மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கல்வி மற்றும் சமூக- பொருளாதார ரீதியாக அதிகாரமளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், யூஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் நிறுவனங்களால் வழங்கப்படும் இளநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை போன்று சிறுபான்மையினருக்காக மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.
யூஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் உதவித் தொகை சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கப்படும் போதிலும் இது தவிர கூடுதலாக சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் மூலமும் உதவித் தொகைகளை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அனைத்து பிரிவு மக்களுக்குமான கல்வி உதவித்தொகை குறித்து https://scholarships.gov.in/ என்ற தேசிய ஸ்காலர்ஷிப் இணையத்தளத்திற்கு சென்று அனைத்து விதமான ஸ்காலர்ஷிப் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்க இந்த இணையத்தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.