‘லியோ’ ரிலீஸ் நாளில், தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகிறது.
தெலுங்கின் பிரபலமான முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நாக்ஸ் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது. அதன் முதல் வெளியீடாக பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான ‘பகவந்த் கேசரி’ யின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19 அன்று வெளியாகிறது. அன்றுதான் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ராவிப்பூடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் அதிரடி டிரைலர் ரசிகர்களிடையே பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள நிலையில் இப்படத்தை அக்டோபர் 19 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ ரிலீஸ் நாளில், தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.