“தோல்விதான் வெற்றியின் தாய்” என்று 12-ம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவர்களுக்கு அடுத்த கட்டம் செல்ல வேண்டியது குறித்து நம்பிக்கையை விதைத்துள்ளார் சீமான்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருஙகிணைப்பாளர் சீமான் அறிக்கை:
பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகளும் சிறிதும் மனந்தளர வேண்டாம்!
தோல்விதான் வெற்றியின் தாய்!
தோல்வி என்பது தோல்வியல்ல; அது வெற்றிக்கான முதற்படி!
இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம்,
நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப்போவதில்லை!
தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காத வரை!
உலகில் வெற்றியின் சிகரம் தொட்ட சாதனையாளர்கள் அனைவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள்தான்!
ஆகவே, என் அருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சியுங்கள். உறுதியாக வெற்றிபெறுவீர்கள்.