மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 3712 காலிப் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் அறிவிப்பினை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பாஸ் ஆன ஆண், பெண் இருபாலாரும் ஏப்ரல் 8 ஆம் தேதியில் இருந்து மே 7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களில் Lower Divisional Clerk என்கிற கீழ்நிலை எழுத்தர், Junior Secretariat Assistant என்கிற இளநிலை செயலக உதவியாளர், Data Entry Operators என்கிற புள்ளிவிபர தரவு பதிவாளர் போன்ற பணிகளில் 3712 காலிப் பணி இடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பினை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12 வகுப்பு பாஸ் ஆன, ஆண் – பெண் இருபாலாரும் இந்த வேலைக்கு விண்னப்பிக்கலாம்.
விண்ணப்பத்தாரர் வயது, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று 18 வயது முடிந்திருக்க இருக்க வேண்டும். 27 வயது முடிந்திருக் கூடாது. ஆனால், மத்திய அரசின் விதிகளின் படி SC., ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் இடஒதுக்கீடு இல்லாத அனைத்து சாதிகளையும் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் OBC மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் SC., ST மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் என்று வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர், போர் விதவைகள், ஆதரவற்ற விதவைகள் என்று பல்வேறு தரப்பினருக்கு வயது வரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Combined Higher Secondary Level Examination, 2024 என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த போட்டித்தேர்வுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதியில் இருந்து மே 7 ஆம் தேதி வரை https://ssc.gov.in/ என்ற இணையத்தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு Tier-I, Tier-II என்று இரண்டு கட்டங்களாக நடைபெறும். Tier-I எழுத்து தேர்வில் Basic Knowledge English Language, General Intelligence, Basic Arithmetic Skill Quantitative Aptitude, General Awareness ஆகிய பிரிவுகளில் இருந்து தலா 25 கேள்விகள் கேட்க்கப்படும். இந்த தேர்வு கொள்குறி வகையில் இருக்கும்.
இதில் வெற்றி பெறுவோர் Tier-II தேர்வுக்கு அழைக்கப்படுவர். Mathematical Abilities, Reasoning
and General Intelligence, Computer Knowledge ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். இதுவும் கொள்குறி வகையில் கேட்க்கப்படும். Skill Test என்று அழைக்கப்படும் Typing Test மட்டும் செய்முறைத்தேர்வா இருக்கும். ஒரு சில துறைகளுக்கு மட்டும் டைப்பிங் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு என்று 15 மொழிகளில் இந்த தேர்வினை எழுதலாம்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ என்ற ஆன்லைன் மூலம் மட்டுமே மே 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு குறித்த ஆங்கிலம் அறிவிக்கை Notice of CHSLE 2024_05_04_24