தக்கலை நாட்டியாலயா_வில் கோடை கொண்டாட்டம் தொடங்கி விட்டது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லலாம். அதற்கான முக்கிய அறிவிப்பினை ‘நாட்டியாலயா’ வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை முத்தலக்குறிச்சி பஸ் நிலையம் அருகில், ‘நாட்டியாலயா’ டான்ஸ் ஸ்கூல் செயல்பட்டு வருகிறது. இங்கு, பரதநாட்டியம் முதன்மைப் பாடமாக சொல்லித்தரப்படுகிறது. இங்கு பரதம் பயின்ற எம்.அதிதி சந்திரசேகர், மத்திய அரசு நடத்திய கலா உத்சவ் போட்டியில் தமிழ்நாடு அளவில் முதல் பரிசை 2024 ஆண்டு பெற்றார். ஆர்.எம்.பப்ரின் ஷன்போ, 2023 ஆண்டு கலா உத்சவ், தமிழ்நாடு ஆளவில் முதல் பரிசினை வென்றார்.
மேலும், இங்கு பரதம் பயிலும் பல்வேறு மாணவிகள், மாவட்டம், மாநிலம் அளவில் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்கள். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், ரோட்டரி, லயன்ஸ் கிளப், மனமகிழ் மன்றங்கள், உள்ளூர் அமைப்புகள் நடத்திய பல்வேறு போட்டிகளில் பதக்கங்களையும் பாராட்டுகளையும் குவித்துள்ளார்கள்.
இத்தகைய புகழ்மிக்க, ‘நாட்டியாலயா’ பள்ளியில் காலடி சங்கராச்சாரியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஆர்.எல்.வி.சக்திகுமார், முதன்மை குருவாக இருந்து பரதம் சொல்லித் தருகிறார். நவ்யா நாயர், ரம்யா நம்பீசன், திவ்யா உன்னி, மியா ஜார்ஜ், சோனா நாயர், தேவி சந்தனா, கிருஷ்ண பிரபா போன்றவர்களுக்கும் பேராசிரியர் ஆர்.எல்.வி.சக்திகுமார் ‘குரு’ என்பது குறிப்பிடத்தகக்து.
இந்த நாட்டியாலயா பள்ளியில், கோடை விடுமுறையை முன்னிட்டு, பரதநாட்டியம், மோகினியாட்டம், வெஸ்டர்ன், பிரிஸ்டைல், போல்க், வயலின், மியூசிக், யோகா, செஸ், டிராயிங் போன்ற கலைகளில் சாதிக்க துடிக்கும் மாணவ மாணவிகளுக்கு சொல்லித்தர இருப்பதாக நாட்டியாலயா நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை வகுப்புகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.
மே மாதம் இறுதியில், கோடைவிடுமுறையில் பயிற்சி எடுத்தவர்களுக்கு போட்டி நடைபெறும். அவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் தரப்படுகிறது. நாட்டியாலயா பள்ளியின் கோடை விடுமுறை பயிற்சியில் சேர 7418540701, 8089447475 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
கோடை விடுமுறையை பயனுள்ளதாக்க நாட்டியாலயா- வில் உடனே சேருங்கள்..! நாட்டியாலயா-வில் சம்மர் கிளாஸ் ஸ்டார்ட்டு ஆயிடுச்சு மிஸ்பண்ணிடாதீங்க..!