ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பில் 2023-2024 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு அதிமுள்ள இத்துறையின் அறிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
1. சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான இரண்டரை ஆண்டுகள் கால அளவுள்ள பட்டயப்படிப்புகளான 1. ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் 2. நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு பயில அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
2. விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கான விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 26.09.2023 முதல் 04.10.2023 மாலை 05.00 மணிவரை மட்டும் எங்களது அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in -ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்கள் ஆணையர் அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது பள்ளிகளிலோ வழங்கப்படமாட்டாது.
3. விண்ணப்பக் கட்டணம்: விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவம்: ரூ.350/- இக்கட்டணத்தை SBI Collect எனும் இணையதள சேவை வாயிலாக செலுத்தி அதற்குரிய பணப்பரிமாற்ற குறியீட்டு எண்ணிணை அதற்குரிய அசல் இரசீதினையும் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து சமர்ப்பிப்பதன் மூலமாக உரிய விண்ணப்பக் கட்டணத்தினை செலுத்தியதாகக் கருதப்படும்.
4. தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் இனம் / பட்டியல் இனம் (அருந்ததியினர்) / பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் மேற்படி விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப்படிவத்திற்கான தொகை ரூ.350/-ஐ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.
5. விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள். 04.10.2023 மாலை 05.00 மணி வரை.
6. பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப்படிவத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 04.10.2023 மாலை 05.00 மணிக்குள் தபால் அல்லது கூரியர் சேவையின் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சல் துறையினரால் மற்றும் கூரியர் நிறுவனத்தால் ஏற்படும் காலதாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
அனுப்பவேண்டிய முகவரி:
செயலாளர், தேர்வுக்குழு,
இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித்துறை ஆணையரகம்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,
அரும்பாக்கம், சென்னை – 600 106.
7. அஞ்சல் துறை மற்றும் கூரியர் நிறுவனத்தில் கடைசி நாளுக்கு முன் தேதியில் பதிவு செய்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் வந்து வந்து சேரும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதுகுறித்து எவ்வித கடிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளப்படமாட்டாது.
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பப் படிவங்களை கீழ்க்கண்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கட்டணத்தொகையினை பத்தி 3-ல் குறிப்பிட்டுள்ளவாறு இணைத்து அனுப்ப வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இணையதள முகவரி: www.tnhealth.tn.gov.in