அதென்ன ஒவ்வொன்றாக படிப்போம் பாஸ்:
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவது வழக்கம். விலை திருத்தம், புதிய விதிமுறைகள் புதிய சட்டம் போன்றவை மாதம் தொடக்கத்தில் அமலுக்கு வரும். அவ்வகையில், இன்று (மே 1) முதல் மே மாதம் தொடங்கியுள்ள நிலையில், புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இன்று முதல் வர்த்தக சிலிண்டர் விலை 171.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை 2021 ரூபாயாக குறைந்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஏடிஎம்களில் பணம் எடுக்க முயற்சிக்கும்போது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் பரிவர்த்தனை தோல்வி அடைந்துவிட்டால், வாடிக்கையாளர்களிடம் 10 ரூபாய் அபராதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) தெரிவித்துள்ளது. இந்த அபராத கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இ-வாலட் (e-wallet) வழியாக மியூச்சுவல் ஃபண்ட்களில் (Mutual funds) முதலீடு செய்வோர் கட்டாயமாக KYC முடித்திருக்க வேண்டும். அப்படி KYC முடிக்காதவர்களால் இனி இ-வாலட் வழியாக முதலீடு செய்ய முடியாது.
100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் விற்றுமுதல் (turnover) பெறும் தொழில்கள் மே 1ஆம் தேதி முதல் Invoice Registration Portal இணையதளத்தில் மின்னணு விலைப்பட்டியலை (electronic invoice) பதிவேற்றம் செய்ய வேண்டும்.