டிடி ஸ்போர்ட்ஸ் இப்போது டிடி ஸ்போர்ட்ஸ் எச்டியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொது ஒளிபரப்பாளரான பிரசார் பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ் எச்டி அலைவரிசையுடன் சேனலுடன் தனது மேலும் ஒரு எச்டி சேனலைச் சேர்த்துள்ளது. டிடி ஸ்போர்ட்ஸ் எச்டி தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப முழு டிடி கட்டமைப்பையும் பொருத்தமானதாக மாற்றுவதற்கான மற்றொரு முக்கிய முடிவாகும்.
டிடி ஸ்போர்ட்ஸ் எச்டி இப்போது விளையாட்டு பிரியர்களின் விருப்பமான தேர்வாக மாறும். அவர்கள் முக்கிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் ஒளிபரப்பை எச்டி பார்க்க முடியும். எதிர்வரும் மாதங்களில் டிடி ஸ்போர்ட்ஸ் மிகவும் நிலையான மற்றும் வலுவான விளம்பரத் திட்டத்துடன் மேலும் புதிய நிகழ்ச்சியுடன் வரவுள்ளது.
கடந்த சில மாதங்களில் டிடி ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை வழங்குவதில் பல புதுமையான மற்றும் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் சர்வதேச கிரிக்கெட் தொடரில், தூர்தர்ஷன் கட்டமைப்பு தமிழ், கன்னடம், வங்காளம், தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழிகளுடன், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வர்ணனையை வழங்கியது. அலைவரிசையில் புதிய நிகழ்ச்சியை வழங்க என்.பி.ஏ, பி.ஜி.டி.ஏ போன்ற முன்னணி விளையாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
டிடி ஸ்போர்ட்ஸ் மார்ச் 18, 1998 அன்று தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. இது 1999 ஆம் ஆண்டில் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. ஜூன் 1, 2000 முதல், டிடி ஸ்போர்ட்ஸ் 24 மணி நேரமும் இயங்கும் செயற்கைக்கோள் அலைவரிசையாக மாறியது. இப்போது டிடி ஸ்போர்ட்ஸ் எச்டியைத் தொடங்குவதற்கான முடிவின் மூலம், இந்த அலைவரிசை சேனல் முக்கிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கேலோ இந்தியா விளையாட்டுகள், குளிர்கால விளையாட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகளும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும்.
டிடி ஸ்போர்ட்ஸ் தற்போது 079 என்ற எண்ணில் டிடி ஃப்ரீ டிஷ்-இல் காணலாம். இது விரைவில் மற்ற தளங்களிலும் கிடைக்கும்.