மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இச்சட்டங்கள் மக்களவையில் மொத்தம் 9 மணி நேரம் 29 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டன. இதில் 34 உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வழங்கினர். அதே நேரத்தில் மாநிலங்களவையில் இது 6 மணி நேரம் 17 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது. இதில் 40 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், தாம்பரம் சிட்டி போலீஸ் சார்பில் மூன்று சட்டங்களையும் அதன் முந்தைய சட்டங்களையும் ஒப்பிட்டு பிரிவு வாரியாக தண்டனை விபரங்களை குறிப்பிட்டு 29 பக்கங்களில் கையடக்க புத்தகமாக வெளியிட்டுள்ளது. சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்த புத்தகம் உள்ளது.
புதிய சட்டங்களின் முக்கிய அம்சங்களாவன:
பாரதிய நியாய சன்ஹிதா, 2023: இந்திய தண்டனைச் சட்டம் 1860-க்கு மாற்றான இந்தப் புதிய சட்டத்தில் தேசதுரோகம் என்பது நீக்கப்படுள்ளது. பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதுற்கு மரண தண்டனை வழங்க வகை செய்கிறது. முதல் முறையாக இந்த தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023: இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் வருமானம் மற்றும் சொத்துக்களை இணைக்கும் புதிய வழிமுறை இணைக்கப்பட்டுள்ளது.
பாரதிய சாக்ஷியா 2023: இது இந்திய சாட்சிகள் சட்டம் 1972க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை அடங்கும். வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்ரப்பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல்மயாக்கப்பட வேண்டும். காகித ஆவணங்களைப் போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களும் சட்ட அங்கீகாரம், மதிப்பு, அமலாக்கத்தன்மை பெறும்.
புதிய சட்டங்கள் – சுருக்க புத்தகம் – தண்டனை விபரங்கள்
தாம்பரம் சிட்டி போலீஸ் சார்பில் மூன்று சட்டங்களையும் அதன் முந்தைய சட்டங்களையும் ஒப்பிட்டு பிரிவு வாரியாக தண்டனை விபரங்களை குறிப்பிட்டு 29 பக்கங்களில் கையடக்க புத்தகமாக வெளியிட்டுள்ளது. சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்த புத்தகம் உள்ளது. புதிய சட்டங்களின் புதிய கையக்க சுருக்க புத்தகம் BNS, BNSS, BSA 2023 TCP படிக்க இங்கே கிளிக் செய்யவும்.