மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மத்திய அரசு வேலைக்கு நடக்கும் ஆள்சேர்ப்பு போட்டித்தேர்வில் பங்கேற்கும் தமிழக இளைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்படுகிறது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
மத்திய பணியாளர் தேர்வாணையம், ‘ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023’’ தொடர்பான அறிவிப்பினை 03.04.2023 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அமைச்சகங்கள், பல்வேறு துறைகள், நிறுவனங்கள், அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட அரசின் துறைகளில் உள்ள குருப் பி மற்றும் சி நிலையில் உள்ள 7500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன் முழுஅறிவிப்பினை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_03042023.pdf என்ற லிங்-கில் பார்க்கலாம். இத்தேர்வுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 03.05.2023 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களிலும் இத்தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட இருக்கின்றன. தேர்வு பாடத்திட்டம் மற்றும் பாடத்தொகுப்புகள், பாடக்குறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற தளத்தில் உள்ளது.