இந்தியன் ஆர்மியில் சிப்பாய் பணி நிலையில் பார்மஸிஸ்ட் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை இந்தியன் ஆர்மி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிசேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு சேவையாற்ற ஆர்வமுடன் இருக்கும் துடிப்பான இளைஞர்களை முப்படைகளில் ஒன்றான இந்தியன் ஆர்மியில் சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 12 ஆம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று டிப்ளமோ இன் பார்மஸி படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பார்மஸி பட்டப்படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் சிப்பாய் தேர்வு நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர் வயது,19 -ல் இருந்து 25 -க்குள் இருக்க வேண்டும். 165 செண்டி மீட்டர் உயரம் இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு உடற்கூறு நிபந்தனைகளில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி மாணவர்களுக்கு போனஸ் மதிபெண்கள் வழங்கப்படுகிறது.
எழுத்துத் தேர்வில், General Knowledge, English, Pharmacy-I, Pharmacy-II என்ற பாடங்களில் இருந்து மொத்தம் 100 கேள்விகள். இடம்பெறும். மொத்த 150 மதிப்பெண்கள். கொள்குறி வகையிலான எழுத்து தேர்வு ஆன்லைன் மூலம் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. எழுத்து தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும் Sol_Pharma exam sylabus
சிப்பாய் பார்மஸிஸ்ட் ஆக, தேசப்பணியில் ஈடுபட ஆர்வமும் துடிப்பும் உள்ள இளைஞர்கள், www.joinindianarmy.nic.in ஆன்லைன் மூலம் பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு, கல்வித்தகுதி, உடல் திறன், விண்ணப்பிப்பது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களுக்கு இங்குள்ள லிங்கை கிளிக் செய்யவும் ZRO_Chennai_Notification__Sep_Pharma__2024-25