தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 05.03.2024 முதல் 14.03.2024 (பத்து நாட்கள்) தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் & கேரட் (Carat & Carat) தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board rate), ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான், தங்கம் (999% 916% 85% 80% 75% ) தரம் அறிதல் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை இரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகளன்கள், ஆபரண வகைகள், மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும்.
மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி பற்றியும், அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.
முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ்
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
8668102600 / 86681 00181 / 7010143022 / 9841336033.
முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
வேலைவாய்ப்புகள்
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நடத்தும் பொதுத்துறை வங்கிகளில் நகைக் கடன் கொடுக்கும் பிரிவில் வேலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தனியார் வங்கிகளில் வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தனியார் நிதி நிறுவனங்களில் வேலை செய்யலாம். சொந்தமாக நீங்களே நகைக் கடை தொடங்கலாம். அடகு கடை நடத்தலாம். எனவே, வேலைவாய்ப்பு மிகுந்த இந்த தொழில் படிப்பில் ஆர்வமுடையோர் உடனே சேர்ந்து பயன் அடையலாம். இந்த படிப்பு சான்றிதழ் வைத்திருப்போருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வங்கிக்கடன் மிக எளிதாக கிடைக்கிறது என்று தொழிற்பயிற்சி வல்லுநர்கள் சொல்கிறார்கள்.