கேரளாவில் கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி தனியார் வங்கியான பெடரல் வங்கியில் கிளாக் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பட்டதாரிகள் இந்த வேலைக்கு ஜுலை 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம்: பெடரல் வங்கி (Federal Bank)
பணி: கிளார்க் (Non-Officer (Clerical) Cadre)
பணி இடம்: நாடு முழுவதும் அதன் கிளைகளில்
கல்வித்தகுதி: பட்டதாரிகள் (60% மேல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். அதுபோல 10 மற்றும் 12-ம் வகுப்புகளிலும் 60% மேல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்) டிப்ளமோ முடித்த பின் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். (Graduation course must entail a minimum of 3 years of education after completing higher secondary schooling or Diploma)
வயது: ஆதி திராவிடர், பழங்குடியினர் 29 வயது வரை விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு 24 வயது.
சம்பளம் : அனைத்துவிதமான வரி பிடித்தங்களும் போக மாதம் ரூ.39,000 வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
விண்ணப்ப கட்டனம்: எஸ் சி எஸ் டி பிரிவினருக்கு ரூ.120
மற்றவர்களுக்கு ரூ.600
தேர்வு முறை: Online Aptitude Assessment, Potential Assessment through Group Discussion / Preliminary Interaction and Personal Interview or any other mode of selection to be decided by the Bank.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் தொடங்கும் நாள் : ஜுன் 26
விண்ணப்பம் முடியும் நாள் : ஜுலை 15
தேர்வு பயிற்சி : ஜுலை 23 முதல் ஜூலை 25 வரை
தேர்வு : ஜூலை 30
கூடுதல் விபரங்களுக்கு : https://www.federalbank.co.in/ ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.