பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான பதிவு முகாமை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான பதிவு முகாமை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் வரை பயனடையும் வகையில், கூரைகளில் சூரிய தகடு அமைப்பதற்கு மானியம் வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான பதிவுக்கு வீடுகளில் தபால்காரர்கள் உதவுவார்கள்.
தூய்மையான, செலவு குறைந்த எரிசக்தி எதிர்காலத்திற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து தனிநபர்களையும நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
பதிவு செய்தல், மானியம், சூரிய மின் திட்டம் செய்யும் நிறுவனங்கள் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தைக் காணவும் அல்லது பகுதி தபால்காரரையும், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளவும்.