மத்திய அரசின் தொழில்நுட்பத் துறையும் தென்மண்டல தொழில்பழகுநர் (சென்னை) வாரியமும் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை கர்நாடகா மாநிலம் மங்களூர் சாயத்திரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடத்துகிறது.
இந்த முகாம், அக்கல்லூரி வளாகத்தில் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. Graduates in Engineering (B.E., / B.TECH) All branches of Engineering, Diploma Holders in Engineering, Graduates in Non – Engineering (B.A., B.Sc., B.Com., B.B.A., B.C.A., etc.,), Diploma Holder in Non -Engineering பாடங்களில் 2020, 2021, 2022, 2023 & 2024 ஆண்டுகளில் பாஸ் ஆனவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள கட்டணம் இல்லை. NATS User ID தேவையில்லை. ஆனால், இந்த தளத்தில் ஐடி வைத்திருந்தால் நல்லது. மேலும், இந்த முகாமிற்கு வருவோர் அனைத்து கல்வி சான்றிதழ்களின் மூலச்சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். Students should bring all educational certificates along with atleast 3 sets of Bio-Data. மூன்று செட் பயோடேட்டா கொண்டு வர வேண்டும். மூலசான்றிதழ்களோடு, மூன்று செட் ஜெராக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே, அப்ரண்டீஸ் பணியில் இருப்போர், இந்த முகாமிற்கு வர வேண்டாம்.
சர்வதேச நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்க இருக்கிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள, முன்பதிவு கிடையாது. தகுதியுள்ள அனைவரும் நேரடியாக வந்து இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
Golden Opportunity – don’t miss it அருமையான இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் என்று மத்திய உயர்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல் வேண்டும் என்றால் Phone: – 0824-2277766 Email ID: – placements@sahyadri.edu.in என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, இமெயில் முகவரி மூலமாகவோ விபரம் கேட்கலாம்.
தென் மண்டல தொழில் பழகுநர் கோட்டத்தின் website: www.boat-srp.com → Home page → News & Events section frequently பார்த்து அப்டேட் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான அறிவிக்கையை Schedule_Guidelines_CS_Sahyadri இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.