ரயில்வேயில் ஜூனியர் என்ஜினியர்கள் 7951 (RRB – Junior Engineer Vacancies) பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி விட்டது. ஜுலை 30 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். என்ஜினியரிங் படிப்பை தவிர்த்து பி.எஸ்.சி வேதியியல், இயற்பியல் படித்தோரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7951 இடங்களுக்கு ஆள் சேர்க்கை அறிவிப்பினை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலிக்கம்யூனிக்கேஷன், கெமிக்கல், மெட்டுராலஜி ஆகிய படிப்புகளை படித்து இருக்க வேண்டும். அதாவது, B.Sc., Chemistry and Physics, Degree or its equivalent in Chemical Technology , Degree or its equivalent in Metallurgical Engineering மற்றும் Mechanical and Allied Engineering, Electrical and Allied Engineering, Electronics and Allied Engineering, Civil and Allied Engineering (Three years Diploma in Engineering or Bachelor’s degree in Engineering /Technology). அதாவது, இந்த வேலைக்கு பட்டதாரிகளும் டிப்ளமோ பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிகளின் படி, உச்சபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
Candidates must have a Three Years Diploma or BE/B.Tech in the relevant Engineering Stream to be eligible for Junior Engineer (JE), Chemical & Metallurgical Assistant (CMA), Junior Engineer (IT), and Depot Material Superintendent (DMS) positions. Final-year students are not eligible to apply.
RRB Junior Engineer (JE), Depot Material Superintendent (DMS) , Chemical & Metallurgical Assistant (CMA) என்ற பணிகளில் 7934 பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், Metallurgical Supervisor / Researcher, Chemical Supervisor / Researcher என்ற பணிக்கு தேர்வாகும் 17 பேர், மெற்குவங்காளத்தில் உள்ள கொரக்பூர் மண்டலத்தில் பணியில் அமர்த்தப்படுவர்.
வேலைக்கான எழுத்து தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தேர்வில் Mathematics 30 கேள்விகள், General Intelligence & Reasoning 25 கேள்விகள், General Awareness 15 கேள்விகள், General Science 30 கேள்விகள் என்று மொத்தம் 100 கேள்விகள் கேட்க்கப்படும். 90 நிமிடம் தேர்வு நடைபெறும். கேள்வி ஒன்றுக்கு, நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இதில், General Awareness 15 கேள்விகள், Physics & Chemistry 15 கேள்விகள், Computer Application Basics 10 கேள்விகள், Environment & Pollution (Basics) 10 கேள்விகள், Technical Ability 100 கேள்விகள் என்று மொத்தம் 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். மொத்தம் இரண்டு மணி நேரம் தேர்வு நடைபெறும். இந்த போட்டித்தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் தரப்படும். குறிக்கப்பட்ட விடை தவறு என்றால் மூன்றில் ஒரு பங்கு (Wrong responses will decrease the 1/3rd mark) குறைக்கப்படும்.
தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ரு.250.
இத்தேர்வுக்கு ஜுலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை https://www.rrbchennai.gov.in/ வழியாக தமிழ்நாட்டு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான வேலைவாய்ப்பு அறிவிக்கையும் இந்த இணையத்தில் காணலாம். இவ்வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியோர் அதற்கான சான்றுகளை பெற உடனே விண்ணப்பித்து விடுங்கள். அப்ளிக்கேஷ்சன் போட இந்த சான்றிதழ் ரொம்ப அவசியம்.
வேலைவாய்ப்பு குறித்த ஆங்கில அறிவிக்கையை முழுமையாக படிக்க இங்கே CEN_03_2024_JE_English கிளிக் செய்யவும். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் விண்ணப்பம் போடுவதற்கு முன்னர், இந்த வேலைவாய்பு அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ’’ கல்வி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம், விண்ணப்பத்தை திருத்தும் முறை, தேவையான சான்றுகள், போட்டோ அப்லோடு செய்வது, தேர்வின் நிலைகள், மார்க் போடும் முறைகள், வயது சலுகைகள்’’ என அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்து தெரிந்து கொண்டு, அதன்பிறகே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பாடத்திட்டத்தை முழுமையாக பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டு படியுங்கள்.
இந்த தேர்வுக்கான அனைத்து பாடங்களின் விடியோக்கள் www.youtube.com/@MadrasMurasu என்ற யூடியூப் சேனலில் உள்ளது. அதை பார்த்து குறிப்பெடுத்து ரயில்வே வேலையில் எளிதில் சேரமுடியும். எனவே, ரயில்வே தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள Mathematics , General Intelligence & Reasoning , General Awareness , General Science வீடியோக்கள் மெட்ராஸ்முரசு யூடியூப் சேனலில் உள்ளது. உடனே www.youtube.com/@MadrasMurasu சப்ஸ்கிரைப் செய்து அரசு வேலையில் சேருங்கள்.