விஐடி எனப்படும் வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பி.டெக் படிப்பில் சேர நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள். நுழைவுத் தேர்வு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள், மே 3 ஆம் தேதி வெளியாகிறது.
வேலூரில் 1984 ஆம் ஆண்டு வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. 2001-ல் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. சென்னை கேளம்பாக்கத்தில் விஐடி வளாகம் தொடங்கப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் அமராவதி, மத்தியப்பிரதேசத்தில் போபால் ஆகிய இடங்களில் விஐடி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.
நிகர்நிலைப் பல்கலைக்கழகமான விஐடியில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் பி.டெக். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பவர்களுக்கு இலவசமாக கல்வியும் அடுத்தடுத்த இடங்களைப் பிடிப்பவர்களுக்கு, கட்டணத்தில் சலுகையும் வழங்கப்படுகிறது. நுழைவுத் தேர்வு ஏப்ரல் 19 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 30 கடைசித் தேதி ஆகும். நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 3 ஆம் தேதி வெளியாக உள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான பொறியியல் இளநிலை பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு விஐடிஇஇஇ- 2024 (VITEEE 2024) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் அல்லது உயிரியல் பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும்.
இந்தியாவில் உயர் கல்வியில் முன்னணி கல்வி நிறுவனமாக இருக்கும் விஐடியில் பிடெக் படிப்பில் சேர விஐடி நடத்தும் நுழைவுத்தேர்வு கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும். எனவே, விஐடி-யில் படிக்க விரும்புவோர் உடனே விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு விதிமுறைகள், பாடத்திட்டம், விண்ணப்பித்தல் என அனைத்திற்கும் https://viteee.vit.ac.in/ என்ற இணையத்தை க்கிளிக் செய்து பார்க்க வேண்டும்.
பிளஸ் டூ மாணவர்களே..! உங்களது பொதுத்தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டாம். நீங்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.