாக இருக்கிறேன் என்று கூறுகிறார். மேலும் நான் தெலுங்கானாவுக்கு செல்ல அவர் மக்களிடம் உண்டியல் குலுக்கி எனக்கு சிறப்பு விமானம் வாங்கி தருவதாகவும் கூறுகிறார். இதற்கு ஏன் அவர் மக்களிடம் கையேந்த வேண்டும். நீங்கள் சேர்த்து வைத்த பணத்திலே எனக்கு வாங்கி கொடுக்கலாம். அப்படி வாங்கி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

புதுச்சேரி மக்களும், ஐதராபாத் மக்களும் வசதியாக இருக்க வேண்டும் என்று நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். இது அவருக்கு தெரியாதா?. நான் செல்வதாக இருந்தால் சிறப்பு விமானத்தில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களோடு மக்களாகவே செல்வேன். புதுச்சேரிக்கும் ஐதராபாத்திற்கும் விமான சேவை வந்ததே அவருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் என்ன வேலை செய்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். எல்லோரையும் குறை சொல்லக்கூடாது.

இவ்வாறு, ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

நாராயணி பீடத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு 10,008 பக்தர்கள் நாராயணி வித்யாலயா பள்ளியில் இருந்து ஊர்வலமாக கலசத்தில் மஞ்சள் நீர் கொண்டு சென்று சுயம்பு நாராயணிக்கு அபிஷேகம் செய்தனர். விழாவில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, பீட மேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post “இப்போது, உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம், ஆன்மிகமும் காரணம்..!” வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஆளுநர் தமிழிசை பேட்டி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/feed/ 0
“சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?” ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Sat, 06 May 2023 12:20:47 +0000 https://madrasmurasu.com/?p=1171 சென்னை – வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” கொளத்தூர் – வில்லிவாக்கம் பகுதியை இணைக்கும் மேம்பாலம், சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை இணைந்து ரூ. 71 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வரும் 13 ஆம் தேதி […]

The post “சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?” ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி first appeared on Madras Murasu.

]]>
சென்னை – வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” கொளத்தூர் – வில்லிவாக்கம் பகுதியை இணைக்கும் மேம்பாலம், சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை இணைந்து ரூ. 71 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

ஸ்டீபன்சன் பாலம் 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என முதலமைச்சர் சொன்னது மட்டும் இல்லாமல் மூன்று முறை ஆய்வு செய்துள்ளார் ஒரு மாதத்தில் இந்த பணி முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த ஆட்சியில் ரூ.4,225 கோடியில் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் மட்டுமே கோயில் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் 6 பா.ஜ.க நிர்வாகிகளிடம் இருந்தும் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஆளுநர் கூறுவது போல சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை. சட்ட மீறல், விதிமீறல் நடந்தால் அது சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா? சிதம்பரம் தீட்சிதர்களுக்கு என தனிச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ளாரா?.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆகவே விதிமீறல் எங்கு நடைபெற்றாலும் அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் என்பவர் ஆண்டவரா? எங்களைப் பொறுத்தவரை ஆளுநர் நாட்டிற்குத் தேவை இல்லை. ஆளுநரே பல நேரங்களில் முதலமைச்சரைப் பாராட்டி உள்ளார். ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கொள்வார்.” என தெரிவித்துள்ளார்.

The post “சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?” ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0