மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 4187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் என்று இருபாலாரும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Sub-Inspector in Delhi Police, Sub-Inspector in Border Security Force, Sub-Inspector in Central Industrial Security Force, Sub-Inspector in Central Reserve Police Force, Sub-Inspector in Indo-Tibetan Border Police Force, Sub-Inspector in Sashastra Seema Bal ஆகிய ஆயுதப்படைகளில் 4,187 சப்-இன்ஸ்பெக்டர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், மத்திய அரசின் விதிகளின்படி, SC., ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கும் 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வில் General English, General Awareness, General Intelligence & Reasoning, Numerical Aptitude ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் என்று மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில மொழி அறிவுத் தேர்வானது, 200 மதிப்பெண்களுக்கு நடக்கும். கொள்குறி வகையில், 200 வினாக்கள் இடம்பெறும். என்.சி.சி சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் உண்டு.
எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோர் உடல் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். குறைந்தபட்சம், ஆண்கள் 170 செண்டி மீட்டர் உயரமும் பெண்கள் 157 செண்டி மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்று உடல் திறன் சோதனைகள் நடத்தப்படும். எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு ஆகியவற்றின் மதிப்பெண் அடிப்படையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தேர்வானோர் இறுதிப் பட்டியல் வெளியாகும்.
இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 4 ஆம் தேதியில் இருந்து மார்ச் 28 ஆம் தேதி வரை www.ssc.nic.in என்ற தளத்தின் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு வேலைவாய்பு விபரத்தை பார்க்க Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces_2024 கிளிக் செய்யலாம்.