பா.ம.க, வன்னியர் சங்க மாவட்ட செயலர்கள்
கூட்டுக் கூட்டம் மே 6-ஆம் நாள் நடைபெறும் என்று பாமக தலைமை நிலையம் அறிவித்துள்ளது
“பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் & மாவட்ட தலைவர்களின் கூட்டுக் கூட்டம் வரும் மே 6 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அம்மா திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் இரு அமைப்புகளின் மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் அனைத்து மாவட்ட செயலர்கள் & மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று பாமக தலைமை நிலையம் ஓர் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.