தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை என்ற ஊரைச் சேர்ந்தவர் கோமதிநாயகம் விசு. இவர், சமீபத்தில் ஒரு முருகன் படத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது ட்ரெண்டிங் ஆனது. அந்த அபூர்வ முருகன் படம் குறித்து கோமதிநாயகம் விசு தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை புரட்டாசி மாதத்தின் கடைசி வெள்ளி, மாதாந்திர வெள்ளி என்பதால் நண்பரின் வீட்டில் எடுத்த முருகரின் படத்தை பகிர்ந்திருந்தேன்..
கண்ணில் படுவதை வழக்கமாக இங்கே பகிர்வது போலத்தான் இதையும் பதிவிட்டு இருந்தேன். ஆனால் அந்தப் பதிவு இரண்டே நாட்களில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோரை சென்று சேர்ந்து இருக்கிறது. 12 ஆயிரத்திற்கும் அதிகமான Likes, 700 Share என்று சென்று கொண்டே இருக்கிறது.
எத்தனையோ பதிவுகளை மெனக்கட்டு எழுதி இருக்கிறேன். அது 1000 பேரை கடந்து சென்று சேர்ந்தது இல்லை.
ஆனால் முருகரின் படம் செம ரீச்!!
இதே போல முருகன் நம்முடைய வாழ்க்கைத் தரத்தையும் சட்டென்று உயரத்திற்கு கொண்டு சென்று விட்டால் நல்லா இருக்கும்ல்ல😃😀😄
#முருகா