தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பேர் போட்டித்தேர்வு மூலம் பணியில் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆள்சேர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதியில் இருந்து மே 27 ஆம் தேதி வரை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளம் வாயிலாக மட்டுமே, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 8, 10 ஆகிய வகுப்பு பாஸ் ஆனவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், வாட்டர்மென், வாட்டர் உமன், மசால்ஜி ஆகிய வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு, தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்.
டிரைவர், நகல் பிரிவு உதவியாளர் Copyist Attender, அலுவலக உதவியாளர் Office Assistant ஆகிய வேலைகளுக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். டிரைவர் வேலைக்கு விண்ணப்பிப்போர், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் ஓட்டுவதற்குரிய, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வாகனம் ஓட்டும் முன் அனுபவம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
Examiner – நகல் பரிசோதகர், Junior Bailif – இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், (Process writer – கட்டளை எழுத்தர், Xerox Operator – ஒளிப்பட நகல் எடுப்பவர் ஆகிய வேலைக்கு விண்ணப்பிப்போர் 10 ஆம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும். ஜெராக்ஸ் ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு ஜெராக்ஸ் எந்திரத்தை இயக்கும் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், காவலர் மற்றும் மசால்ஜி, துப்புறவுப் பணியாளர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென், வாட்டர் உமன், மசால்ஜி ஆகிய வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு, தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்த வேலைகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் 2024 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் விதிகளின் படி அதிகபட்ச வயது வரம்பில் சாதிவாரியாக சலுகைகள் அறிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. . மற்ற வகுப்பினர் தேர்வுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வு, வாய்வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் என்ற நிலைகளில் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான அறிவிக்கையை https://www.mhc.tn.gov.in/ என்ற தளத்தில் பார்க்க வேண்டும். இந்த இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, ஏப்ரல் 28 ஆம் தேதியில் இருந்து மே 27 ஆம் தேதி வரை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளம் வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்.