திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ நிறுவனத்தில் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 100 பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்தும வளாகத்தில் அப்ரண்டிஸ் APPRENTICE பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 10.02.2024 மற்றும் 11.02.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
GRADUATE APPRENTICE (ENGINEERING)
காலியிடங்களின் எண்ணிக்கை: 41
Mechanical Engineering – 10
Electronics Engineering – 10
Electrical Engineering – 05
Civil Engineering – 05
Instrumentation Engineering – 03
Chemical Engineering – 03
Computer Science Engineering – 05
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Bachelor’s Degree in Engineering/Technology படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
TECHNICIAN APPRENTICE
காலியிடங்களின் எண்ணிக்கை: 44
Mechanical Engineering – 15
Electronics Engineering – 10
Electrical Engineering – 10
Civil Engineering – 05
Chemical Engineering – 04
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering/Technology படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 8,000
GRADUATE APPRENTICE (NON ENGINEERING)
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வித் தகுதி : Bachelor’s Degree (Non engineering
graduates (B.A, B.Sc, B.Com) படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
வயதுத் தகுதி: 03.02.2024 அன்று டெக்னீசியன் பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். டிகிரி தகுதி பணியிடங்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:
Graduate Apprentice (Engineering) : 10.02.2024
Technician Apprentice : 10.02.2024
Graduate Apprentice (Non Engineering) : 11.02.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அப்ரண்டீஸ் விளம்பரம் என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
அப்ரண்டிஸ் வேலை விண்ணப்பத்தாரர் நிரப்ப வேண்டிய விண்ணப்ப படிவம் Application Form for Graduate (Engineering & Non – Engineering) & Technician Apprentices
மேலும், கூடுதவல் தேவை என்றால் www.iprc.gov.in என்ற இணையத்தை பார்வையிடலாம்.