ஐஐடி மெட்ராஸ், உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான தொழில்நுட்ப உந்துதல் திட்டங்களை வெளியிட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸின் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics – CESSA), தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளைப் பயன்படுத்தி உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் விதத்தில் அவை அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி அடிமட்டத்தில் விளையாட்டுகளை மேலும் வளர்ப்பதற்காக ஃபிளாக் சீட் மற்றும் செஸ் பயிற்சித் திட்டங்களுக்கான தீர்வுகளை கூட்டமைப்புகளுக்கு வழங்க உள்ளன.
ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தில்லியில் ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த ‘விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் மாநாட்டின்’ இரண்டாவது நாளான இன்று (13 ஜூலை 2024) இந்த அறிவிப்புகளை இக்கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விளையாட்டுக் கல்வியில் இக்கல்வி நிறுவனத்தின் பொறுப்புணர்வை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் உரையாற்றிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “செஸ் மிகவும் சுவாரஸ்யமான- சிந்தனையைத் தூண்டும் விளையாட்டாகும், இதில் பல முறை பொருத்துதல் உள்ளிட்ட உத்திகள் உள்ளன. உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை செஸ் வீரர்களுக்கு பயிற்சியின் போது பல காட்சிகள் மற்றும் சிறந்த விளையாட்டுத் திட்டங்களைக் கணக்கிட்டு உதவக்கூடிய மிக முக்கியமான பங்கை வகிக்க முடியும். செஸ் விளையாட்டில் உலகளவில் பாரதத்தை வல்லமை படைத்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் இத்தகைய தளங்களை உருவாக்க மிகவும் ஆர்வமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தனது விளையாட்டுக் கல்வி முயற்சியின் ஓர் அங்கமாக இந்தியாவில் உள்ள விளையாட்டு மதிப்புச் சங்கிலியில் பல்வேறு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திறன்களை மேம்படுத்துவதற்கான படிப்புகளை வழங்கவும், குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள், உடற்கல்வி பயிற்றுனர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பகுப்பாளர்கள், உடலியல் நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், நடுவர்கள், விளையாட்டுகளை நடத்துவோர், நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். இதன் ஒரு பகுதியாக வரும் மாதங்களில் என்பிடெல் மூலம் ஐந்து புதிய விளையாட்டுப் படிப்புகளைத் தொடங்க ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா திட்டமிட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸின் விளையாட்டுக் கல்விக்கான எதிர்காலத் திட்டம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்), மற்றும் ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸாவின் தலைவர் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளை ஐஐடி மெட்ராஸ் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. விளையாட்டுக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி, செஸ் விளையாட்டுக்கான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை செஸ் கூட்டமைப்புகளுக்கு வழங்குகிறது. விளையாட்டுக் கல்வியை மேம்படுத்துதல், விளையாட்டு சுற்றுச்சூழலின் அனைத்து மட்டங்களிலும் திறமைகளை வளர்த்தல், செஸ் உலகில் இந்தியாவின் இடத்தை மேலும் உயர்த்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் எங்களின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
விளையாட்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஏஐ/எம்எல், டேட்டா சயின்ஸ் சான்றிதழ் படிப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐஐடிஎம் எதிர்காலத்தில் இளங்கலை விளையாட்டு அறிவியல் பாடத்தையும், விளையாட்டு மேலாண்மையில் அறிவியல் பாடத்தையும், விளையாட்டு மேலாண்மையில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
ஐஐடிஎம் செஸ்ஸா தொடங்கவிருக்கும் விளையாட்டு தொடர்பான அனைத்து படிப்புகளும் வலுவான தொழில்துறை தொடர்புகள், விளையாட்டு அறிவியல், விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் ஐஐடிஎம் செஸ்ஸாவின் பல்வேறு முன்முயற்சிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். இவற்றில் சில குறிப்பிட்ட படிப்புகள் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் இணைந்து உருவாக்கப்படும். இப்படிப்புகளில் ஒரு பகுதியாக ஊடகத் தளங்கள் குறித்தும், தொழில் ஊக்குவிப்பு, பல்வேறு விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்வார்கள்.
செஸ் விளையாட்டை மேலும் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் இருந்து செஸ் (உள்ளடக்கம், பயிற்சி) ஒரு கட்டாய டிஜிட்டல் இலக்கை உருவாக்க ஐஐடிஎம் செஸ்ஸா திட்டமிட்டுள்ளது.
மோசடி எதிர்ப்பு நடவடிக்கைக்கு உதவும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கி, ஆன்லைன் சதுரங்கத்தை மேலும் கட்டாயப்படுத்துவதற்கும் ரசிகர்களின் ஈடுபாட்டை மேலும் அதிகரிப்பதற்கும் பல்வேறு கருவிகளை உருவாக்குவதன் மூலம் செஸ் விளையாட்டானது நியாயமானதாக இருப்பதை உறுதிசெய்ய தனித்துவமான தொழில்நுட்ப சலுகைகளை செஸ்ஸா உருவாக்கும்.
இதர முன்முயற்சிகள் வருமாறு:
* பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் செஸ் விளையாட்டை அடிமட்ட அளவில் பிரபலப்படுத்துதல்
* சுற்றுச்சூழலில் உள்ள அனைவருக்கும் நிதி நன்மைகளை உறுதி செய்வதற்காக இந்தக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் செஸ் வீரர்களை ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள்
‘தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் ஆதரிக்கப்படும் இந்தியாவில் வளரும் இதர விளையாட்டுகள்’ என்ற தலைப்பில் தொழில்துறை தலைவர்களின் உயர் ஆற்றல்மிக்க குழு விவாதங்களும் இந்த மாநாட்டில், இடம்பெற்றன.
பல்வேறு புதுமையான பரிந்துரைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன. விளையாட்டுக் கூட்டமைப்புகள், தொழில்நுட்ப வீரர்கள், ஊடகத் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை விளையாட்டுகளை மிகவும் புதுமையானதாகவும் ஈடுபாட்டுடனும் மாற்றுவதற்கான வழிமுறைகளாகும்.