’’யோகம் உண்டாக வேண்டும் என்றால் லக்னாதிபதி இரண்டு மற்றும் பதினொன்றாம் அதிபதிகள் பலம் பெற்று சரியான வயது காலங்களில் லக்ன யோகர்களின் திசை நடப்பில் வந்தால் நிச்சயம் இந்த யோகம் கைகூடும்’’ என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
மேலே சொன்ன அமைப்பில் ஏதேனும் ஒரு கிரகம் கெட்டு போயிருந்தால் இந்த யோகம் வேலை செய்யாதா என்றால் நிச்சயம் வேலை செய்யும் அது எந்த கிரகம் என்பதை பொறுத்து அமையும்
உதாரணமாக இரண்டாம் அதிபதி கெட்டு போய் இருந்தால் இந்த யோகம் வேலை செய்யும் ஆனால் பெரும் பொருளை சேர்த்து வைக்க முடியாது அப்போது சம்பாதிக்கும் பணத்தை எப்படி சேமிப்பது என்றால் அடுத்தடுத்த கட்டகளில் பார்த்து முடிவு செய்ய வேண்டும் எப்படி எனில் மூன்றாம் அதிபதி வலுவோடு இருந்தால் காலி இடம் அல்லது நிலம் வாங்குவதன் மூலம் சேர்த்து வைக்கலாம் நான்காம் அதிபதி பலம் என்றால் விவசாய நிலங்கள் வீடு தோட்டம் வாகனம் போன்றவை வாங்குவதன் மூலம் சேர்த்து வைக்கலாம்
இப்படி ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக உள்ளதோ அதன் மூலம் சேர்த்து வைக்க வேண்டும்
சரி இப்போது 11 ம் அதிபதி கெட்டு போய் இருந்தால் பெரும் பண வரவு என்பது இருக்காது ஜாதகர் தன் குடும்ப சொத்துகள் மூலம் வரும் வருவாயை வைத்து தன் வாழ்வை நடத்தி கொண்டு இருப்பார் எப்போதுமே இதே நிலைதானா என்றால் அப்படியும் சொல்லிவிட முடியாது காரணம் நடக்கும் தசா புக்தி அமைப்புகளை வைத்து லாபம் கிடைக்கும் வழிகளும் இருக்கும் ஆனால் பெரிய அளவிலான லாபம் இருக்காது அவ்வளவு தான்
இதில் மிக முக்கியமான விஷயம் என்பது மற்ற இருவரும் வலுத்து லக்னாதிபதி கெட்டு போய் இருந்தால் சொத்து இருக்கும் தன லாபம் கிடைக்கும் ஆனால் அதை அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும்
மற்ற லக்னங்கள் கூட பரவாயில்லை கும்பம் மற்றும் சிம்மம் இந்த இரு லக்னகளில் பிறந்த ஜாதகர்கள் குரு மற்றும் புதன் நீச்சம் எனில் கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளும்
உதாரணமாக சிம்ம லக்னம் புதன் மீனத்தில் நீச்சம் எந்த வகையிலும் நீச்ச பங்கம் கிடையாது எனில் குடும்ப சொத்தும் இல்லாமல் பெரும் வருவாயும் இல்லாமல் துன்ப பட வேண்டும் அதோடு புதன் திசை நடப்பில் வந்தால் நிலமை இன்னும் மோசமாகும் இதே தான் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு
ஒருவேளை இந்த 2 11 ம் அதிபதிகள் மறைவு ஸ்தானம் என்னும் 3 6 8 12 ல் இருந்தால் என்ன செய்வது என்றால் அது ஒன்றும் அவ்வளவு பிரசனைக்கு உண்டான அமைப்பு அல்ல எந்த இடத்தில் மறைந்து உள்ளாரோ அதற்கு ஏறறாற்போல் தொழிலை அமைத்து கொண்டால் சரி
3 எனில் வெளியூர் அடிக்கடி பயணம் செய்யும் வேலை 6 எனில் சேவை செய்யும் தொழில் 8 எனில் பங்கு வர்த்தகம் காப்பீட்டு துறை சார்ந்த வேலை 12 எனில் பிற தேச வேலை அல்லது தொழில் போன்று
எனவே முயற்சி என்பது தீர்க்கமாக இருந்தால் போதும் ஜாதக அமைப்பு தசா புக்தி அமைப்புகளை வைத்து எப்படி சொத்து சேர்க்கை இருக்க வேண்டும் என்பதை எளிதாக முடிவு செய்து விடலாம்.