அனைத்து கட்சிகளும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் தாங்கள் சார்ந்த அணி வெல்வதற்கான அரசியல் களத்தில் மும்முரமாக யுகங்களை வகுத்து வருகிறது. துவக்கத்தில் தேர்தல் அரசியலை புறக்கணித்து மக்களுக்கான அரசியலை மட்டுமே பேசி களமாடி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிகாரத்தில் ஆளுமை செய்வதின் மூலமே அடக்குமுறைகளை தகர்க்க முடியும் என்கிற திட்டத்தோடு தனது நிலைபாட்டை மாற்றி 90 களின் இறுதியில் தேர்தல் அரசியலில் பங்கேற்றது. தேர்தல் அரசியலில் தடம் பதித்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. விசிகவின் இரண்டாவது இன்னிங்ஸ் என்பது
விசிக அனைவருக்குமான அரசியல் இயக்கமாக இருக்க வேண்டும் என்கிற தனது செயல்திட்டத்திற்கு வடிவம் கொடுக்க முடிவெடுத்தார் திருமா.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘வாய்ஸ் ஆஃப் காமெண்’ என்கிற நிறுவனத்தை நடத்திவரும் தேர்தல் வியூகம் மற்றும் தரவுகள் கையாளுவதில் நிபுணத்தும் பெற்ற ஆதவ் அர்ஜூனவை விசிக பக்கம் கொண்டுவந்து விசிக கட்சிக்குள் பல கட்ட மாற்றங்களை கொண்டுவந்தார் திருமா. அதன்நீட்சிதான் இப்போது பெரிய கட்சிகளே இப்போது விசிகவை கண்டு பிரமிக்க வைத்துள்ளது.

நவீன யுக்தி… இளம்தலைமுறைக்கும் வாய்ப்பை உருவாக்குதல் போன்ற திட்டங்களை கையில் எடுத்து ,அடுத்த பாய்ச்சலுக்கு அணியமாவோம் என்ற முனைப்போடு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது விசிக. அதன்படி தமிழ்நாட்டை நான்கு மண்டலமாக பிரித்து அதில் ஒரு பகுதியாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட 13 நாடாளுமன்ற தொகுதிகளை இணைத்து வடக்கு மண்டலமாக அறிவித்து, 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்களை நியமனம் செய்து அவர்களுக்கான பயிற்சி முகாமை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைத்தியது.

இதுவரை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகள் மட்டுமே தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து அவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தியது. இப்பொழுது திமுக,அதிமுகவிற்கு இணையாக அல்ல அதைவிட ஒரு படி கூடவே மாஸ் காட்டி சென்னையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறையை சக்சஸ்ஃபுல்லாக நடத்தியுள்ளது விசிக. சுமார் 10 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை அடையாள அட்டையுடன் சரிபாரத்து அவர்களை பிரமாண்ட அரங்கில் கூட்டி திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் வியக்கும் அளவிற்கு பயிற்சி முகாம் நடத்தியுள்ளது.
விசிக என்றாலே மேடை ஒழுங்கு இருக்காது என்கிற கருத்தை முழுமையாக ஒழித்துள்ளது விசிக. திட்டமிட்ட நிகழ்வு, தலைவரின் ராம்ப் வாக், முறையான இருக்கை அமைப்பு என அசத்தியிருக்கிறார்கள். இது மற்ற அரசியல் கட்சிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமில்லையாம் வரும் டிசம்பர் மாதம் 23 தேதி திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்கிற தலைப்பில் பிரமாண்ட மாநாட்டை தடத்த உள்ளார்கள். நூறு ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் பேரை இந்த மாநாட்டில் ஒன்று கூட்டி இனி விசிக-வை தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக காட்ட முணைந்துள்ளார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது..!

