தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, அஞ்சல் துறையுடன் இணைந்து, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பிரசாதங்களை அஞ்சல் மூலம் மக்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள 48 கோவில்களின் பிரசாதத்தை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in மூலமாகவோ அல்லது “திருக்கோயில்” மொபைல் செயலி மூலமாகவோ பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் பக்தர்கள் தங்களுக்கு எந்த கோவிலின் பிரசாதம் தேவை, முகவரி, தேவையான அளவு மற்றும் இதர விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், தபால் துறையினர் கோவில் அதிகாரிகளிடம் இருந்து பிரசாதத்தைப் பெற்று, வேக அஞ்சலில் பாதுகாக்கப்பட்ட உறைகளில் பக்தர்களின் வீட்டு வாசலிலேயே வழங்குவர்.
சென்னை நகர மண்டலத்தின் கீழ் பின்வரும் 11 கோவில்களுக்கு பிரசாதம் சேவை கிடைக்கிறது.
வரிசை
எண் |
கோவிலின் பெயர் | பிரசாத விவரங்கள் | பிரசாதத்தின் விலை (ரூ) |
தேவராஜசுவாமி கோயில், காஞ்சிபுரம்-631501 | குங்குமம், மஞ்சள்காப்பு, சுவாமி புகைப்படம் | 100 | |
வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, சென்னை 600026 | சுவாமி புகைப்படம், விபூதி | 70 | |
லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்,சோளிங்கர்-631102 | கல்கண்டு, முந்திரி, உலர் திராட்சை, குங்குமம், சுவாமி புகைப்படம் | 145 |
அருணாச்சலேஸ்வரர் கோவில்,
திருவண்ணாமலை 606601 |
சுவாமி புகைப்படம், விபூதி, குங்குமம் | 10 | |
சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணி-631209 | குங்குமம், விபூதி, சுவாமி புகைப்படம் | 100 | |
தியாகராஜசுவாமி கோயில், திருவொற்றியூர், சென்னை -600019 | குங்குமம், விபூதி, சுவாமி புகைப்படம், வில்வம் | 50 | |
தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு, சென்னை 600077 | குங்குமம், விபூதி, திருசாம்பல், சுவாமி புகைப்படம் | 50 | |
காமாட்சி அம்மன் கோவில்,
மாங்காடு-600122 |
குங்குமம், மஞ்சள்,சுவாமி புகைப்படம் | 30 | |
பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை 600005 | குங்குமம், மஞ்சள், சுவாமி புகைப்படம் | 80 | |
கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை 600004 | குங்குமம், விபூதி | 30 | |
அங்காளம்மன் கோவில், மேல்மலையனூர் -604204 | குங்குமம், விபூதி, புற்று மண், சுவாமி புகைப்படம்,அம்மன் கயிறு | 10 |
*மேலே உள்ள கட்டணங்கள் அஞ்சல் கட்டணம் சேர்க்கப்படாத கட்டணம் ஆகும்.
இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில்பிரசாதங்களை முன்பதிவு செய்யும் வசதியுள்ள தமிழ்நாட்டின் வேறு சில முக்கிய கோவில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வரிசை
எண் |
கோவிலின் பெயர் | பிரசாத விவரங்கள் | பிரசாதத்தின் விலை (ரூ) |
மாரியம்மன் கோவில் – சமயபுரம் | குங்குமம், விபூதி, மஞ்சள், சுவாமி புகைப்படம் | 30 | |
|
சுவாமிநாதசுவாமி கோயில் – சுவாமிமலை-612302 | குங்குமம், விபூதி | 15 |
|
அரங்கநாதசுவாமி கோயில் – ஸ்ரீரங்கம்-620006 | கல்கண்டு, மஞ்சள் | 19 |
|
சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம்-625005 | விபூதி, சுவாமி புகைப்படம் | 70 |
மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், மதுரை-625001 | தாழம்புகும்குமம், சுவாமி புகைப்படம், மாங்கல்யசரடு | 100 | |
சுப்ரமணியசுவாமி கோயில், திருச்செந்தூர்-628215 | இளையதிருநீர், புத்தமுது, சுவாமி புகைப்படம் | 120 | |
தண்டாயுதசுவாமி கோயில், பழனி-624601 | பழனிபஞ்சாமிர்தம், புகைப்பட சட்டகம், விபூதி | 140 | |
சுப்பிரமணியசுவாமி கோயில், மருதமலை-641046 | குங்குமம், விபூதி, புகைப்படம் | 66 |
*மேலே உள்ள கட்டணங்கள் அஞ்சல் கட்டணம் சேர்க்கப்படாத கட்டணம் ஆகும்.
கோயில் பிரசாதத்தை வீட்டு வாசலிலேயே பெற விரும்பும் பொதுமக்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் ‘திருக்கோயில்’ மொபைல் செயலி மூலமாகவோ அல்லதுwww.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யலாம்.