பொறியியல் கலந்தாய்வு என்பது கல்லூரி வாழ்க்கை பயணத்தில் முக்கியம். எனவே, கல்லூரி, பாடங்களை தேர்வு செய்வதற்கு முன்னர், மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதில் சிறு தவறு ஏற்பட்டாலும் எதிர்கால வாழ்க்கையே திசைமாற்றி விடும். இதில் என்னென்ன விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
பொறியியல் கவுன்சலிங் என்கிற கலந்தாய்வு இப்போது ஆன்லைன் முறையில் நடபெறுகிறது. மாணவ – மாணவியர் அவரவர் வீட்டில் இருந்தே கம்யூட்டர் வழியாக தாங்கள் விரும்பும் பாடத்தை தாங்கள் விரும்பும் கல்லூயில் தேர்வு செய்ய முடியும். இந்த ஆன்லைன் கலந்தாய்வு என்பதில் நிறைய படி நிலைகள் உள்ளன. எனவே, அதை ஒவ்வொன்றாக பொறுமையாக படித்து பாருங்கள். புரியவில்லை என்றால், தங்கள் குடும்பத்தில் உள்ள படித்தவர்கள், அல்லது நண்பர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் கலந்தாய்வு முறைகளை ஸ்டெப் ஸ்டெப் ஆக புரிந்து கொள்ளுங்கள்.
https://www.tneaonline.org/ என்கிற தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 ஆம் ஆண்டு என்கிற அதிகாரப்பூர்வ இணையத்தில் கலந்தாய்வு குறித்த விபரங்கள் உள்ளன. அதனை பொறுமையாக படித்து பாருங்கள். கலந்தாய்வில் பாடம், கல்லூரி தேர்வு செய்வது குறித்து விளக்கமான வீடியோ உள்ளது. அதை ஒரு தடவைக்கு இரண்டு முறை கேட்டு டவுட்களை கிளியர் செய்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் கல்லூரிகள் பெயரையும் அதன் TNEA Code – களையும் ஒரு தாளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் வெங்கடேஸ்வரா, கிருஷ்ணா என்பது போன்ற பெயர்கள் பொதுவாக இருக்கும் வகையில் பல்வேறு கல்லூரிகள் உள்ளன. ஆனால், TNEA Code எண் என்பது ஒரு கல்லூரிக்கு ஒன்று மட்டும்தான். எனவே, கல்லூரியை டிக் செய்யும் போது அதன் TNEA Code எண் சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்து ஓகே செய்யுங்கள்.
கல்லூரிகளின் ரேங்க் பட்டியல், முதல் பத்து கல்லூரிகள், முதல் 25 கல்லூரிகள் என்று கல்வியாளர்கள் போர்வையில் சமூக வலைத்தளங்களில் நிறைய வீடியோக்கள் வலம் வருகின்றன. டிவி, பத்திரிகைகள், ஆன்லைன் வெப் சைட்-களிலும் பொறியியல் கல்லூரிகள் ரேங்க் பட்டியல் போடுக்கிறார்கள். இதிலெல்லாம் வர்த்தகம் சார்ந்த நோக்கத்தொடு வெளியிடப்படுபவை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
எனவே, இந்த ரேங்க் பட்டியல்களை நம்பி, கல்லூரிகளையும் பாடங்களையும் தேர்வு செய்தால் உண்மையில் அதன் விளைவுகளை அனுபவிக்கப்போவது நீங்கள்தான் ( மாணவ – மாணவியர் – பெற்றோர் ) என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கல்லூரிகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
’அந்த’ கல்லூரியில் சேர்த்தால் வளாகத்தேர்வு ( Campus Selection) இருக்கிறது. வேலை உறுதி என்பது எல்லாம் மாயை. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 70 சதவிகிதத்திற்கு மேல் மார்க் இருக்க வேண்டும். டிகிரியில் 80 சதவிகிதத்திற்கு மேல் மார்க் இருக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. வளாகத்தேர்வு என்கிற பெயரில் கொடுக்கப்படும் வேலைவாய்ப்பு உறுதி அழைப்பு கடிதங்கள் அப்படியே அழைக்கப்படாமலேயே போகும் வரலாறுகள் எல்லாம் உள்ளன. எனவே, வளாக வேலைவாய்ப்பு என்ற மாயையில் சிக்காமல் இருங்கள்.
எனவே, https://www.tneaonline.org/ என்ற இணையத்தில்
இது, பொறியியல் கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்யவும் பாடங்களை தேர்வு செய்யவும் பயன்படும். ஓவ்வோரு கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள், அவர்கள் பாஸ் ஆன விகிதம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரப்பூர்வமான புள்ளி விபரங்களை பார்த்து கல்லூரிகளையும் பாடங்களையும் தேர்வு செய்யுங்கள். இது மிகவும் பாதுகாப்பானது.