சேலத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பெரியார் பல்கலைக்கழகத்தில் படிக்க, பல்வேறு முதுநிலை, பட்டயம் மற்றும் சான்றிதல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவற்றில் 32 வகையான முதுநிலை படிப்புகளுக்கு நுழைவு தேர்வு மூலமாகவும், மற்ற 5 வகையான முதுநிலை படிப்புகளுக்கு மற்றும் பட்டய, சான்றிதழ் படிப்புகளுக்கு நேரடியாகவும் சேர்க்கை நடைபெற உள்ளது.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலையின் www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் லாகின் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணமும் ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும். நுழைவு தேர்வு தேதி இமெயில்/SMS மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.05.2023 ஆகும். (முழு விபரத்திறகு https://www.periyaruniversity.ac.in/ பார்க்கவும்)