மத்திய அரசு நிறுவனத்தில் நேர்முக உதவியாளர் வேலை. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தட்டச்சு, சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (Employees’ Provident Fund Organisation) 323 நேர்முக உதவியாளர் பணி Personal Assistant இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அதன் அலுவலகங்களில் அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள் Personal
Assistant காலிப்பணி இடங்களை நிரப்பும் உத்தரவு வெளியாகி இருக்கிறது. அதாவது, UR-132, EWS-32, OBC-87, SC-48, ST-24 (PwBD-12) என்று இனம் வாரியாக காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும். அதோடு, ஆங்கிலத்தில் 50 நிமிடத்துக்கும் இந்தியில் 65 நிமிடத்திலும் 120 வார்த்தைகள் கம்யூட்டரில் அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் 10 நிமிடத்துக்கு ஆங்கிலம் அல்லது இந்தியில் 120 வார்த்தைகளை அடிக்க வேண்டும்.
பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் URs / EWSs 30 வயது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் OBCs 33 வயது, எஸ்சி., எஸ்டி., SCs/STs 35 வயது, மாற்றுத்திறனாளிகள் PwBDs 40 வயது என்று அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கும் 18 வயது ஆகும்.
எழுத்து தேர்வு, இரண்டு மணி நேரம் நடக்கும். மொத்தம் 300 மதிப்பெண். அதில் வெற்றி பெறுவோர் திறன் தேர்வுக்கு Skill Test(s) அழைக்கப்படுவர். எழுத்து தேர்வில் i) English Language. ii) General Awareness. iii) Quantitative Aptitude. iv) Reasoning & Computer Aptitude ஆகிய பகுதிகளில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்க்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே எழுத்து தேர்வு நடைபெறும்.
தகுதியும் ஆர்வமும் உடையோர் ஆன்லைன் https://www.upsconline.nic.in வழியாக மார்ச் 7 ஆம் தேதியில் இருந்து மார்ச் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விளம்பரத்தையும் தேர்வு பாடத்தையும் முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும் AdvtNo-51-2024-Spcl-PrsnAsst-engl-070324_0