தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் குருப் 2 பணி நிலையில் 2327 காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. TNPSC GROUP 2 / 2 A தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜுலை 19 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எந்தவொரு பட்டப்படிப்பை முடித்தவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், ’’நாடார் மகாஜன சங்கம் – நா.ம.ச.ராஜா K.S.P கணேசன் அகாடமி சார்பில் குருப் 2 போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் நடக்க இருக்கிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள பார்கோடு-ஐ ஸ்கேன் செய்து தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யும் மாணவர்கள், ஜூலை 8, 9 ஆகிய நாட்களில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் அமைந்துள்ள நா.ம.ச.ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
இதில் தேர்ச்சி பெறும் தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும். அதற்கான முழு செலவையும் நாடார் மகாஜன சங்கம் ஏற்றுக் கொள்ளும்.
இந்த அரிய வாய்ப்பினை நமது சமுதாய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று நாடார் மகாஜன சங்கம் பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புக்கு 74022 22201 | 9365 38567
மின்னஞ்சல் | rajakspganesanacademy@gmail.com | nadarmahajanasangam@gmail.com