தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துச் செய்தி:
நீட் தேர்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா மாணவ,மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும்…பாராட்டுக்களும்…
அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் மற்றும் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 இடங்களைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த
மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீட் தேர்வில் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தமிழக மாணவர்கள் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது வருங்கால மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கின்றது.
நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு நிறைவேறுகிறது.
தமிழக மாணவர்கள் படைத்துள்ள சாதனை நீட் தேர்வை பற்றிய அவநம்பிக்கையை போக்கி மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாக நீட் தேர்வு பலமாகவும், பாலமாகவும் புதிய நம்பிக்கையை அளிக்கின்றது.