அம்ரித் உதயன் எனப்படும் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) மாளிகையின் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு ஆகஸ்ட் 16 முதல் ஒரு மாதத்திற்குத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் 16, 2023 முதல் உத்யன் உத்சவத்தின் இரண்டாது கட்டமாக உத்யன் உத்சவ்-2 எனப்படும் பொதுமக்களுக்கான அனுமதியின் கீழ் ஒரு மாதத்திற்கு (திங்கள் தவிர) அம்ரித் உத்யன் எனப்படும் குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டம் பொதுமக்களுக்காக திறக்கப்படும். செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு மட்டும் அன்று பிரத்யேகமாக அனுமதி வழங்கப்படும்.
பார்வையாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தோட்டங்களைப் பார்வையிடலாம். வடக்கு அவென்யூவுக்கு அருகிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கேட் எண் 35-ல் நுழைவு இருக்கும்.
ஆகஸ்ட் 7, 2023 முதல் குடியரசுத் தலைவர் மாளிகை இணையதளத்தில் ( https://visit.rashtrapatibhavan.gov.in/ ) முன்பதிவு செய்யலாம். நேரடியாக வரும் பார்வையாளர்கள் கேட் எண் 35 க்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சுய சேவை மையங்களில் இருந்து அனுமதிச் சீட்டைப் பெறலாம். அம்ரித் உத்யன் எனப்படும் குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டத்தைப் பார்வையிட அனுமதி இலவசம்.
இந்த ஆண்டு ஜனவரி 29 முதல் மார்ச் 31 வரை உத்யான் உத்சவ் -1 –ல் அம்ரித் உத்யன் திறக்கப்பட்டது. அப்போது 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இத்தோட்டத்தைப் பார்வையிட்டனர்.