தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில் நுட்ப பணிகளுக்கு போட்டித் தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் பட்டயம், தொழிற்பயிற்சி நிலை யில் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ் தகுதித் தேர்வு , பொது அறிவு மற்றும் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்.
Agriculture, Architecture, Automobile and Mechanical Engineering, Civil Engineering, Electrical Engineering / Electrical and Electronics Engineering, Handloom Technology / Textile Technology / Textile Manufacture, Instrumentation Engineering , Mechanical Engineering, Physical Education , Printing Technology, Stenography, Town and Country Planning,
Trade – Boiler Attendant, Trade – Draughtsman (Civil), Trade – Electrician, Trade – Fitter, Trade – Instrument Mechanic, Trade – Lab Technician , Trade – Mechanic Motor Vehicle Trade – Mechanic Refrigeration and Air-Conditioner, Trade – Surveyor, Trade – Welder (Gas and Electric) ஆகிய பாடங்கள் தாள் இரண்டு என்கிற வகையில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும்.
டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ, சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இந்த போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல உச்ச வயது வரம்பில் பணியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது.
எனவே, வயது வரம்பு, கல்வித்தகுதி, தேர்வு விபரம், பாடத்திட்டம் ஆகியவற்றை வேலைவாய்ப்பு அறிவிக்கையினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் அறிவிக்கை CTSE_DIP_Tamil_13.08.2024_
இந்த வேலைவாய்பில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்தகுதி தேர்வு, பொது அறிவிவு தாள் ஆகியவை பத்தாம் வகுப்பு தரத்தில்தான் இருக்கும். எனவே, குருப் 4 தரத்தில்தான் கேள்விகள் கேட்க்கப்படும். அதுதொடர்பான அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய வீடியோக்கள் மெட்ராஸ் முரசு யூடியூப் சேனலில் www.youtube.com/@MadrasMurasu உள்ளது. அதை சப்ஸ்கிரைப் செய்து பார்த்து, நோட்ஸ் எடுத்து படிக்கலாம். எளிதில் இந்த தேர்வில் வெற்றிபெற்று அரசு பணியில் சேரலாம்.