மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா நிறுவனத்தில் 517 பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 517 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு அடங்கிய தெற்கு மண்டலத்தில் 131 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: B.E/B.Tech/M.E/M.Tech in Engineering (Electronics, / Electronics & Communication /
Electronics & Telecommunication/ Telecommunication / Communication / Mechanical/ Electrical
/Electrical & Electronics / Computer Science /Computer Science & Engineering / Information Science/ Information Technology)
Trainee Engineer விண்ணப்பத்தாரர் வயதானது 01.02.2024 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும். M.E / M.Tech படித்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 13 ஆம் தேதிக்குள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfWbNC9vtwJ_Y2-RXsz4Pqb83Mhq3quYiG2TaXFsJL8cNxRQ/viewform?usp=sf_link என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.bel-india.in/careers/ என்ற தளத்தை பார்க்கலாம்.
எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் சரிபார்க்கப்பட்டு ஒரு வேலைக்கு 5 பேர் என்ற அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வுக்கு அதிகபட்சம் 15 மதிப்பெண் உண்டு. முதல் வருடம் மாதாமாதம் 30,000 ரூபாய். இரண்டாம் வருடம் மாதாமாதம் 35,000 ரூபாய். மூன்றாம் வருடம் மாதாமாதம் 40,000 ரூபாய் வழங்கப்படும்.
இந்த வேலை குறித்து முழுமையான தகவலை தெரிந்து கொள்ள Bel_notification_517 இங்கே கிளிக் செய்து படிக்கவும்