”நிலஅளவை செய்வதற்கான உரிமம்” பெறுவதற்குரிய 3 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. B.E., (Geo – Informatics), M.Sc., (Geography), M.Sc., (Earth Remote Sensing and Geo – Information Technology) Diploma in Civil Engineering, National Trade Certificate in the Trade of Surveyor, Certificate in Army Trade Surveyor ஆகியோர் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.E. (Civil Engineering, B.E., (Geo – Informatics), M.Sc., (Geography), M.Sc., (Earth Remote Sensing and Geo – Information Technology) Diploma in Civil Engineering ஆகிய கல்வித் தகுதிகளில் ஒன்றினை பயின்றவர்களிடமிருந்தும், National Trade Certificate in the Trade of Surveyor awarded by the National Council for Vocational Training (For Surveyor) அல்லது Certificate in Army Trade Surveyor (Field) issued by the Madras Engineering Group சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்தும், ”நிலஅளவை செய்வதற்கான உரிமம்” பெறுவதற்குரிய 3 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களையும், விண்ணப்பப் படிவத்தையும் “https://tnlandsurvey.tn.gov.in”
இனணயதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.08.2024
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயிற்சி காலம் : மூன்று மாதங்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு நில அளவைப் பயிற்சி நிலையத்தில் அதிகபட்சமாக 10 நபர்களுக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் நில அளவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகபட்சமாக 50 நபர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். 3 மாதங்கள் வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு நில அளவை செயவ்தற்கான உரிமம் வழங்கப்படும்.
விண்ணப்ப பரிசீலனைக் கட்டணம் ரூ.500.
பயிற்சிக் கட்டணம் : ரூ.30,000
பயிற்சியின் போது உறைவிடம், உண்டி (உணவு), பயணக்கட்டணங்களை சம்பந்தப்பட்ட பயிற்சியாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். நில அளவையர் குறித்த அறிவிக்கை, கல்வித்தகுதி, பயிற்சி ஆகியவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும் இங்கே Application for Licentiate Course on License for Land Surveying -2024 கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு அரசில், ‘நில அளவையர் ’ என்ற பணியிடம் ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்படும் போது, இந்த படிப்பு முடித்தவர்கள், சர்வேயர் – நில அளவையர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மெட்ரோ ரயில், எல் & டி போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளும் தேடி வரும். சர்வேயர் பற்றாக்குறை நிலவுவதால், அங்கீகரிக்கப்பட்ட சர்வேயர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளில் சர்வேயர் வேலைக்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, சர்வேயர் பயிற்சியில் சேர்ந்து பயன் அடையுங்கள்.