தெற்கு ரெயில்வேயில் 2,438 காலிப் பணியிடங்களில் ஐடிஐ, எம்.எல்.டி., ஸ்டெனோகிராபர்-சுருக்கெழுத்து படிப்பு முடித்தவர்களை நியமிக்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வயது 15 முதல் 24 -க்குள் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு ஜுலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ் 12 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்தியன் ரயில்வே. அதில் தெற்கு ரெயில்வே மிகவும் முக்கியமானது. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பெரம்பூர் கேரேஜ் ஒர்க்-கில் பணிபுரியம் 1337 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
அதுபோல, திருச்சி பொன்மலை செண்ட்ரல் ஒர்க்ஷா-ப்பில் 379 பேரும் போதனூர் சிக்னல் மற்றும் டெலிகாம் ஒர்க்ஷா-ப்பில் பணிபுரிய 722 பேரும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவுடன் வேலையில் சேரும் அறிவிப்பு கடிதம், வீடு தேடி வரும்.
இந்த வேலை அப்ரண்டீஸ் சட்டப்படி கிடைக்க இருக்கிறது. மத்திய அரசின் அப்ரண்டீஸ் விதிகளின் படி மாதம் தோறும் ஊதியம் தரப்படும். இவ்வேலைக்கு ஜுலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன் பெண் என்று இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். 10 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தோர், எம்.எல்.டி (லேப் டெக்னீஷியன்), ஸ்டெனோகிராபர் (சுருக்கெழுத்தர்) விண்ணப்பிக்க முடியும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஐம்பது சதவீத மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
https://sr.indianrailways.gov.in/ தளத்தில் Personnel Branch Information என்ற பக்கத்தில் முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ படிப்பினை முடித்திருக்க வேண்டும். இவர்களுக்கு இரண்டு ஆண்டு தொழில் பழுகுநர் பயிற்சி வழங்கப்படும். வெல்டர் (காஸ் மற்றும் எலெக்ட்ரிக் ), மெடிக்கல் லேபரட்டரி டெக்னீசியன் (MLT) படித்தவர்களுக்கு 15 மாதங்கள் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படும். இவை தவிர மற்ற பிரிவுகளில் தொழில் பழகுநர் பணியில் சேர்க்கப்படுவோருக்கு அப்ரண்டீஸ் விதிகளின் படி ஓராண்டு பயிற்சி தரப்படும்.
டிப்ளமோ, இன்ஜினியரிங் என்று உயர் கல்வி படித்தோர் விண்ணப்பிக்க வேண்டாம். கண்பார்வை, உடல் மாற்றுத்திறன் என்று மத்திய அரசின் விதிகளின் படி, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
இந்த வேலைக்கு ஜுலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை https://sronline.iroams.com/rrc_sr_apprenticev1/recruitmentIndex வழியாக மட்டுமே விண்னப்பிக்க வேண்டும். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம். ஆந்திராவில் எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களை சேர்ந்தோரும் கர்நாடகாவில் தட்சண கர்நாடகா பகுதியை சேர்ந்தோரும் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்புப் குறித்த முழு அறிவிக்கையை Southern_Railway_Apprentices_notification_2024-2025 இங்கே கிளிக் செய்து படிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அறிவிக்கையை முழுமையாக படித்த பின்னர், விண்ணப்பிக்க வேண்டும்.
தொழில் பழகுநர் விதிகளின்படி, மாத ஊதியம் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி மார்க் ஷீட், சாதி சான்றிதழ், வங்கி பாஸ் புத்தகம், ஆதார், பான் கார்டு ஆகியவற்றில் விண்ணப்பத்தாரர் பெயரும் தந்தை பெயரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஏதாவது மாற்றம் இருந்தால் அதனை உடனே சரி செய்து கொள்ள வேண்டும். இந்த தொழில் பழகுநர் வேலைக்கு விண்ணப்பிப்போர், https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து அதற்கான ஐடி-ஐ பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.