ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் ஆள்சேர்க்கை நடைபெறுகிறது என்று இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரிகளும் 12 ஆம் வகுப்பு படித்தோரும் செப்டம்பர் 13 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கிராஜூவேட் பிரிவில் டிக்கெட் சூப்பர்வைசர் 1736, ஸ்டேஷன் மாஸ்டர் 994, சரக்கு ரயில் மேனேஜர் 3144, ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டென்ட் (டைப்பிஸ்ட்) 1507, சீனியர் கிளார்க் (டைப்பிஸ்ட்) 732, டிக்கெட் கிளார்க் 2022, அக்கவுன்ட்ஸ் கிளார்க் (டைப்பிஸ்ட்) 361, ஜூனியர் கிளார்க் (டைப்பிஸ்ட்) 990, ரயில் கிளார்க் 72 உட்பட மொத்தம் 11,558 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பிரிவுக்கு பிளஸ் 2.
வயது: 18 – 36, 18 -33 (1.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு | சான்றிதழ் சரிபார்ப்பு | மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbchennai.gov.in/
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
கடைசிநாள்: 13.10.2024