போக்குவரத்து கழகத்தில் ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘அப்ரென்டிஸ்’ பதவியில் இன்ஜினியரிங் கிராஜூவேட் / டிப்ளமோ பிரிவுக்கு மதுரை மண்டலம் 71, கும்பகோணம் 97, சென்னை 220, இன்ஜினியரிங் அல்லாத பிரிவுக்கு கும்பகோணம் 300 என மொத்தம் 688 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: இன்ஜினியரிங் கிராஜூவேட் பணிக்கு பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ பணிக்கு ஏதாவது ஒரு டிப்ளமோ. இன்ஜினியரிங் அல்லாத பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு: கிராஜூவேட் பணிக்கு ரூ. 9000. டிப்ளமோ பணிக்கு ரூ. 8000.
பணிக்காலம்: ஓராண்டு.
தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு.
கடைசிநாள்: 8.7.2024
விவரங்களுக்கு: boat-srp.com விண்ணப்பிக்க | https://nats.education.gov.in இந்த வேலை குறித்த முழு அறிவிப்பினை வாசிக்க TNSTC_Notification_2024_25_3_Regions (1) இங்கே கிளிக் செய்ய வேண்டும்.