மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) பிளஸ் 2 முடித்தவருக்கு 1130 ராணுவ காலியிடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
கான்ஸ்டபிள் / தீயணைப்பு பிரிவில் அசாம் 164, உ.பி., 108, மஹாராஷ்டிரா 72, காஷ்மீர் 65, ஒடிசா 64, மத்திய பிரதேசம் 56, மேற்கு வங்கம் 55, தமிழகம் 39 உட்பட மொத்தம் 1130 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு
வயது: 18 – 23 (30.9.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 30.9.2024.
விவரங்களுக்கு: www.cisfrectt.cisf.gov.in என்ற இணையத்தை பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பு குறித்த ஆங்கில அறிவிக்கையை முழுமையாக படிக்க இங்கே கிளிக்க் செய்து cisf recruitment 2024_notification_madrasmurasu படிக்கலாம்
விமான நிலையம், துறைமுகம், அனுமின் நிலையங்கள் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் வேலைக்கு அமர்த்தப்படுவர். இவர்களுக்கு பணி புரியும் இடங்களிலேயே குடியிருக்க வீடு வழங்கப்படும். பிள்ளைகள் படிக்க, கேந்திர வித்யாலயா பள்ளிகள் உண்டு. நவோதயா பள்ளிகளும் இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டை சேந்த ஆண்களும் பெண்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை உள்ளடக்கிய www.youtube.com/@MadrasMurasu இலவச வீடியோக்கள் மூலம் பார்த்து படித்து தேர்வெழுதி எளிதில் பாஸ் ஆகலாம். மத்திய அரசின் வேலையில் சேரலாம். உடனே விண்ணப்பித்து மத்திய அரசு வேலையில் சேருங்கள்.