நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
தொல்தமிழர் வீரத்தின் பெருமைமிகு அடையாளம், கொடும்பாளுர், மணலூர், திங்களூர், காந்தலூர், அழுந்தியூர், காரை, மரங்கூர், புகழி, அண்ணல்வாயில், செம்பொன்மாரி, வெண்கோடல், கண்ணனூர் என்று தான் நேர்நின்ற போர்க்களங்கள் யாவிலும் எதிரிகள் கலங்கிட படை பல வென்று, புறங்காணா அறங்கண்ட புறநானூற்று பெருவீரன் நமது போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று ஈடு இணையற்ற அவரது மாவீரத்தை நினைவுக்கூர்வோம்!
நற்றமிழ் புலவர் புகழ்ந்து பாடிய நானிலம் வியக்கும் தமிழ் மாமன்னன், வஞ்சிப்பூ சூடி வாள்போரில் வெற்றிபெற்று வாகைப்பூசூடிய கோமாறன், நெஞ்சை அள்ளும் தஞ்சை தரணி ஆண்ட தமிழ்ப்பெரும் மூதாதை, ‘வல்லவக்கோன்’
பெரும்பிடுகு முத்தரையர் புகழைப் போற்றுவோம்!
செந்தலை கல்வெட்டில் செந்தமிழ் வெண்பாக்கள் கொண்டு மெய்கீர்த்தி கண்ட ‘விடேல் விடுகு விழுபேரதிரையன்’ அருந்தமிழ் பெரும்பாட்டன்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு நமது புகழ் வணக்கத்தை செலுத்துவதில்
பெருமிதமும், பேருவகையும் கொள்வோம்!